ilakkiyainfo

ilakkiyainfo

அனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8)

அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8)
November 16
06:56 2016

பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு  ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே முகம் கடுமையாக மாறிய தமிழ்ச்செல்வன் ..

“தமிழீழம் எப்படி எடுப்பது என்று எங்களுக்கு தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு போகலாம் என்றதும், தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் அத்தோடு தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்கள்.

eu_02 அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) eu 02

தமிழ் செல்வன் புலிகளின் பேச்சுவார்த்தை  குழுவுக்கு தலைமை தாங்கத் தொடங்கிய பின்னர் பேச்சுக்கள் மந்தமடையத் தொடங்கியிருந்தது.

பேச்சு வார்த்தை நிகழ்வுகளுக்கு   ஒப்புக்கு சப்பாணி என்கிறதைப்   போலவே எந்த ஆர்வமும் இல்லாமல் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் எப்படியாவது பேச்சுக்களை முறித்து மீண்டும் சண்டையை தொடங்காவிட்டால் புலிகள் அமைப்பு மேலும் பிளவுகளை சந்தித்து பலவீனம் அடைத்து விடும் என்று தலைமை நினைத்தது .

tamilselvannn அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) tamilselvannnஎல்லா நாடுகளிலும் நடந்த பேச்சு வார்த்தைகளின் போதும் உள்ளே என்ன விடயங்கள் பேசப்பட்டது.

என்ன முடிவுகள் எடுக்கப் பட்டது என்று எதுவுமே வெளியே சொல்லப் படவில்லை.

உள்ளே என்ன பேசினார்கள் என்றும் மக்களுக்கு தெரியாது.

ஒவ்வொரு பேச்சு வார்த்தை முடிவின் பின்னரும் இந்த சந்திப்பு எமக்கு பிரயோசனமாக இருந்தது.

நாங்கள் சமாதானத்தில்  உறுதியாக இருக்கின்றோம்  என்று பத்திரிகையாளர்களிடம் தமிழ் செல்வன் தெரிவிப்பார்.

அதே நாள் இரவு தமிழர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது எங்களிற்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை விரைவில் யுத்தம் தொடங்கும் அதுதான் இறுதியுத்தமாக இருக்கும்.

எனவே இறுதி யுத்தத்திற்கு பெருமளவான நிதியினை பங்களிப்பு செய்யவேண்டும் எனகேட்டுக்கொள்வார்.

வெள்ளைக் காரனிற்கு தமிழ் புரியாது என நினைத்து தமிழ்ச்செல்வன் பேசியிருக்கலாம்.  ஆனால் இதனை வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் உடனடியாகவே பதிவு செய்து மொழிபெயர்ப்பும் செய்து பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கும் நாடுகள் அனைத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தனர் .

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை  நீடித்துக்கொண்டிருக்கும்  போது புலிகள்  ஆயுதக் கொள்வனவுகளையும் தொடர்ந்துகொண்டேயிருந்தார்கள்.

kapalaa அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) kapalaaஅவர்கள்   கொள்வனவு   செய்த  ஆயுதங்களை   ஏற்றிக்கொண்டு  சென்ற   ஒன்பது கப்பல்கள்   இரண்டு   சரக்கு கப்பல்கள் என பதினோரு  கப்பல்கள்  தொடர்ச்சியாக  ஒன்றுவிடாது  இலங்கை   அரசால் தாக்கி   மூள்கடிக்கப் பட்டிருந்தது..

இதுவரை  காலமும்   உலக நாடுகளுக்கும்   இலங்கை   அரசுக்கும் கடலில் தண்ணி காட்டிவிட்டு விட்டு பத்திரமாக கனரக  ஆயுதங்களையும்  ஏவு கணைகளையும்  வன்னிக்கு கொண்டு போய் சேர்த்தவர்களுக்கு என்ன நடந்தது

..இப்போது ஒரு துப்பாக்கியைகூட கொண்டுபோய் சேர்க்க முடியாது அனைத்தும் அடிபட்டுப்போகும் மர்மம் என்ன ..எப்படி …எங்கே நடந்தது என பார்த்துவிடலாம் ..

