ilakkiyainfo

ilakkiyainfo

அந்தப் ‘பசி’ எடுக்கலையே…! (சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் – பகுதி-5)

அந்தப் ‘பசி’ எடுக்கலையே…! (சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் – பகுதி-5)
October 23
03:15 2016

 படுக்கையறை விஷயங்களில் ஈடுபாடு காட்டுவதைப் பசி என்றே சொல்கிறார்கள். வயிற்றுப்பசியைப்போல் இது உடல் பசி.

விடலைப் பருவத்தில் ஹார்மோன்கள் துவங்கிவைக்கிற இந்த விளையாட்டு , மனிதன் முடிந்துபோகும்வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஹார்மோன் சுரப்பு இருந்தாலும் , குறைந்தாலும் ஆசை மட்டும் குறைவதில்லை.

அப்படியிருந்தும், படுக்கையறை விஷயங்களில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமலும் , ஈடுபாட்டுடன் நடந்துகொண்டாலும் முழுமையான   அளவு திருப்தியடையாமலும் , பாலுறவில்  ஈடுபட முடியாத அளவுக்கு  விறைப்புத்தன்மை குறைந்த நிலையிலும், சில சமயம் விறைப்புத்தன்மையே இல்லாமலும் போய்விடுவோரின் எண்ணிக்கை மிக அதிகம்.

நடுத்தர வயதைத் தாண்டிய பல்லாயிரக்கணக்கானவர்கள், மேற்கூறிய ஏதேனும் ஒரு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்தப் பாதிப்புகள் பெரும்பாலும் சர்க்கரை நோயல் வருகின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடையே இல்லாமல் போனது தான் பலருடைய செக்ஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இந்த வியாதியால் உருவாக்கப்படும் முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று , பாலுறவு வேட்கை குறைதல்.

இதைப் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப்போகிறோம்.

பாலுறவு வேட்கை குறைதல்

பாலுறவு கொள்ளும் செயலில் ஆர்வமில்லாத நிலைதான் பாலுறவு வேட்கை குறைதல் என்பது.  அவ்வப்போதோ அல்லது எப்போதாவது  ஒருமுறையோகூட பாலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்போவது அல்லது குறைந்துபோவதுதான் பாலுறவு வேட்கைக் குறைதல். ஆசையில்லாமல் பாலுறவுகொள்ள இயலாது.

தாங்கள் விரும்பியபோது பாலுறவுகொள்ளத் திறனற்றவர்களாகிவிட்டோம் என்று தாழ்வு மனப்பான்மை அடைகிறார்களே தவிர , இந்த ஆசை ஏன் இல்லாமல் போகிறது என்பதைப் பற்றி பலரும் யோசிப்பதில்லை. இந்த நிலையை பாலுறவுத் திறன் குறைதல் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பாலுறவுத் திறன் குறைவு நேரிடும்போது தம்பதியருக்கிடையே பிரச்னைகள் அதிகமாகத் தலைதூக்குகின்றன.

இரண்டு பேருமே அன்றாடமோ, வாரத்துக்கு ஒருநாளோ அல்லது மாதத்துக்கு ஒருநாளோ பாலுறவு கொள்ள விரும்பினால் பிரச்னையில்லை.

ஒருவர் அன்றாடம் பாலுறவு கொள்ள விரும்பி , இன்னொருவருக்கு அந்த எண்ணம் இல்லாமல் போகும்போது கண்டிப்பாகப் பிரச்னை வரும்.

பாலுறவு வேட்கை என்பது உடல் ரீதியான பசி. நடத்தையினால் தூண்டப்படுவது, எண்ணங்களின் தாக்கத்தால் விளைவது, கவர்ச்சிகளால் கவரப்பட்டு எழுவது.

உணவுக்கான பசி என்பது வேறு வகை. எனக்குப் பசியில்லை என ஒருவர் சென்றுவிட்டால் அதனால் பாதிப்பு பெரிதாக இருக்காது. பசிக்கும்போது சாப்பிடுவார் என விட்டுவிடுவார்கள்.

ஆனால் , செக்ஸ் விஷயத்தில் அப்படியில்லை.

ஒருவருக்கு நல்ல ‘மூட’ வந்து , இன்னொருவர், ‘எனக்கு மூடு இல்லை , உன்னை எனக்குப் பிடிக்கவில்லை, நான் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பவில்லை’ என ஏதாவது ஒன்றைச் சொல்லி நிராகரித்துவிட்டால் , உணர்ச்சிவசப்பட்டவர் நொந்துபோவார்.

