ilakkiyainfo

ilakkiyainfo

அந்த 12 நொடி… 144 திருமண மோதிரங்கள்… டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்!

அந்த 12 நொடி… 144 திருமண மோதிரங்கள்… டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்!
September 14
15:33 2018

9/11 தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டது.

கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா.

இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8 மில்லியன் டன்களாகக் கணக்கிடப்பட்டது.

 

செப்டம்பர் 11, 2001. இரட்டைக் கோபுரம், நியூயார்க் நகரம். நேரம், காலை 8:30.

காலை உணவருந்திக்கொண்டிருந்தவர்கள், நேற்றைய வேலையை இன்னமும் செய்துகொண்டிருந்தவர்கள், நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர்கள், மேலதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தவர்கள் என எப்போதும் போல இயங்கிக்கொண்டிருந்தது இரட்டைக் கோபுரக் கட்டடம்.

அடுத்த கால் மணி நேரத்தில் பயங்கரச் சத்தம். இரட்டைக் கோபுரத்தின் ஒரு பகுதியில் விமானம் ஒன்று மோதியது. மற்றொரு பகுதியில் இருந்தவர்கள் கட்டடத்தை விட்டு வெளியேற அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

உயிர் பிழைத்தால் போதும் என்று சிலர் மாடியிலிருந்து குதித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மற்றுமொரு விமானம் வந்து மோதியதில் மொத்தக் கட்டடமும் தரைமட்டமானது. 9/11 தாக்குதல் நடைபெற்று இன்றோடு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.

twin_tower_15335_13535  அந்த 12 நொடி… 144 திருமண மோதிரங்கள்… டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்! twin tower 15335 13535

9/11 தாக்குதலால் உருவான தூசு எவ்வளவு தூரம் பரவிச் சென்றது என்பதை விளக்கும் நாசா புகைப்படம்

அமெரிக்காவிலுள்ள, இரட்டைக் கோபுரக் கட்டடம்தான் உலக வர்த்தக மையமாகச் செயல்பட்டது.

இங்கு 50,000 பேர் பணிபுரிகிறார்கள். தினமும் சுமார் 1.4 லட்சம் பேர் இங்கு வந்து செல்வார்கள்.

எவரும் எதிர்பாராத நேரத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்ற அதே தருணத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் தாக்கப்பட்டது.

அமெரிக்காவின் வரலாற்றில் இது மிகப்பெரிய சோகமாக பதிவானது. தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள் விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

ஆனால், அதில் எந்த ஒரு தகவலும் பதிவாகவில்லை. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டன.

கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா.

இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8 மில்லியன் டன்களாக கணக்கிடப்பட்டது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற 3 மாதங்கள் கழித்து, அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஓசாமா பின்லேடன்,

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டது அமெரிக்கா. மே 2, 2011 அன்று ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றது அமெரிக்க ராணுவம்.

ஆகஸ்ட் 16, 2016 ம் ஆண்டு உலக வர்த்தக மையம் புதுப்பொலிவுடன் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதலில், சேதமடைந்த சுரங்க ரயில் நிலையம் ஒன்று, 17 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 9 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

world-trade-center-memorial-271355_960_720_18129  அந்த 12 நொடி… 144 திருமண மோதிரங்கள்… டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்! world trade center memorial 271355 960 720 18129

9/11 தக்குதலில் சுமார் 3,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் 17 கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர். உயிரிழந்தவர்களில் 1,111 பேர் இதுவரை யாரென்றே அடையாளம் காணப்படவில்லை.

உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காகவே நியூயார்க் நகரில் தனியாக ஒரு பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 89 வது தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஸ்காட் மைக்கேல் ஜான்சன் என்ற நிதி ஆய்வாளர் கடந்த ஜூலை மாதம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டார்.

17,000 பேரின் DNA சாம்பிள்களைக் கொண்டு இந்தப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 9/11 தாக்குதலுக்காகக் கடத்தப்பட்ட ஃப்ளைட் 93 ல் பயணம் செய்து உயிரிழந்த 40 பயணிகளின் நினைவாக, 93 அடிகள் மற்றும் 40 மணிகள் கொண்ட டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

காற்று அடிக்கும்போது அந்த மணிகளிலிருந்து எழுப்பப்படும் ஓசை மக்களுக்கு மனவலிமையைக் கொடுக்கும் என்று நம்புகிறது அமெரிக்க அரசு.

இந்த டவருக்கு `Tower Of Voices’ என்று பெயரிட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் Tower Of Voices நினைவகத்தில் இன்று நடைபெறும் நினைவுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

மிகப் பெரிய தாக்குதலான, 9/11 தாக்குதல் மக்கள் மனதில் ஆழமாகப் பதியவேண்டும் என்பதற்காக இந்த நாளை `தேசப் பற்று தினம்’ ஆக கொண்டாடுகிறது அமெரிக்கா.

9/11 தாக்குதல் நினைவலைகள்…

Untitled_18211  அந்த 12 நொடி… 144 திருமண மோதிரங்கள்… டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்! Untitled 18211

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it ? has [...]

இலங்கை பத்திரிகைகள்

English News