ilakkiyainfo

ilakkiyainfo

ஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு விளையாடிய அனந்தி சசிதரன்!! : (அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆதாரத்துடன்!!)

ஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு  விளையாடிய அனந்தி சசிதரன்!! : (அதிர்ச்சி தரும்  சம்பவங்கள் ஆதாரத்துடன்!!)
August 18
23:53 2017

• அனந்தியின் ‘எடுபிடி’ ஒருவனால்  ஏமாற்றி  சீரழிப்பட்டு  சிறையில் தள்ளப்பட்டு, கைவிடப்பட்ட  அபலைப்பெண்  ஒருவரின் சோகக்கதை….

• காதலித்த  குற்றத்திற்காக  ‘‘விபச்சாரி’‘ பட்டம்  சூட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை.

• வெளியில் வந்தால்  அனந்தி தரப்பினரால்  பாதுகாப்பில்லை  எனபதற்காக  மீண்டும்  சிறையிலேயே  இருக்க விரும்பிய பரிதாபம்.

•  வடமாகாணத்தில்  வாழும்  அபலைபெண்களின் இன்றைய நிலை என்ன?

வடமாகாணத்தில்  வாழும் அபலைப்பெண்களுக்கு பாதுகாப்பளிப்பது யார்??  அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களை  பாதுகாத்து  பராமரிக்ககூடிய  ஓழுங்கமைப்புகள்    எதாவது  வடமாகாண  சபையால்  இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளதா??  (கதிரை பங்கீட்டு பிரச்சனையே  இன்னும்  முடியவில்லை. இதெல்லாம்  ஒரு பிரச்சனையா??)

டித்தவர்கள் நிறைந்திருக்கும்  யாழ்பாணத்தில்  பெண்களின்  இன்றைய நிலை எவ்வாறு உள்ளது??

அபலைப்பெண்கள் பல்வேறு  தரப்பினர்களால் சீரழிக்கப்பட்டு, விபச்சாரி பட்டம்கொடுத்து வீதியில் கைவிடப்படும்  மிகவும்  படுமோசமான ஒரு  நிலமை  யாழில்  உருவாகியுள்ளது.

அரசியல்வாதிகள், காவல்துறையினர்கள்,  அதிகாரிகள், சாதாரண  அலுவலகங்களில்  வேலைசெய்யும் ஊழியர்கள், அரசியல் வாதிகளிடம்  வேலைசெய்யும்  எடுபிடிகள்வரை  முதல்கொண்டு,  ஆதரவில்லாத பெண்களை  ஏமாற்றி தங்கள் வலையில்  வீழ்த்தி  அனுபவித்துவிட்டு  முடிவில் கைவிட்டுவிடுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட  பெண்கள்  யாரிடம்  பாதுகாக்க தேடிபோவது?? நீதியை எவ்வாறுபெற்றுக்கொள்வது?? எவ்வாறு  வாழ்க்கையை கொண்டுசெலுத்துவது??  யாரிடம் போய்  உதவிகேட்பது   என்பது  தெரியாமல்  எல்லாரிடமும்  கையேந்தும்  நிலைதோன்றியுள்ளது.

அந்தவகையில்..  

வடமாகண  அமைச்சரான  அனந்தி  சசிதரனுக்கு   எடுபிடியாக வேலை செய்யும் குட்டி  (தெய்வேந்திரம் விஜித்) என்பவன் துஷானா எனும் பெயருடைய  ஒரு பெண்ணை ஏமாற்றி கல்யாணம்  முடித்து  குடும்பம்  நடத்திவிட்டு  நடுத்தெருவில்  கைவிட்டுள்ளார்.

துஷானா என்பவர் முதலில் பகீரதன் என்பவரை காதலித்ததாகவும், பின்பு குட்டி என்பவர் பகீரதனை பற்றி தவறாகபேசி, அவர்கள் இருவரையும் பிரித்து   துஷானா வை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துள்ளார்.

