ilakkiyainfo

ilakkiyainfo

அமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை

அமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை
October 03
15:36 2018

 

அமெரிக்க பாராளுமன்றத்தால் அளிக்கப்படும் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு அகிம்சை கொள்கையை நிலைநாட்டிய மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் சார்பில் அந்நாட்டில் சிறப்பான வகையில் சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் அளித்து கவுரவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் இந்த தங்கப்பதக்கம் மிகவும் அரிதாக சில வெளிநாட்டவர்களுக்கும் முன்னர் அளிக்கப்பட்டது.

201810021828080418_1_Shimon-Peres-Medal_O_2000_Merged._L_styvpf  அமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை 201810021828080418 1 Shimon Peres Medal O 2000 Merged1997-ம் ஆண்டில் அன்னை தெரசா, 1998-ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா, 2000-ம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால், 2006-ம் ஆண்டில் தலாய் லாமா, 2008-ம் ஆண்டில் ஆங் சான் சூகி, 2010-ம் ஆண்டில் முஹம்மத் யூனுஸ், 2014-ம் ஆண்டில் ஷிமோன் பேரெஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயரை பரிந்துரைக்க விரும்புவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்திய சுதந்திர விழாவின்போது அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் கரோலின் மலோனே தெரிவித்திருந்தார்.

201810021828080418_2_144566330._L_styvpf  அமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை 201810021828080418 2 144566330அகிம்சை முறையில் மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகப் போராட்ட இயக்கம் ஒரு நாட்டுக்கும் இந்த உலகத்துக்கும் ஊக்கசக்தியாக அமைந்தது. பிறரது சேவைக்கு நம்மை அர்ப்பணித்து கொள்ள அவரது வாழ்க்கை ஒரு உதாராணப் பாடமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைதொடர்ந்து, அமைதி மற்றும் அகிம்சைக்காக போராடிய மகாத்மா காந்தியின் பெயரை இந்த விருதுக்கு பரிந்துரை செய்து 23-9-2018 அன்று அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒரு தீர்மானத்தை கரோலின் மலோனே தாக்கல் செய்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் இந்த தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

இவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News