ilakkiyainfo

ilakkiyainfo

அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் மகாஜனா மங்கை அனித்தா!!

அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் மகாஜனா மங்கை அனித்தா!!
September 30
19:05 2016

யாழ். துரையப்பா விளை யாட்டரங்கில் நடைபெற்றுவரும் 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனித்தா கோலூன்றிப் பாய்தலிலும் மேற்கு மாகாணத்தைச் செர்ந்த தாரிக்கா குமுதுமாலி பெர்னாண்டோ குண்டு எறிதலிலும் புதிய தேசிய தேசிய சாதனைகளை நிலைநாட்டினர்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.41 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் அனித்தா புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

  19623anitha  அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் மகாஜனா மங்கை அனித்தா!! 19623anitha1

இவர் ஒரு மாத இடைவெளியில் தேசிய சாதனைகளைப் புதுப்பித்தமை விசேட அம்சமாகும்.

anitha  அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் மகாஜனா மங்கை அனித்தா!! anitha1

ஒரு மாதத்திற்கு முன்னர் சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 3.35 உயரம் தாவி கோலூன்றிப் பாய்தலுக்கான 3.34 மீற்றர் என்ற முன்னைய சாதனையை முறியடித்திருந்தார்.

எனினும் இந்த சாதனையை ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற இராணுவ உள்ளக மெய்வல்லுநர் போட்டியில் ஹசித்தா டில்ருக்ஷி 3.40 மீற்றர் உயரம் தாவி முறியடித்திருந்தார்.

இப்போது தேசிய விளையாட்டு விழாவில் அனித்தா 3.41 மீற்றர் உயரம் தாவி மீண்டும் தேசிய சாதனையை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டார்.

இப் போட்டியில் வட மத்திய மாகாணத்தின் ஹசித்தா டில்ருக்ஷி 3.10 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப்பதக்கத்தையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பளை, மத்திய கல்லூரியைச் சேர்ந்த யோகநாதன் சுகிர்தா 3.10 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த தாரிக்கா குமுதுமாலி பெர்னாண்டோ 15.25 தூரம் குண்டை எறிந்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

சீமான் கூறுவதில் தவறில்லையே. வேறு மாநிலத்தில் ஒரு தமிழன் அரசியல் எய்ய முடியுமா? நடிப்பவர்கள் எல்லாம் ஆட்சி செய்ய முடியாது. [...]

Your comment..nice movie [...]

இவங்களை ஸ்ரீலங்கா ஜெயிலுக்கு அனுப்பி லாடங் கட்டவேண்டும் ஐரோப்பாவில் வெளியில் இருப்பதைவிட ஜெயிலில் சொகுசு வாழ்க்கை. [...]

சொந்த மக்களுக்கு கக்குஸ் கட்டி கொடுக்க துப்பில்லை. சிறிலங்காவுக்கு ஹோஸ்பிடல் கட்டி கொடுத்து இருக்கிறான் காவி மோடி. [...]

This Vickneswaran was a judge and in true a big criminal , he had raped [...]

இலங்கை பத்திரிகைகள்

English News