ilakkiyainfo

ilakkiyainfo

அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா? -வேல் தர்மா (கட்டுரை)

அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா? -வேல் தர்மா (கட்டுரை)
November 29
00:50 2016

யாரும் எதிர்பாராத ஒரு வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் யாரும் எதிர்பாராத பாணியில் பரப்புரை செய்து பலரது எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக வெற்றி பெற்றார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போடியிட்ட போது ஒரு டொனால்ட் டிரம்ப் உலகத்திற்குத் தெரிந்தார். அதில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட போது இன்னும் ஒரு டிரம்ப் உலகத்திற்குத் தெரிந்தார்.

தேர்தலில் அவர் ஹிலரி கிணிண்டனைத் தோற்கடித்து அமெரிக்க அதிபாராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மிகவும் வித்தியாசமான டிரம்ப்பாக அவர் காட்சியளித்தார்.

அதன் பின்னர் ஒவ்வொரு  நாளும் அவரது   தன்மைகளும் கொள்கைக்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. அண்மைக் காலத்தில் எந்த ஒரு வெற்றி பெற்ற அதிபருக்கும் எதிராக நடக்காத ஆர்ப்பாட்டம் டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல முன்னணி நகரங்களில் நடந்தது.

முதலில் டிரம்ப் ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாகத் தாக்கிப் பேசினார். பின்னர் அவர்களின் தேசப்பற்றை மெச்சினார்.

பராக் ஒபாமா கொண்டு வந்த மருத்துவக் காப்பீட்டை கடுமையாக எதிர்த டிரம்ப் பின்னர் அதன் பகுதிய நடைமுறைப்படுத்தப் போகின்றேன் என்றார்.

muslimss அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா? -வேல் தர்மா (கட்டுரை) muslimss1

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை முற்றாகத் தடை செய்யும் நிலையில் இருந்தும் அவர் மாறினார்.

வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என்று சொன்ன டிரம்ப் பின்னர் அதைக் கைவிட்டார்.

அத்துடன் நிற்கவில்லை பின்னர் குற்றச் செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவரை வெளியேற்றுவேன் என்றார். மெக்சிக்கோ எல்லையில் சுவர் என்றார் பின்னர் வேலி என்கின்றார்.

BESTPIX Donald Trump And Ted Cruz Join Capitol Hill Rally Against Iran Deal அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா? -வேல் தர்மா (கட்டுரை) trump21டிரம்பின் முதற் கோணல்
எப்படியாவது தேர்தலில் வென்றிட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வந்த டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெல்லும் வரை ஆட்சியை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக எந்தவித அக்கறையில்லாதவராகவும் யாரிடமும் ஆலோசனை பெறாதவராகவும் இருந்தார்.

அவரது ஆட்சி எப்படி இருக்கப் போகின்றது என்பத அவரது அமைச்சரவையை வைத்தே கணிப்பிட முடியும் என நம்பியிருந்தவர்களுக்கு டிரம்ப் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ச்சி கொடுத்தார்.

டிரம்பின் அமைச்சரவை உருவாக்கக் குழுவில் அவரது மூன்று பிள்ளைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

டிரம்பின் அமைச்சரவை உருவாக்கத்தில் பிரச்சனையின் முதலாம் கட்டம் அவரது மருமகன் ஜெரெட் குஷ்னருக்கும் புதிய அமைச்சரவையை அமைப்பதிற்குப் பொறுப்பாக இருந்த நியூ ஜேர்சி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்றிக்கும் இடையிலான முறுகலில் ஆரம்பித்தது.

கிறிஸ்றி டிரம்பின் மருமகனின் தந்தையை வருமான வரி ஏய்ப்பிற்காக சிறைக்கு அனுப்பியவர்.

இவர்களிடையான முறுகலால் கிறிஸ்றி பதவி விலக துணை அதிபராகத் தேர்தலில் வெற்றி பெற்ற பென்ஸ் புதிய அமைச்சரவையை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார்.

புதிய அமைச்சரவையை அமைப்பதில் டிரம்ப் பல சிக்கல்களையும் உள் மோதல்களையும் எதிர் கொள்கின்றார் என்ற செய்தியை டிரம்ப் மறுத்துக் கொண்டிருக்கையில் அவருக்கு அடுத்த அடி விழுந்தது.

அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் உளவுத்துறைக் குழுவின் முன்னாள் தலைவர் மைக் ரொஜர் அடுத்ததாக டிரம்பின் அமைச்சரவையில் தேசிய பாதுகாப்புத் துறைப் பிரிவில் இருந்து விலகினார்.

அமெரிக்காவில் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் புதிய அமைச்சரவையை உருவாக்குவதில் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதுண்டு.  ஆனால் டிரம்பின் பிரச்சனைகள் உலக ஊடகங்களில் பெரும் செய்திகளாகவும் விமர்சனக் கட்டுரைகளாகவும் அடிபடுகின்றன.

எந்த வித அரசியல் அனுபவமோ அல்லது அரச பதவி அனுபவமோ இல்லாத டொனால்ட் டிரம்பிற்கு ஒரு சிறப்பான அமைச்சரவை அவசியமான ஒன்றாகும்.

வரலாறு முக்கியம் அதிபரே
அண்மைக்காலங்களாக அமெரிக்க அதிபராக இருந்தவர்கள் எல்லோரும் நூல்களை வாசித்து தமது அறிவை வளர்த்தவர்கள். அதிலும் முக்கியமாக சரித்திரம் பற்றி வாசித்தறிந்தவர்கள்.

சரித்திரம் தொடர்பாக சரியான புரிந்துணர்வு இல்லாமல் ஓர் அமெரிக்க அதிபரால் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாகச் சிறந்த முடிவுகளை எடுக்க முடியாது.

டொனால்ட் டிரம்ப் நூலகள் வாசிப்பது இல்லை அவருக்கு சரித்திரம் தொடர்பான புரிந்துணரவு ஏதும் இல்லை. போட்டி நாடுகளிற்கு எதிரான அமெரிக்காவின் ஆதிக்கச் சமநிலையை  அமெரிக்காவிற்கு சாதகமாக வைத்திருப்பது   அமெரிக்க   அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இதை டொனால்ட் டிரம்ப் சரித்திரம் தொடர்பான புரிந்துணர்வு இல்லாமல் செய்ய முடியாது.

Campaign CEO Stephen Bannon listens during Republican presidential nominee Donald Trump's round table discussion on security at Trump Tower in the Manhattan borough of New York அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா? -வேல் தர்மா (கட்டுரை) download 8Steve Bannon

இனவாத அரசு
டொனால்ட் டிரம்ப்பின் கேந்திரோபாய ஆலோசகராக ஸ்டீஃபன் கே பன்னன் (Steve k. Bannon) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டிரம்பின் தேர்தல் பரப்புரைக்கு தலைமை நிறைவேற்று அதிகாரியாகச் செயற்பட்டவர்.

வெள்ளை இனவாதியான இவரின் நியமனம் டிரம்ப் தேச ஒற்றுமையைப் பாதிக்கக் கூடியவகையில் செயற்படமாட்டார் என நம்பியிருந்தவர்களுக்கு முதல் இடியாக விழுந்தது.

இந்த நியமனத்திற்கு எதிராக யூத மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் கடும்   அதிருப்தியை வெளிவிட்டன.

ஒஹியோ மாநிலத்தில் டிரம்பின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜோன் கஸிஸ் இந்த நியமனத்தை கடுமையாகச் சாடினார். புதிய நாஜிகளின் இணையத்தளம் ஸ்டீஃபன் கே பன்னை வெள்ளை மாளிகையில் எம்மவர் என்றது.

உலக ஆதிக்க நாயகன்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டொனால்ட் டிரம்ப் அதன் உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டிய சுமையைத் தாங்கி நிற்கின்றார்.

ஆனால் டிரம்ப் உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக இதுவரை காலமும் இருந்த அதிபர்களின் கொள்கைக்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளார்.

அவரது வெளிநாட்டுக் கொள்கையை அவரால் வகுக்க முடியுமா? டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியின் மூதவை உறுப்பினர் பென் கார்டின் அமெரிக்காவின் மரபுவழி வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து அது விலகாமல் இருப்பதை உறுதிசெய்வது எல்லா மூதவை உறுப்பினர்களும் பொறுப்பு என்று சொன்னதுடன் நிற்காமல் எல்லா மூதவை உறுப்பினர்களுக்கும் மத்தியில் தனது பரப்புரையைச் செய்கின்றார்.