பிறகு அவர்களின் உறவு முறையில் விரிசல் ஏற்பட்டு , எதற்கெடுத்தாலும் டென்ஷன் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

venus-1  அந்தப் ‘பசி’ எடுக்கலையே...! (சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் – பகுதி-5) venus 1பாலுறவு வேட்கை யார் யாருக்குக் குறையும்?

ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவருக்குப் பாலுறவு வேட்கை குறையத்தான் செய்யும்.

ஒரு நபர் மன இறுக்கத்தில் இருந்தாலோ , நோய் வாய்ப்பட்டிருந்தாலோ அவரது பாலுறவுத் திறன் குன்றியிருக்கும்.

பாலுறவின் மூலம் திருப்தியடைந்த உடனே மறுமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளவும், கர்ப்பக் காலத்தின்போதும் பெண்கள் தங்களுடைய பாலுறவு வேட்கையை இழக்கிறார்கள்.

சிலருக்கு மாதவிலக்கு நேரத்தில் பாலுறவு வேட்கை அதிகரிப்பதுபோல், சிலருக்கு முற்றிலும் அந்த வேட்கை மறைந்துவிடும்.

சில மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகள்கூட பாலுறவு வேட்கையைக் குறைத்துவிடும்.

அதிகக் கவலை , அதிக மன இறுக்கம் போன்ற சூழல்களில் ஆசை மறைந்துவிடுகிறது.

வயது மற்றும் நாள்பட்ட நோய்கள் மற்றும் உடல்ரீதியான இயலாமை ஆகியவற்றாலும் பாலுறவு வேட்கை குறைந்து விடுகிறது.

பாலுறவில் நாட்டம் – ஆசை குறைந்தவர்கள், ‘ இன்னைக்கு வேண்டாம்பா… ஒரே தலைவலியா இருக்கு.. ’ என்பதுபோல் கூறித் தவிர்ப்பார்கள்.

பாலுறவு வேட்கை குறைந்த ஆண்களில் சுமார் 45 சதவீதத்தினர் தங்களுக்கு ஒற்றைத் தலைவலி இருப்பதாகக் கூறி பாலுறவுகொள்வதைத் தவிர்க்கின்றனர்.

இவ்வாறே பெண்களுக்கும் பாலுறவு வேட்கை குறைகிறது.

சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரையில், நாள்பட்ட நிலையில் அதிகக் களைப்பு, மயக்கம், படபடப்பு போன்றவை தொடர்ந்துகொண்டிருப்பதால் அவர்களால் பாலுறவில் நாட்டம் செலுத்த முடிவதில்லை.

பாலுறவின்போது தானாக சிறுநீர் கசிவது அவர்களின் நாட்டம் குறைய இன்னொரு காரணமாக இருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேல், ரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லாததாலும், சீராக இல்லாததாலும் அவர்களின் மூளை சரியாக ரசாயனக் கடத்திகளுக்குக் கட்டளையிடாது.

தவிர, பாலுறுப்புகளும் விரைந்து செயல்படாது.

உண்மையான இந்தப் பாதிப்பைப் புரிந்துகொள்ளாமல் அவருக்கு என் மீது அக்கறையில்லை என்றோ, வேறு விதமான காரணங்களையோ கற்பித்துக்கொண்டால் குடும்பத்தில் தொடர்ந்து குழப்பம் உண்டாக ஆரம்பிக்கும்.

அவ்வப்போது பாலுறவு வேட்கையை காதல் எனப் புரிந்து கொண்டுவிடுகிறோம்.

உண்மையில் காதலும் , பாலுறவு வேட்கையும் ஒன்றல்ல. உடல் கவர்ச்சி , பாலுறவுக்கான ரசாயன மாற்றங்கள் , உடல் வேட்கை ஆகியவை மன உணர்ச்சி உண்டாக்கும் காதலைவிட வித்தியாசமான கிளர்ச்சிகளை உண்டாக்குகிறது.

இந்த இரண்டும்  ஒரே விகிதத்தில் இருப்பவர்கள் அதிகமான செக்ஸ் இன்பத்தை காதலுடன் அனுபவிக்க இயலும்.