2001 ஆண்டு புலிகள் அமைப்பு பெற்ற பெரு வெற்றியை அடுத்து வன்னி கிளிநொச்சியை தலைநகராக வைத்து நிழல் அரசொன்றை நிறுவியதோடு காவல்துறை, நீதிமன்றம், வாங்கி என சிவில் நிருவாகத் துறைகளை விரிவாக்கம் செய்தவேளை  அவர்களின்  பிரதான  கட்டமைப்புகளிலும்   மாற்றங்களை   கொண்டு   வந்தனர்.

அந்த மாற்றமானது இயக்கத்துக்குள் ஒவ்வொரு பிரிவும் அதன் பொறுப்பாளர்களால் தனிப் பெரும் சக்திகளாக உருப்பெறத் தொடங்கியிருந்தது.

அப்படி உருப்பெற்றவைகளுள் பொட்டம்மானின் புலனாய்வு பிரிவு.

தமிழேந்தியின் நிதிப்பிரிவு.

சூசையின் கடற்புலிகள்  அமைப்பு.

தமிழ்செல்வனின் அரசியல் பிரிவு.

கருணா கிழக்கு மாகாணத் தளபதி.

இவைகளோடு மிக மிக முக்கியமான, வானளாவிய அதிகாரங்களைக் கொண்ட , ஒருநாளில் மட்டும் பல மில்லியன் டாலர் பணம் புரளும் மிக பணக்கார அமைப்பான அனைத்துலகச் செயலகம் என்கிற அமைப்பும் ஆகும்.

இந்த அனைத்துலகச் செயலகத்தின் கீழ்தான் ஆயுத பேரங்கள், வாங்கிய ஆயுதங்களை பத்திரமாக வன்னிக்கு கொண்டுபோய்  சேர்த்தல், போதைப்பொருள் கடத்தல்கள்,  புலம்பெயர் தமிழர்களிடம் நிதி வசூலித்தல்,  உலகெங்கும் பினாமிப் பெயர்களின்  இயங்கும் வர்த்தக நிறுவனங்கள்,  கோவில்கள்,  தமிழ் பாடசாலைகள், என அனைத்துமே இதற்குள்  அடங்குவதால்தான்   அதற்கு   அனைத்துலகச்    செயலகம்   என்று  பெயர்.

இதற்கு லோரன்ஸ் திலகர் என்பவரே பொறுப்பாளராக பாரிஸ் நகரத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருந்தார்.

பாரிஸில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தங்கள் உறுப்பினர் இருவரை சுட்டுக்கொலை செய்திருந்தனர்.

அந்தக் கொலையில் ஏற்பட்ட சிறு சொதப்பலால் லோரன்ஸ் திலகர் வன்னிக்கு அழைக்கப் பட்டு அவரது பதவியைப் பறித்து  அவருக்கு  தண்டனையும்  தலைமையால்  கொடுக்கப்பட்டது.

அதற்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்தபடி ஆயுத பேரம் மற்றும் வழங்கல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கே.பி.

என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பொறுப்பில் அனைத்துலகச் செயலகம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.

kasroo அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) kasroo2001 ம் ஆண்டு நடந்த  நிருவாக   மாற்றங்களின்போது கே. பி யின் பொறுப்பிலிருந்த  அனைத்துலகச்   செயலகப் பொறுப்பு பறிக்கப்பட்டு காஸ்ட்ரோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டதோடு கே .பி யின் நிருவாகம் கலைக்கப்பட்டது.

அவரும் அவருக்கு கீழ் இயங்கியவர்களும்  இயக்கத்தை  விட்டு விலகி தங்கள் தனிப்பட்ட வாழ்கையில் ஈடுபடலாம் என தலைமை அறிவித்து விட்டிருந்தது.

இந்த மாற்றங்களுக்கான கரணம் என்னவெனில் வெளிநாடுகளில் வணிகம், கடத்தல்கள், மற்றும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிதி என்பனவற்றுக்கு சரியாக  கணக்கு காட்டாமல் ஆயுதங்களை வாங்கி அனுப்பி வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள்.

kfir-dreamland_resort21 அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) kfir dreamland resort21
இலங்கை வான்படையினரின் சக்திவாய்ந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஒலி வேக IAI Kfir ரக குண்டு வீச்சு விமானங்களை தாக்கியழிக்கும்  வல்லமை கொண்ட  grouse ரக ஏவுகணைகளை  கொள்வனவு செய்ய நீண்ட காலம் முயற்சி செய்தும் அதனை வாங்க முடியாது போனதும் ஒரு குற்றச் சாட்டாக வைக்கப் பட்டது .

alalam_635262700851901356_25f_4x3 அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) alalam 635262700851901356 25fgrouse missile
கே.பி கொம்பனியில் பெரும்பாலும் கப்பல் மாலுமிகள் அதன் பணியாளர்கள் எல்லாருமே புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல.

சம்பளத்திற்கு வேலை செய்த சாதாரணமானவர்களே.

அவர்களை இயக்க விதிகளால் கட்டுப்படுத்த முடியாது.

அதே நேரம் புலிகள் அமைப்பானது போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபடுவதாக சர்வதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவும் உலக நாடுகளும் தொடர்து குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால் கடத்தல் வலையமைப்பை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.

இத்தகைய குற்றச் சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கே .பி கொம்பனியை நிறுத்துவதாக தலைமை காரணம் சொல்லிக்கொண்டது .

புலிகள் அமைப்பானது தங்களுக்கு தாங்களே வைத்த முதலாவது ஆப்பு ராஜீவ் காந்தி கொலை என்று எடுத்துக்கொண்டால் அனைத்துலக செயலக கட்டமைப்பு மாற்றத்தை இரண்டாவது ஆப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.

kastro அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) kastroகாஸ்ட்ரோ

அனைத்துலக செயலகப் பொறுப்பு கொடுக்கப்பட்ட காஸ்ட்ரோ ஒரு சண்டையில் இரண்டு கால்களும் தொடைக்கு மேலே இழந்தவர்.

சிகிச்சைக்காக படகில் ஒரேயொரு தடவை தமிழ்நாட்டுக்கு சென்று வந்ததுதான் அவரது வெளிநாட்டுப்பயணம்.

மற்றும்படி உலக நாடுகளை வரை படத்தில் மட்டுமே பார்த்து அறிந்திருந்தது மட்டுமல்லாது பெரும்பாலும் படுக்கையிலேயே வாழ்நாளை கழித்துக்கொண்டு இருந்தவர்.

இருபத்து நான்கு மணி நேரத்தில் இருபது மணி நேரங்களாவது  விழித்திருந்து  ஓடியாடி  வேலைகள்  செய்யும்   மிகப் பொறுப்பான பதவியை எப்படி பிரபாகரன் அவரிடம் ஒப்படைத்தார் என்பது  இன்றுவரை விடைகிடைக்காத மில்லியன் சந்தேகக்களை அடக்கும் கேள்வி .

புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட காஸ்ட்ரோ தனது அமைப்புக்கும் புது இரத்தம் பாய்ச்சப் போவதாக சொல்லிக் கொண்டு   புலிகள் அமைப்பால் உயர் கல்வி கற்பதற்காக வெளி நாடுகளுக்கு அனுப்பப் பட்டிருந்த இளையோர் சிலரிடம் பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார்.

timthumb-php அனைத்துலகச்  செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) timthumbநெடியவன்

அப்படி அவர் நியமித்தவர்களில் அனைத்துலக செயலகத்தை வெளியில் இருந்து இயக்க நெடியவன் என்பவரை நோர்வே நாட்டுக்கும், அவருக்கு உதவியாக நிதி விடயங்களை கவனிக்க வாகீசன் என்பவரை  ஜெர்மனிக்கும் அனுப்பியவர்.

