ilakkiyainfo

அபு பக்கர் அல்-பாக்தாதி: கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவரின் அக்காவை கைது செய்தது துருக்கி

அபு பக்கர் அல்-பாக்தாதி: கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவரின் அக்காவை கைது செய்தது துருக்கி
November 05
16:45 2019

அண்மையில் கொல்லப்பட்ட இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் அக்காவை வடக்கு சிரியாவில் கைது செய்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

65 வயதான ராஸ்மியா அவாட் திங்கள்கிழமை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது அஸாஸ் நகருக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அபு பக்கர் அல்-பாக்தாதியின் அக்காவை கைது செய்திருப்பது, ஐ.எஸ். பற்றிய உளவுத் தகவல்களை வெளிக் கொண்டுவர வகை செய்யும் என்று துருக்கி அதிகாரிகள் கூறுவதாக சமூக ஊடகத் தளங்களில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் வடமேற்கு சிரியாவில் பாக்தாதி பதுங்கியிருந்த வளாகத்தில் அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகள் நடத்திய அதிரடி தாக்குதலின்போது, பாக்தாதி தான் தரித்திருந்த தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்து தன்னை அழித்து கொண்டார்.

_109531310_6e8e2f33-8d72-446d-9a97-4cbb7796c7a9  அபு பக்கர் அல்-பாக்தாதி: கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவரின் அக்காவை கைது செய்தது துருக்கி 109531310 6e8e2f33 8d72 446d 9a97 4cbb7796c7a9

பாக்தாதியின் இறப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றியென கூறிக்கொண்டாலும், சிரியாவிலும், பிற இடங்களிலும் ஐ.எஸ். இன்னும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே விளங்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பாக்தாதியின் அக்காவை கைது செய்திருப்பது ஐ.எஸ். அமைப்புக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் என்று துருக்கி அதிகாரி ஒருவர் ராய்ட்ர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

“இந்த கைது நடவடிக்கை எமது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையின் வெற்றிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு” என்று துருக்கியின் அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாக்தாதியின் அக்கா பற்றி அதிக தகவல்கள் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை சுயாதீன முறையில் பிபிசியால் உறுதிசெய்ய முடியவில்லை.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்