அஜித் – நயன்தாரா ஜோடி சேர்ந்தது எப்படி?

‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடி யார் என்பது குறித்து குழப்பம் நீடித்தது.
இந்த நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்ஜோடி நயன்தாரா என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் அஜித் ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா இதன் மூலம் இயக்குனர் சிவா போலவே 4-வது முறையாக அஜித் படத்தில் இணைந்துள்ளார்.
தற்போது, நயன்தாரா படங்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எனவே, அஜித்துடன் அவர் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களிடம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.ஆகவே, நயன்தாராவை நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டினார்கள். அதற்காக, தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஏற்கனவே, அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
எனவே அவர் தயக்கம் காட்டினார். என்றாலும், நல்ல கதையம்சம் கொண்ட அஜித் படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
நயன்தாரா சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment