ilakkiyainfo

ilakkiyainfo

அன்று முஸ்லிம் தலைவர்கள் செய்த தவறை நாங்களும் செய்ய முடியாது – சிறிதரன்

அன்று முஸ்லிம் தலைவர்கள் செய்த தவறை நாங்களும் செய்ய முடியாது – சிறிதரன்
May 30
18:17 2019

மகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

மாறாக முஸ்லிம் தலைவர்களும், சில மக்களும் பள்ளிவாசல்களிலும், தென் பகுதிகளில் சில பிரதேசங்களிலும் பாற்சோறு வழங்கி சிங்கள மக்களுக்கும் இராணுவத்தை உற்சாகப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்கள். என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவராக இருந்த போது அவருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படட போது அப்போதிருந்த முஸ்லிம் அமைச்சர்களாவும் பாராளுமன்ற உறுப்பினர்களாவும் இருந்த ஏழு பேர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் விட்ட அதே தவறுகளை நாங்களும் விட்டால் தொடர்ந்தும் இந்த நாட்டில் இஸ்லாமிய தலைவர்களும், ஈழத்தமிழர்களும் ஒன்றாக பயணிக்க முடியாது, இணைந்த வடக்கு கிழக்கு என்ற சொற் பிரயோகத்தை நாம் பேசமுடியாது போய்விடும்.

எனவே கள யாதார்த்தை புரிந்துக் கொண்டு எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போன்றோ கொல்லி பிடுங்குவது போன்றோ நடந்து கொள்ளாது ஒரு சமூகம் பாதிக்காத வகையில் மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டியது நமது கடமை.

எனவே ரிசாட் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாம் தொடந்து ஆராய்ந்து வருகின்றோம் ஒவ்வாரு மாவட்டத்திலும் உள்ள கட்சி நிர்வாகிகளோடு, பேசியிருக்கிறோம், கட்சியின் மத்தியக் குழுவிலும், பாராளுமன்ற குழுவிலும் ஆராயவுள்ளோம். எனவே ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து அந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தாத வகையில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வோம்

ரிசாட் பதியூதின் தவறு செய்திருந்தால் அதற்கு நீதி மன்றங்கள் இருக்கிறது. அதனூடாக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு விலக்க முடியும் ஆனால் பாராளுமன்றத்தின் ஊடாக ஒரு அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லை.இரண்டாயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த ஒரு இனத்தை சிதைத்து விடும் வகையில் அது அமைந்துவிடக் கூடாது, எனத் தெரிவித்தார்

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News