ஆயுத பேரங்கள் மற்றும் புலிகளின் வணிக கப்பல்களை கவனிக்க ஸ்டீபன் என்பவரை நியமிக்கிறார்.

இவர்களில் புதிதாக பொறுப்பெடுத்த ஸ்டீபன் உலகெங்கும் கள்ளச் சந்தைகளில் ஆயுத பேரங்களை நடத்துவதற்காக பல புதியவர்களை நியமித்தவர்.

வன்னிக்கு சென்று தலைவரிடம் நேரடியாக ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு வேலைகளை தொடங்க நினைத்து வன்னி சென்றவர் பிரபாகரனை சந்தித்து விட்டு அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தோனேசியா சென்றதும்,  இந்தோனேசிய விமான  நிலையத்தில்  தற்செயலாக  ஒரு அதிகாரி   சந்தேகத்தில்  ஸ்டீபனை  விசாரிக்கிறார்.

ஸ்டீபனின் பதில்களில் மேலும் சந்தேகம் வரவே அவர் கையோடு கொண்டு சென்ற இரண்டு மடிக்கணணி களையும் பரிசோதனை செய்யத் தொடங்கியவருக்கு தலை சுற்றத் தொடங்குகிறது.

நீண்ட காலமாகவே இந்தோனேசிய தீவுகள் புலிகளின் ஆயுதக்கடதல்களில் தளமாக இயங்கிவருவதோடு சில கப்பல்களும் அங்கு  பதிவு செய்யப் பட்டிருந்ததை அந்த நாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர்.

எனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அவரை தடுத்து வைத்தபடி சர்வதேசப் பொலிசாரின் உதவியை நாடியிருந்தனர்.

நீண்டகாலமாகவே புலிகள் அமைப்பின் கடத்தல் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்த அமெரிக்க சி ஐ ஏ  அதிகாரிகள் சிலர் இந்தக் கைது விபரம் அறிந்ததும் இந்தோனோசியாவிற்கு விரைந்தவர்கள் ஸ்டீபனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அவர் கொண்டு சென்ற மடிக்கணணினிகளை ஆராய்ந்த போது அதிச்சி கலந்த மகிழ்ச்சி அவர்களுக்கு….

தோண்டத்தோண்ட தகவல்களை அள்ளிக் கொடுக்கும் சுரங்கமாக  ஆயுத பேரங்கள், தேவையான ஆயுதங்களின் பட்டியல்கள், அதனுடன் தொடர்புடையவர்கள், பண கொடுக்கல் வாங்கல்கள், கப்பல்களின் விபரங்கள் என இந்தனை காலங்களாக அவர்கள் தேடியலைந்த அத்தனை விபரங்களும் அதில் அடங்கியிருந்தது.

ஆனாலும் பல விடயங்கள் சங்கேத மொழியில் எழுதப் பட்டிருந்ததால் தகவல்களை முழுமையாக பெற முடியாமல் இருக்கவே  என்ன செய்யலாமென யோசிதவர்கள்  புலிகள் அமைப்பில்  இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் யாராவது ஒருவரின் உதவியை பெறுவது என முடிவெடுத்தார்கள் .

உடனடியாக பல நாடுகளின் உதவியும் கோரப்பட்டபோது  புலிகளின் தொலைத்தொடர்பு பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிவிட்டு   தலைமையோடு முரண்பட்டு அங்கிருந்து வெளியேறி சுவிஸ் நாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரின் விபரம் கிடைக்கவே சுவிஸ் நாட்டு காவல்துறையின் உதவியோடு அவர் இந்தோனோசி யாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

அனைத்து சங்கேத மொழிகளும் மொழிபெயர்க்கப் பட்டது.

(-சாத்திரி-
தொடரும்….
-தொகுப்பு: கி.பாஸ்கரன்)

பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News