இல்லாதவர்களுக்குப் பிரச்னைதான்.

எல்லாமே சரியாக இருக்கிறது என்றாலும் ஆசைதான் அனுபவிக்கத் தூண்டும். அதனால்தான் கிளர்ச்சியும் எழும். கிளர்ச்சியின் உச்சநிலைதான் உச்சக்கட்டம் எனப்படுகிறது.

பாலுறவுகொள்பவர்கள் உச்ச இன்பத்தை அடைவதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்தொருமித்த காதலுடன் சேரும்போது இது கைகூடும். இல்லாத பட்சத்தில் ஒருவருக்கு விரைவில் துவண்டும் ,இன்னொருவருக்கு காலதாமதாகக் கிளர்ச்சி எழுந்து, பாலுறவு வேட்கையை எரிச்சல்மிக்கதாக மாற்றிவிடும்.

பாலுறவுகொள்ள வேண்டுமென்றால் முதலில் ஆசை இருக்க வேண்டும். ஆசையை அடுத்து கிளர்ச்சி அடைய வேண்டும்.

கிளர்ச்சி அடைந்த பிறகுதான் உச்சக்கட்டம் வரும். இந்த ஒவ்வொரு கட்டமும் தனித்தனியாகத்தான் எழுகின்றன.

ஆசை இருக்கும், கிளர்ச்சி இருக்கும். ஆனால் உச்சக்கட்டம் இருக்காது என்றால் பாலுறவு கசந்துவிடும்.

இது பெரும் பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது. வயதான ஆண்கள் ஆசைப்படுவார்கள். கிளர்ச்சியடைய முடியாது.

ஆனால், தளர்ந்த  ஆணுறுப்பை அசைத்து சுய இன்பம் செய்து உச்சக்கட்ட இன்பத்தை அடைவார்கள்.

இதெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒருவித பிரச்னையை உண்டுபண்ணக்கூடியவை.

நீரிழிவு நோயின்போது உடலில் தோன்றும் மாற்றங்கள் , ரத்த நாளச் சிதைவுகள் போன்றவை இந்தக் குறைபாடுகளை மிகைப்படுத்தி பாலுறவு வேட்கையைக் குறைத்துவிடு கின்றன.

29-1364552025-sexvidhya6cy-600  அந்தப் ‘பசி’ எடுக்கலையே...! (சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் – பகுதி-5) 29 1364552025 sexvidhya6cy 600வயதும் பாலுணர்வும்
நம் நாட்டைப் பொறுத்தவரை நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் தங்களுக்கு மாதவிலக்கு முற்றுப்பெற ஆரம்பித்த உடனேயே பாலுறவு வாழ்வும் ஒரு முடிவுக்கு வந்து விடுவதாகவே நினைத்துக்கொள்கிறார்கள்.

இது ஒரு தவறான எண்ணம். உண்மையில் நடுத்தர வயதைக் கடந்த பெண்கள் பாலுறவில் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் , அவர்களது துணைவர்கள்தான் வயது மூப்பின் காரணமாக பாலுறவுத் திறன் குன்றி காணப்படுகிறார்கள். ஆனால் , அவர்களின் உணர்வு குறைவது இல்லை.

சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி திருமணமான ஆண்களில் ஐம்பது வயதுக்குள் உள்ளவர்களில் 98 சதவீதம் பேர் பாலியல் செயல்களில் நாட்டம் உள்ளவர்கள்.

இந்த எண்ணிக்கை அறுபது வயதுகளில் 91 சதவீதமாகவும் , 70 வயதுகளில் 79 சதவீதமாகவும் படிப்படியாகக் குறைகிறது.

பாலுறவில் தீவிரமாக ஈடுபடுவோரின் எண்ணிக்கை 50 வயதுகளில் 90 சதவீதம் ; அறுபது வயதுகளில் 86 சதவீதம் ; எழுபது வயதுகளில் 75 சதவீதம்.

பெண்களை எடுத்துக்கொண்டால் இது குறைவு. 50 வயதுகளில் 93 சதவீதம் பேரும் , 60 வயதுகளில் 81 சதவீதம் பேரும் , 70 வயதில் 79 சதவீதம் பேரும் பாலுறவு நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் , பாலுறவுச் செயல்களில் 50 வயதுகளில் 71 சதவீதம் பெண்களும் , 60 வயதுகளில் 65 சதவீதம் பெண்களும் , 70 வயதுகளில் 61 சதவீதம் பெண்களும் ஈடுபடுகிறார்கள்.

