ilakkiyainfo

ilakkiyainfo

“அப்போ ஹீரோ… இப்போ, டீச்சர்!”- ‘அப்போ இப்போ’ கதை சொல்கிறார், மனோஜ் பாரதிராஜா

“அப்போ ஹீரோ… இப்போ, டீச்சர்!”- ‘அப்போ இப்போ’ கதை சொல்கிறார், மனோஜ் பாரதிராஜா
April 10
09:21 2018

“நான் பிறந்து ஒரு வயசு வரைக்கும்தான் எங்க ஊர் தேனியில இருந்தேன். அப்புறம் சென்னைக்கு வந்துட்டோம். நான் பிறந்த அடுத்தநாள் அப்பாவோட ’16 வயதினிலே’ பட ஷூட்டிங் ஆரம்பிச்சது.

எங்க பெரியப்பா, மாமான்னு எல்லாருக்கும் அடுத்தடுத்து வேலை செட்டாச்சு. நான் பிறந்தபிறகுதான் இதெல்லாம் நடந்ததுன்னு, எனக்கு நானே ‘லக்கி’னு ஃபீல் பண்ணிக்குவேன்.

மூணாவது வரைக்கும் சென்னையில படிச்சேன். நிறைய சேட்டை பண்றேன்னு அப்பா ஊட்டியில இருக்குற ஸ்கூல்ல சேர்த்துவிட்டார். ரெண்டு வருடம் அங்கே படிச்சு முடிச்சுட்டு, மறுபடியும் சென்னைக்கு வந்து படிச்சேன்” – பள்ளிக் காலத்திலிருந்தே தன் ஸ்டோரியை மனோஜ் பாரதிராஜா சொல்லத் தொடங்க, நானும் அவருடைய டைம் டிராவலில் ஐக்கியமானேன்.

“ப்ளஸ் ஒன் படிச்சுட்டு இருந்தப்பவே எனக்கு சினிமா ஆர்வம் அதிகம். டைரக்ட் பண்ணணும்ன்னு முடிவெடுத்துட்டு, ‘எனக்கு படிப்பு வரலை. எனக்கு படம் டைரக்ட் பண்ணணும்னுதான் ஆசையா இருக்கு.

இனிமே ஸ்கூலுக்குப் போகலை’னு வீட்ல பிடிவாதம் பிடிச்சு, அழுதேன். ஒரு வழியா அப்பா சரினு சொன்னார். அப்பாகூட அவரோட ‘கொடி பறக்குது’, ‘நாடோடித் தென்றல்’, ‘கிழக்குச்சீமையிலே’னு சில படங்கள்ல உதவி இயக்குநரா இருந்தேன்.

அப்பாவோ, ‘நீ என்கிட்ட இருந்தா, தொழில் கத்துக்க முடியாது. என்னதான் இருந்தாலும் அப்பா – மகன் உறவு அதைத் தடுக்கும்’னு சொல்லிட்டார்.

அதனால, மணிரத்னம் சார்கிட்ட வொர்க் பண்றேன்னு நான் சொல்ல, அப்பா அடுத்தநாளே மணி சாரைப் பார்க்க என்னைக் கூட்டிக்கிட்டுப் போனார்.

அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னார், ‘ஜாயின்ட் பண்ணிக்கோ’னு சொல்லிட்டார், மணி சார். ‘பம்பாய்’ படத்துல அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். எனக்கு சினிமாவைப் பத்தி முழுசா பிரிச்சுக்காட்டி சொல்லிக்கொடுத்தது, மணிரத்னம் சார்தான்.

89510_13468 "அப்போ ஹீரோ... இப்போ, டீச்சர்!"- 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், மனோஜ் பாரதிராஜா 89510 13468

கொஞ்ச நாள்கள்லயே அம்மா, அப்பாகிட்ட இருந்து ப்ரஷர். ஏன்னா, அப்பா என்கிட்ட ‘நான் நடிக்கணும்னுதான் சினிமாக்குள்ள வந்தேன். வேற வழியில்லாமல் டைரக்டர் ஆயிட்டேன்.

இது ரொம்பவே கஷ்டமான வேலை. நான் பட்ட கஷ்டத்தை நீ படக்கூடாது. நீ நடிக்கணும்’னு சொல்லியிருந்தார். நாலு மாசம் வீட்ல பிரளயமே வெடிச்சது.

நான் டைரக்டராதான் ஆவேன்னு, வீட்ல தர்ணா பண்ணியிருக்கேன். ஒரு கட்டத்துக்கு மேல, அப்பாவுக்காக நடிப்பைக் கத்துக்கலாம்னு ஃப்ளோரிடா போய், அங்கே ‘யூனிவர்சிட்டி ஆஃப் ஃப்ளோரிடா’வுல தியேட்டர் ஆர்ட்ஸ் படிச்சேன்.

ரெண்டு வருடம் படிச்சு முடிச்சுட்டு வந்தவுடனே, அப்பா டைரக்‌ஷன்ல ‘தாஜ்மஹால்’ படத்துல நடிச்சேன்!” என்று டைரக்‌ஷனில் இருந்து நடிப்புக்கு வந்த கதையைப் பகிர்ந்துகொண்டவர், தன் முதல் படமான ‘தாஜ்மஹால்’ பற்றி விரிவாகப் பேசுகிறார்.

“இந்தப் படத்தோட டைட்டில் ரைட்ஸ் டைரக்டர் கதிர் சார் வாங்கி வெச்சிருந்தார். அப்பா கேட்டதும், அதை விட்டுக்கொடுத்தார்.

எனக்காக, இந்தப் படத்துக்காக மணிரத்னம் சார், ராஜிவ் மேனன் சார்னு பெரிய லெஜண்ட்ஸ்களையெல்லாம் படத்துக்குள்ளே கொண்டுவந்தார், அப்பா.

அந்தப் படத்துல தண்ணிக்கு அடியில ரெண்டு பேரும் மீட் பண்ற மாதிரியான ஐடியாஸ் எல்லாம் மணி சார் சொன்னதுதான். என்னை நடிகன் ஆக்கணும்னு அப்பா குறிக்கோளா இருந்ததுனால, நான் நடிக்கிற முதல் படம் அப்டீங்கிறதால அப்பா கதையைவிட என்மேல அதிக கவனம் செலுத்தினார்.

இப்படி ஒரு ஓப்பனிங் யாருக்காவது கிடைக்குமானு தெரியலை. இதை நான் எனக்குக் கிடைச்ச கிஃப்ட்னுதான் சொல்லணும். அந்தப்பட ஹீரோயின் ரியா சென்னுக்கும் எனக்கும் ஷூட்டிங் ஸ்பாட்ல செட்டே ஆகாது.

அடிக்கடி சண்டை போட்டுப்போம். குழந்தைத்தனமா ஏதாவது பண்ணிட்டே இருப்பாங்க. ‘தாஜ்மஹால்’ பண்ணும்போது கேமரா முன்னாடி நின்னு டயலாக் பேசுறதே எனக்குப் பெரிய சவாலா இருந்துச்சு.

நடிக்கிறதுக்கு முன்னாடி, நான் ஒரு ஆல்பம்ல பாடியிருந்தேன். ரஹ்மான் சார், அதைக் கேட்டுட்டு, பாட  வாய்ப்பு கொடுத்தார். அதுதான், ‘ஏச்சி எலுமிச்சி..’ பாட்டு. ‘தாஜ்மஹால்’ ஷூட்டிங்ல நான் ரெண்டு தடவை உயிர் பிழைச்சேன். 30 அடி ஆழத்துல இறங்கி தண்ணியில இருந்து மேல வர்றமாதிரி, ஒரு சீன்.

உள்ளே போனவன்… உள்ள இருக்கிற புதர்ல கால் மாட்டிக்கவே, என்னால வெளியே வரமுடியலை. கேமராமேன் அதைக் கவனிச்சுட்டு, சுத்தி இருந்த உதவி இயக்குநர்கிட்ட சொல்லி என்னைக் காப்பாத்தினார்.

இன்னொரு சீன்ல குதிரையில ஏறமுடியாம, கீழே விழுந்துட்டேன். முதுகெலும்புல சரியான அடி. அந்தப் படத்துக்குப் பிறகு, ‘அல்லி அர்ஜுனா’ படத்துலதான் கமிட் ஆனேன்.

ஆனா, ‘சமுத்திரம்’ படம் முதல்ல ரிலீஸாகிடுச்சு. ‘சமுத்திரம்’ படத்துல நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் சாரே என்னைக் கேட்டார். அவ்ளோ சந்தோஷம் எனக்கு… உடனே ஓகே சொல்லிட்டேன்.

அந்தப் படத்துல சரத் சாரும் முரளி சாரும் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. முரளி சார்தான் டயலாக் டெலிவரி, மாடுலேஷன்னு நிறைய விஷயங்கள்ல உதவியா இருந்தார்.

சீனியரா இருந்தாலும், ஒரு பையன் புதுசா உள்ளே வர்றான்னு என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். அந்தப் படத்துல இருந்துதான் கவுண்டமணி அண்ணணும் நானும் க்ளோஸாக ஆரம்பிச்சோம்.

அந்தப் படத்துல ஸ்பாட்ல  அவர் அடிச்ச காமெடிகள் எல்லாம் செம ஹிட். ஷூட்டிங் ஸ்பாட்லேயும் சைலைன்டா எல்லாரையும் கலாய்ச்சிடுவார்.

ஹாலிவுட் படங்களைப் பற்றிய விஷயங்களையெல்லாம் விரல் நுனியில வெச்சிருப்பார். எனக்கும் அவருக்குமான வேவ் லெங்த் அதுதான்.

அதேமாதிரி மணிவண்ணன் சார் என்னைத் தூக்கி வளர்த்தவர். அப்பப்போ என்னை ஸ்கூல்ல கொண்டுவந்து விடுறது மணிவண்ணன் சார், மனோபாலா சார், இளவரசு சார்… இவங்க மூணு பேரும்தான்.

ஒருமுறை நான் வேடிக்கை பார்த்துட்டு, ‘அது ஏன் இப்படி இருக்கு, இது ஏன் அப்படி இருக்கு’னு கேள்வி கேட்டுக்கிட்டே இருந்திருக்கேன். என் டார்ச்சர் தாங்கமுடியாம தலையில கொட்டிட்டாராம் மணிவண்ணன் சார். நான் அழுததும், ‘டேய் தம்பி, அப்பாக்கிட்ட சொல்லிடாதே’னு சொன்னாராம்.

இதையெல்லாம் நான் நடிக்க வந்தபிறகு, என்கிட்ட சொல்லி சிரிச்சுக்கிட்டு இருந்தார், மணிவண்ணன் சார்.

246345_13217 "அப்போ ஹீரோ... இப்போ, டீச்சர்!"- 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், மனோஜ் பாரதிராஜா 246345 13217

‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்துல ‘இந்தக் கேரக்டருக்கு நீதான் வேணும்’னு சொல்லி, ரவிசங்கர் சார் நடிக்க வெச்சார். செளத்ரி சாருக்கும் ரவிசங்கர் சாருக்கும்தான் நன்றி சொல்லணும்.

உண்மையிலேயே இந்தப் படத்துல என்ஜாய் பண்ணி நடிச்சேன். எனக்கு என் கரியர்லேயே பிடிச்ச படம் இதுதான். அப்பா டைரக்‌ஷன்ல ‘ஈரநிலம்’ படத்துல சுஹாசினி மேடம்கூட நடிக்கும்போது, மணி சார் மனைவிங்கிறதுனால எனக்கு அவங்கமேல ஒருவித பயம் இருக்கும்.

அதையெல்லாம் க்ளியர் பண்ணி எனக்கான ஸ்பேஸ் கொடுத்து நடிக்க வெச்சாங்க. அப்படியே சினிமா வாழ்க்கை போயிட்டு இருக்கும்போதுதான், நந்தனாவை மீட் பண்னேன்.

எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தது, அதுவே காலப்போக்குல காதலா மாறிடுச்சு. இந்த விஷயம் என் ஃப்ரெண்டு மூலமா அப்பாவுக்குத் தெரிஞ்சிடுச்சு.

அவர், ‘பொண்ணு பார்க்கப் போலாம். அங்கே போய் பிடிக்கலைனு சொல்லிட்டு வந்திடலாம்’னு ப்ளான் பண்ணி பெரியவங்க எல்லாம் சேர்ந்து போனாங்க.

அங்கே போய் அவளைப் பார்த்தவுடனேயே எல்லோரும் ஆஃப் ஆகிட்டாங்க. அவங்க வீட்ல எல்லோருமே நல்லாப் படிச்சவங்க. இதைவிட அவனுக்கு நல்ல பொண்ணு கிடைக்காதுன்னு எங்க பெரியப்பா சொல்ல, அதற்குப் பிறகுதான் எங்க அப்பா போய் பொண்ணைப் பார்த்திட்டு ‘என் பையன் தங்கமான பையன்.

உன்னை நல்லாப் பார்த்துக்குவான். நீ எங்க வீட்ல சந்தோஷமா இருக்கலாம்’னு சொல்லிட்டு வந்துட்டார். அப்புறம் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் நடக்க ஆரம்பிச்சுது; கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது.” என்று கல்யாணக் கதையை உதட்டோரப் புன்னகையோடு உதிக்கிறார், மனோஜ்.

IMG_0731_13077 "அப்போ ஹீரோ... இப்போ, டீச்சர்!"- 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், மனோஜ் பாரதிராஜா IMG 0731 13077

“கல்யாணத்துப் பிறகு சினிமாவுல கொஞ்சம் பெரிய கேப். பிறகு, ‘அன்னக்கொடி’ படத்துல அசோஸியேட் டைரக்டரா வொர்க் பண்னேன். அப்போ, ‘இப்படி ஒரு கேரக்டர் இருக்கு. என்ன பண்ணலாம்னு தெரியலை. படத்துல மொத்தமே 15 நிமிடம்தான் வருவான்.

ஆனா, நல்ல கேரக்டர்’னு அப்பா சொன்னார். ‘நான் பண்ணவா?’னு கேட்டேன். ‘நீ அதைப் பண்ணிடுவியா?’னு கேட்டார். ரெண்டுபேரும் அதை அப்படியே விட்டுட்டோம்.

ஒருநாள் அதுக்கான போட்டோஷூட் பண்னோம். அப்புறம், அதைப் பத்தி நானும் பேசலை; அவரும் பேசலை. பேக்அப் சொல்றதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைக் கூப்பிட்டு, ‘அந்த காஸ்ட்யூமைப் போட்டுட்டு வா’னு சொன்னார். இப்படித்தான் கிடைச்சது, ‘அன்னக்கொடி’ வில்லன் கேரக்டர்.

அப்பா ஒருநாள் போன் பண்ணி, ‘டேய்… எடிட்டிங் முடிஞ்சு நீ நடிச்ச சீன்ஸ் எல்லாம் பார்த்தேன். சூப்பரா நடிச்சிருக்க, வாழ்த்துகள். நீ நல்ல நடிகன். ஆனா, எங்கேயோ உனக்கு லாக் ஆகியிருக்குடா’னு சொன்னார். என் வாழ்க்கையில அந்தப் பாரட்டைத்தான் பெருசா நினைக்கிறேன்.

‘நீங்க மிஸ் செய்த படங்கள் ஏதாவது இருக்கா?’ என்று கேட்க, “நான் மிஸ் பண்ண படங்கள்னு பார்த்தா, ‘குஷி’, ‘கற்றது தமிழ்’ இந்த ரெண்டும்தான்.

பேக்ரவுண்ட் இருந்து சினிமாவுக்குள்ள வந்து நிறைய பேர் சக்சஸ் ஆகலை. அதுக்கு நானும் ஒரு உதாரணம். நான் சக்சஸ் ஆகாததுக்கு காரணம், நான் எடுத்த சில முடிவுகள்தான்.

ஒருத்தர் சக்சஸ் ஆகுறதுக்கு உழைப்போட சேர்ந்து நேரமும் அதிர்ஷ்டமும் தேவை” என்றவர், ‘பணத்தோட அருமையைத் தெரிஞ்சுக்கோ, உன்னைவிட யாரும் பெரியவனும் இல்லை; உன்னைவிட யாரும் சின்னவனுமில்லை’ இந்த ரெண்டைத்தான் அடிக்கடி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார்” என்று அப்பா சொன்ன அறிவுரையை நினைவு கூர்ந்தார்.

IMG_0750_13445 "அப்போ ஹீரோ... இப்போ, டீச்சர்!"- 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், மனோஜ் பாரதிராஜா IMG 0750 13445

 “ரெண்டு பெண் குழந்தைகள். பெரியவள் அர்த்திகா, சின்னவள் மதிவதனி. சின்னப் பொண்ணுக்குப் பேரு வெச்சது அப்பாதான். செம வாலு. எங்க அப்பா டென்ஷன்ல இருந்தார்னா, ஓடிப் போய் கட்டிப் பிடிச்சு கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்து, அப்பாவைக் கூல் பண்ணிடுவா.

மதிவதனிக்கு மட்டும்தான் அந்த டெக்னிக் தெரியும். பெரியவள் ரொம்பப் பொறுப்பு. திடீர்னு ‘அப்பா எனக்கு பைலட் ஆகணும்’னு சொல்வா. ‘சரி’னு சொன்னா, ‘இப்ப இருந்தே டிரை பண்ணாதான் அச்சீவ் பண்ண முடியும்’னு சொல்லிக்கிட்டே இருப்பா.

அப்பாவோட ‘என் இனிய தமிழ் மக்களே’ டயலாக்கை டப்ஸ்மாஷ் பண்ணி, அதை அவர்கிட்ட காட்டி விளையாடுறதுதான் இவங்களோட வேலை. அதைப் பார்த்துட்டு நாள் முழுக்கச் சிரிச்சுக்கிட்டு இருப்பார்” என்று தன் மகள்களின் சேட்டைகளை நினைவு கூர்ந்தவர், தற்போதைய செயல்பாடுகளைச் சொன்னார்.

118730_13095 "அப்போ ஹீரோ... இப்போ, டீச்சர்!"- 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், மனோஜ் பாரதிராஜா 118730 13095“இப்போ, ‘பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் சினிமா’வில ஆக்டிங் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன். ‘சிவப்பு ரோஜக்கள் 2′ படத்துக்கு நானும் டைரக்டர் ராமும் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதினோம்.

அதைப் படமா எடுக்கணும்னு நான் பிளான் பண்ணும்போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்திடுது. அதனால, அதை வெப் சீரியஸா எடுக்கலாம்னு இருக்கேன்.

அதுக்கான வேலை போயிட்டு இருக்கு. அதுல, அப்பா ‘இயக்குநர் பாரதிராஜா’வாவே வர்றார். அவர் இப்போ ஆக்டிங்ல ரொம்ப பிஸி. அதனால, அவர் கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

அதுதவிர, த்ரில்லர், ஹியூமர்னு ரெண்டு வகையான ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருக்கேன். அதைப் படமாக்குற வேலைகளும் போயிட்டு இருக்கு.

தொடர்ந்து எனக்கான வாய்ப்புகள் வரும்போது நடிப்பேன். ஆனா, என் கனவு முழுக்க ஸ்டார்ட்… கேமரா… ஆக்‌ஷன் சொல்றதுலதான் இருக்கு!” என்கிறார், உறுதியுடன்.

வாழ்த்துகள் ப்ரோ!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :  தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி  அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக் கொன்ற சிவராசா  “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News