அப்பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்திவிட்டு, பொருட்களையும் வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளார்.

kaditham ஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு  விளையாடிய அனந்தி சசிதரன்!! : (அதிர்ச்சி தரும்  சம்பவங்கள் ஆதாரத்துடன்!!) ஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு  விளையாடிய அனந்தி சசிதரன்!! : (அதிர்ச்சி தரும்  சம்பவங்கள் ஆதாரத்துடன்!!) kaditham

குட்டி என்பவர்  இந்தப்பெண்ணை கல்யாணம் முடித்ததற்கான  ஆதாரமாக  கடிதம் ஒன்றும் கையில் வைத்துள்ளார்.

தாய், தகப்பன் இல்லாத  அந்த  அபலைப்பெண்  சொல்லும்  சோகக்கதையை கீழே உள்ள ஒலிநாடாவில் முதலில் கேட்டுப்பாருங்கள்….

இந்த குட்டி என்பவர் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக தெரியவருகிறது.

குட்டி இப்பெண்ணை கல்யாணம் முடித்ததுவிட்டு ஏமாற்றியது மற்றும்  பலபெண்களை காதலித்து ஏமாற்றுவது போன்ற விடயங்கள் அனந்தி சசிதரன் அறிந்தே வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக குட்டி என்பவருக்கு எதிராக மகளிர்விவகார  அமைசர் அனந்தி அவர்கள்  எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

அதேநேரம் இந்த விவிகாரத்தில்  மகளிர்விவகார  அமைசர் சசிதரனும், அவரது  சினேதிகளான   ரஜனி, வாணி, லலிதா..போன்றோரும்   குட்டி (தெய்வேந்திரம் விஜித்) என்பவருக்கு  ஆதரவாக செயல்படுவதாக  பாதிக்கப்பட்ட பெண்  அளித்த ஓடியோ வாக்கு  மூலத்தில்  அறியக்கூடியதாகவுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு  அளிக்கவேண்டிய  மகளிர்விவகார  அமைசர்  சசிதரனே  பாதிக்கப்பட்ட  ஒரு பெண்ணுக்கு  எதிராக  செயல்பட்டால்  எப்படி??  

யார் தான்  இந்த  அபலைபெண்ணுக்கு நீதி பெற்றுக்கொடுப்பது??

 

 WIN அமைப்பு என்பது:  இல்ல வன்­மு­றைகள் முத­லா­ன­வற்றால் பாதிப்­ப­டைந்­த­வர்­க­ளுக்கு ஏற்­படும்  மனச்­சோர்வு மன அழுத்தம் ஆகிய­வற்­றி­லி­ருந்து விடு­ப­டு­வற்கு உத­வு­வ­தற்­கான  தொழிற்சார் ரீதியில் பயிற்­றப்­பட்ட உள­வ­ளத்­து­ணை­யா­ளர்­க­ளையும்  சட்ட ஆலோ­சனை சட்ட உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான சட்­டத்­த­ர­ணி­க­ளையும் கொண்ட தேவை நாடும் மகளிர் – ‘வின்’  (Women In Need – WIN) அமைப்பாகும்.

யாழில் இயங்கும் இந்த   WIN அமைப்பில் அனந்தி சசிதரனின்  தோழிகளின் கட்டுபாட்டில்தான் இயங்குவதாக அறியமுடிகிறது. அவர்கள் யார் யார்? அவர்களின் செயல்பாடுகள் என்னவென்பதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்போம்.

தொடரும்…

தகவல்: யாழில் இருந்து தர்சினி
(பாதிக்கபட்ட   பெண்களுக்கு சட்ட  உதவி செய்பவர் மற்றும் சமூகசேவையாளர்)

kuttias ஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு  விளையாடிய அனந்தி சசிதரன்!! : (அதிர்ச்சி தரும்  சம்பவங்கள் ஆதாரத்துடன்!!) ஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு  விளையாடிய அனந்தி சசிதரன்!! : (அதிர்ச்சி தரும்  சம்பவங்கள் ஆதாரத்துடன்!!) kuttiasகுட்டி (தெய்வேந்திரம் விஜித்)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News