எழுபது வயது நபர்களில் 59 சதவீதம் பேர்தான் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பாலுறவுகொள்கிறார்கள்.

குடும்பச் சூழல் , தனிமை கிடைக்காத நிலை போன்ற வற்றால் பாலுறவுகொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் போவ தால் பலர் சுய இன்பத்தை நாடுகிறார்கள்.

பலருக்கு விறைப் பின்மை ஏற்படுவதால் பாலுறவைத் தவிர்க்கிறார்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள்.

50 – 59 வயதுகளில் சுமார் 65 சதவீதம் பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்.

60 – 69 வயதில் 50 சதவீதம் பேர் , 70+ வயதில் சுமார் 45 சதவீதம் பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்.

50 – 59 வயதில் சுமார் 25 சதவீதம் பேருக் கும் , 60 – 69 வயதுகளில் சுமார் 22 சதவீதம் பேருக்கும் , 70+ ல் 18 சதவீதம் பேருக்கும் தூக்கத்தில் விந்து வெளிப் படுகிறது.

பாலுறவில் புதுமை இல்லாமை , சலிப்பு , பாலுறவுக்கான சூழல் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக ஆண்களுக்கு பல மாதங்கள் வரைகூட ஆண்மையின்மை ஏற்படுகிறது.

மனைவி பாலுறவுச் செயல்களில் இருந்து விலகிக்கொள்வ தாலும்கூட ஆண்மையின்மை ஏற்படுகிறது.

பெண்களின் வயதும் , பாலுறவும்

50 – 59 வயதுவாக்கில் பெண்களின் பாலுறவுச் செயல்கள் மற்றும் பாலுணர்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டாகின்றன.

இந்த வயதில் சுமார் பத்து சதவீத ஆண்கள் மட்டுமே பாலுறவில் நாட்டமில்லை என்பார்கள். ஆனால் , பெண்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் மேலானவர் கள் நாட்டமிழந்துவிடுகிறார்கள்.

காரணம் , அவர்களின் பெண்மை ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் குறைந்துவிடுவது.

இதனால் பிறப்புறுப்பில் வறட்சி, வலி , நோய்த் தொற்றுகள் , விரிந்துகொடுக்காத நிலை போன்ற பல்வேறு தொல்லைகள் ஏற்படுகின்றன.

இவை தவிர , உளவியல் காரணிகள் , குடும்பச் சூழல்கள் போன்றவையும் அவர்களின் பாலுறவு வேட்கையைப் பாதித்துவிடுகின்றன.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஆண் – பெண் இரு வருமே பல்வேறு நரம்பு மற்றும் உடல்சார்ந்த பிற பிரச்னை களாலும் , மன இறுக்கம் போன்றவற்றாலும் பாதிக்கப் படுவதால் அவர்களுக்குப் பாலுறவு என்பது முற்றிலும் அச்சம் தரக்கூடியதாக மாறிவிடுகிறது.

நாளடைவில் பாலுறவின் மீதிருந்த நாட்டமும் குறைய ஆரம்பிக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களை ஆய்வு செய்ததில் பாலுறவுத் திறன் குறைந்திருத்தல் மற்றும் உச்சக்கட்டம் அடைய முடியாத நிலையை அடைதல் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.

இது மெதுவாக வளர்ச்சி அடையக்கூடிய நோய் என்பதால் ரத்த நாளங்களையும் , சிரை நாளங்களையும் மெதுவாகச் சிதைத்து நரம்பு மண்டலப் பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.

இதனால் ஆணுக்கு ஏற்படும் பாலுறவுக் குறைகளைப் போன்றே பெண்ணுக்கும் ஏற்படுகிறது என்றாலும் , இவை சர்க்கரை நோயின் வகையைப் பொறுத்து மாறுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக , இதுவரை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பெண்களில் டைப் – 2 வகை சர்க்கரை நோயாளிகளைவிட டைப் – 1 வகையைச் சார்ந்த பெண்களே அதிகம்.

பொதுவாக , கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் , பெண்களின் பாலுறவுத் திறனை உறிஞ்சிக்கொள்வதால் பாலுறவு வேட்கை குறைந்துபோகும் நிலை உண்டாகிறது.

