அனகொண்டா வாயில் சிக்கி, கடுமையாகப் போராட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை.-(வீடியோ)

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மவுண்ட் இசா பகுதியில் அமைந்துள்ள மூன்தாரா ஏரியிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள ஏரியில் ஏராளமான நன்னீர் முதலைகள் வசித்து வருகின்றன. அந்த ஏரியில் அனகொண்டா வகை பாம்புகள் இருப்பது மிகவும் அரிதானது.
என்றபோதிலும், அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படும் ஆலிவ் அனகொண்டா மலைப்பாம்புகள் அங்கு காணப்படுகின்றன.
ஆலிவ் மலைப்பாம்புகள் ஏறக்குறைய 13 அடிவரை வளரக்கூடியவை. இவ் வகை பாம்புகள் பறவைகள், மீன்கள், சிறிய விலங்கினங்களை முழுமையாக விழுங்கும் தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன.
இருந்தும் இப் பாம்பானது மிகப் பெரிய முதலையை முழுமையாக விழுங்கியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்த புகைப்படவியலாளரான மார்ட்டின் முல்லர் குறிப்பிடுகையில், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த முதலை, அனகோண்டாவிடம் கடுமையாகப் போராடியும், அனகொண்டாவின் பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை எனவும், முடிவில் அனகொண்டாவின் வாய்க்குள் முதலை இரையானதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மிகப்பெரிய முதலையை பாம்பு மெல்ல, மெல்ல தனது உடலை இரப்பர் போல விரித்து, தனது தாடையை விரித்து விழுங்கும் காட்சியை மார்டின் வீடியோவாக பதிவு செய்ததுடன, புகைப்படமாகவும் எடுத்துள்ளார்.
ஏறக்குறைய 5 மணிநேரம், அந்த முதலையை முழுவதுமாக பாம்பு விழுங்கியதாகவும், அங்கிருந்து தனது உடலை அசைக்க முடியாமல் மெதுவாக நகர்ந்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment