ilakkiyainfo

ilakkiyainfo

அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யாவின் பரிதாப நிலை!

அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யாவின் பரிதாப நிலை!
January 06
12:30 2018

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மூட்டுப் பகுதியில் ஏற்பட்டக் காயத்தால் நடக்க முடியாமல் தவித்து வருகிறார்.

 அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.

இலங்கை அணி கடந்த 1996-ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை ஜெயசூர்யா குவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கெதிராகக் கொழும்புவில் குவித்த 340 ரன்களும் அடங்கும்.

கடந்த 1997-ல் நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 537 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக விளையாடிய இலங்கை அணி, ஜெயசூர்யாவின் முச்சதத்தின் உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 952 ரன்கள் என்ற சாதனை ஸ்கோரை எட்டியது.

Jayasurya_16566 அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யாவின் பரிதாப நிலை! அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யாவின் பரிதாப நிலை! Jayasurya 16566
ஓய்வுக்குப் பின்னர் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை அவர் வகித்து வந்தார். இலங்கைக் கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவராகவும் ஜெயசூர்யா பதவி வகித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற காலத்திலேயே அடிக்கடி காயங்களால் அவதியுற்று வந்த ஜெயசூர்யாவுக்கு தற்போது கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஊன்றுகோல் உதவியால் ஜெயசூர்யா நடந்து வருகிறார். ஊன்றுகோலுடன் அவர் நடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அவர் விரைவில் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News