குறிப்பாக , சர்க்கரை நோயுள்ள பெண்களுக்கு புணர்புழையில் நோய்த்தொற்று, இதய நோய் போன்று மற்ற நோய்களுக்காக எடுத்துக்கொண்ட மருந்து மாத்திரைகளின்  பக்கவிளைவுகள் , கருத்தரித்துவிடுவோம்  என்ற அச்ச உணர்வு , நோயின் தீவிரம் போன்ற பல்வேறு காரணிகள் பாலுறவுக் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.

டைப் – 1 வகையைச் சேர்ந்த பெண்களைக் காட்டிலும் இரண்டாம் வகையைச் சேர்ந்த பெண்கள் சிலவகைப் பாலுறவுக் குறைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பாலுறவு வேட்கை குறைந்த நிலை , பாலுறவில் திருப்தி அடையாமை , புணர்புழை விரிந்து கொடுக்காததால் பாலுறவின்போது வலி , எரிச்சல் , காயம் போன்றவை ஏற் படும் என்ற அச்சம் , குறைந்த உச்சக்கட்டமே தோன்றுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

இரண்டாம் வகை யைச் சேர்ந்தவர்களே சர்க்கரைப் பாதிப்பால் அதிகமாக நரம்பு மண்டலக் குறைகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனத்தளவிலும் இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ள பெண்கள் ,

தங்கள் உடல்நிலை மற்ற பெண்களைக் காட்டிலும் பாலுறவு கொள்ளத் தகுதியிழந்துவிட்டதாக நினைத்துப் பாதிக்கப்படுகிறார்கள்.

09-1365503403-sexsasesham-13599590330-600  அந்தப் ‘பசி’ எடுக்கலையே...! (சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் – பகுதி-5) 09 1365503403 sexsasesham 13599590330 6001பாலுறவு வேட்கையை அதிகரிக்கும் வழிகள்

பாலுறவு வேட்கை குறைவுக்கு , மனம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக வந்ததா ?  உடல் சார்ந்த பிரச்னைகளால் வந்ததா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனம் சார்ந்த பிரச்னைகளால் வரும்போது அதைத் தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்.

தற்போதைய ஆய்வுகளின்படி சுமார் அறுபது சதவீதப் பெண்கள் எந்தவிதமான பாலுறவுக் குறைகளையும் தெரியப்படுத்தவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஒருவேளை பாலுறவுக் குறைகள்  இருந்தாலும் மனைவியிடம் கணவன் மனம் விட்டு தனது குறைகளைப் பற்றிப் பேசுதல் , கணவனின் குறைகளைக் களைய மனைவி  ஒத்துழைப்புக் கொடுத்தல், அழிந்து – அடங்கி – முடங்கிக் கிடக்கும் ஆசையைத் தூண்டுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உறவு முறைகளைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும்.

பாலுறவு வேட்கையைக் குறைக்கும் கோபம் , குற்ற உணர்ச்சி , தாழ்வு மனப்பான்மை போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு , தனது இணையுடன் முழுமையான மதுடன் உறவுக்கு முன்வர வேண்டும்.

உறவு முறை சரியாக மாற்றப்பட்டுவிட்டால் பாலுறவு வேட்கை குறைகிற பிரச்னையும் சரியாகிவிடும்.

டெஸ்டோஸ்டீரான் என்ற பாலின ஊக்கி ஹார்மோன்களின் குறைபாட்டினாலும் பாலுறவு வேட்கை குறைந்துவிடும்.

இதை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொண்டாலும் பாலுறவில் வேட்கை வந்துவிடும்.

சர்க்கரை நோய் , நரம்புகளை முடக்கிவிடுவதால் இயல்பு நிலையிலேயே பாலுறவு எழுச்சிக் குறைபாடுகள் வருவதால், இந்த வியாதியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மறந்துவிடக் கூடாது.

மற்ற மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள், பாலுறவு வேட்கை இயல் பாகவே குறைந்து போயிருத்தல், உணவு முறை மாற்றத்தால் பாலுறவு வேட்கை குறைந்திருத்தல் என எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் அதை முதலில் அனுபவம் வாய்ந்த பாலியல் நிபுணரிடம் கலந்தாலோசித்து , பரி சோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும்.

தொடரும்….

-டாக்டர் டி காமராஜ்-

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் – (பகுதி-4)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News