ilakkiyainfo

ilakkiyainfo

அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்!! – ஐயம்பிள்ளை (கட்டுரை)

அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்!! – ஐயம்பிள்ளை (கட்டுரை)
January 02
02:12 2018

மீண்டும் மத்­திய கிழக்கின் பூதா­க­ர­மான மிக நீண்ட வர­லாற்றை உடைய இஸ்ரேல் – பலஸ்­தீன விவ­காரம் சூடு பிடிக்கத் தொடங்­கி­யுள்­ளது.

இந்தச் நெருப்­பினை கொளுத்தி கொழுந்­து­விட்டு எரியச் செய்­தவர் வேறு யாரு­மல்ல, உலகின் மிகப் பலம் வாய்ந்த பத­வி­யான அமெ­ரிக்க ஜனா­தி­பதி பத­வியை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருக்கும் டொனால்ட் ட்ரம்ப் என்­பது எல்­லோரும் அறிந்த விட­ய­மாகும்.

வட கொரிய அதிபர் மின்­னாமல் முழங்­காமல் தமது அணு­குண்டு அபி­லா­ஷை­களை ஒன்­றன்பின் ஒன்­றாக வெடிக்க வைத்து சாதித்துக் கொண்­டி­ரு­க்கையில் டொனால்ட் ட்ரம்ப் மேற்­படி அறி­விப்பை விடுத்­தி­ருக்­கிறார்.

வடகொ­ரிய ஜனா­தி­ப­தியோ அமெ­ரிக்கா அழித்­து­விடும் என வெருட்­டல்­களை விடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறார்.

இந்­நி­லையில் அண்­மையில் கிழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் ஐந்து நாடு­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வியும் பலமும் சேர்க்கும் பேச்­சுக்­களில் ஈடு­பட்டார்.

அத்­துடன் அவரின் நிகழ்ச்சி நிரலில் நலி­வ­டையும் அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்தை தூக்கி நிமிர்த்­து­வ­தற்­கான அட்­ட­வ­ணையும் இருந்­தது.

வட கொரியா நீண்­ட­தூர ஏவு­க­ணைகள் மற்றும் அணு­ஆ­யு­தங்­களை விண்ணில் ஏவி தனது செயல்­களை உல­குக்கு காட்டிக் கொண்டு இருக்­கி­றது.

static.politico.com அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்!! - ஐயம்பிள்ளை (கட்டுரை) அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்!! - ஐயம்பிள்ளை (கட்டுரை) static

அமெ­ரிக்க அதி­ப­ரோ­ இ­து­பற்றி பல விட­யங்­க­ளையும் பேசிக்­கொண்டு இருக்­கிறார். உலக அர­சி­யலில் பேசு­வது என்­பது யுத்­தத்தில் ஈடுபடாமல் இரா­ஜ­தந்­திர நகர்­வு­களில் ஈடு­ப­டு­வதைக் குறிக்­கின்­றது.

ஆனால் ட்ரம்பைப் பொறுத்­த­மட்டில் அவர் இரா­ஜ­தந்­திர முறையில் பேச­வில்லை. பத­வி­யேற்ற நாளில் இருந்து இடக்கு முடக்­காக,ஒன்றுக்­கொன்று முர­ணாக பேசி ட்ரம்­பிசம் ((Trumpism) என்றால் வாய்க்கு வந்­த­படி பேசு­வது என்று உலக மக்­க­ளுக்கு தெளிவாக புரியும்படி பேசி வரு­கின்றார்.

ட்ரம்­பிசம் ஒரு போதும் கொரிய தீப­கற்­பத்தில் வெற்­றியை கொண்­டு­வ­ரப்­போ­வ­தில்லை.

((Trumpisim would not bring Triumphisum in Korea Peninsula) ஆனால் ட்ரம்பின் அண்­மைய அறி­விப்­பா­னது அதா­வது கிழக்கு ஜெரு­சலேம் இஸ்­ரேலின் பிரிக்க முடி­யாத தலை­ந­கரம் என்­பது முழு உல­கத்­தையும் திடுக்­கிட வைத்­துள்­ளது.

இப்­பி­ர­க­டனம் ஒரு­வ­கையில் வேறு வித­மான நெருப்பை கொளுத்தி சூட்டை உரு­வாக்­கி­யுள்­ள­தாகத் தான் தெரி­கின்­றது.

ஒரு பிர­ப­ல­மான ஆங்­கிலப் பத்­தி­ரிகை ட்ரம்பை அனு­ம­னாகச் சித்­தி­ரித்து வாயிலில் நெருப்பை கொளுத்தி உல­க­மெல்லாம் அனு­மா­ராக பறந்து திரி­வ­தாக காட்­டி­யுள்­ளது.

கார்ட்டூன் எனப்­படும் கருத்­துப்­படம் (கேலிப்­படம் அல்ல) ஒரு படத்தின் மூலம் வலி­மை­யான நீண்ட பல கருத்­துக்­களை எடுத்­தி­யம்­ப­வல்­லது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News