தனது கருத்துக்கு ஆளும் கட்சியின் மூதவை உறுப்பினர்கள் மத்தியில் பரவலான ஆதரவு இருப்பதாக பென் கார்டின் உறுதியாகச் சொல்கின்றார்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-4 அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா? -வேல் தர்மா (கட்டுரை)          4
மேற்காசியா
ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபோது அவர் அரபு இஸ்ரேலியப் பிரச்சனையில் அதிக அக்கறை காட்டமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

மேற்காசியா தொடர்பாக அவரது கொள்கை வித்தியாசமானதாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் மெனக்கெம் பெகினுக்கு ரீகன் சமர்ப்பித்த சமாதானத் திட்டத்தை அவர் ஏற்காத போது பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீதான தடையை ரீகன் நீக்கி அதன் தலைவர் யசீர் அரபாத்துடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார்.

டிரம்ப் அமெரிக்கா தனது எரிபொருள் தேவைக்கு ஆபத்து மிக்க மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தங்கியிருப்பதிலும் பார்க்க அமெரிக்காவின் எரிபொருள் தேவையை உள்நாட்டில் இருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கருதுகின்றார்.

ஆனால் உலக நாடுகளைச் சுரண்டி தனது பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா தனக்கு மட்டுமல்ல உலகெங்கும் எரிபொருள் விநியோகம் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஈரானுடன் டிரம்ப் கடுமையாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஈரானுடம் நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் செய்து கொண்ட அணுப்படைக்கலன் தொடர்பான உடன்படிக்கையை டிரம்ப் ஏற்றுக் கொள்வதில்லை என்றார்.

n-golfclub-a-20161125-870x593 அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா? -வேல் தர்மா (கட்டுரை) n golfclub a 20161125முதல் பரிட்சை
டொனால்ட் டிரம்ப் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபேயை நவம்பர் 17-ம் திகதி வியாழக் கிழமைச் சந்தித்தார். டிரம்ப் வேட்பாளராக  இருந்த போது அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட  அபே அவரைச் சந்திப்பதைத் தவிர்த்திருந்தார்.

ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சந்தித்த முதல் வெளிநாட்டுத்தலைவர் சின்சோ அபேயாகும். தேர்தல் பரப்புரையின் போது ஜப்பானினதும் தென் கொரியாவினதும் பாதுகாப்பு அமெரிக்காவின் பொறுப்பல்ல அவை தமது பாதுகாப்பைத் தாமே உறுதி செய்ய வேண்டும் என்றார்.

டிரமபைச் சந்தித்த பின்னர் சின்சோ அபே அவருடன் இணைந்து செயற்படுவதில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். நவம்பர் 18 வெள்ளிக் கிழமை டிரம்ப் நேட்டோ செயலாளர் நாயகத்தையும் சந்தித்தார்.

அமெரிக்கப் பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் வெளி நாடுகளில் அல்ல என்பது டிரம்பின் கொள்கை ஆனால் அமெரிக்காவின் பிரபல படைத்துறை உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டீன் இந்தியாவில் F-16 போர் விமானங்களை உற்பத்தி செய்ய எடுத்த முடிவை மாற்றப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

பசுபிக் தாண்டிய பங்காண்மையும் அமெரிக்க வர்த்தகமும்
பசுபிக் தாண்டிய பங்காண்மையை அமெரிக்கா ஜப்பான் உட்பட 11 நாடுகளுடன் பராக் ஒபாமா உருவாக்கிய இருந்தார். ஜப்பானியப் பாராளமன்றம் அங்கீகரித்து விட்டது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை வர்த்தக ரீதியாக ஒழிக்க இந்த உடன்படிக்கை பல ஆண்டுகள் பேச்சு வார்த்தை நடத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் மட்டுமல்ல அட்லாண்டிக் தாண்டிய வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களையும் தான் இரத்துச் செய்யப் போவதாக டிரம்ப் சூளுரைத்திருந்தார். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளான நிலையில் உலக நாடுகளுடனான வர்த்தகம் அவசியமான ஒன்றாகும்.

அரச நிதி
அமெரிகாவில் அரச நிதி நெருக்கடி நீண்ட காலமாகப் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. டிரம்ப் அமெரிக்கா வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தனது உள்கட்டுமானங்களில் பாரிய முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

ஆனால் அவரது கொள்கை. அமெரிக்க அரச நிதியில் அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவை ஆதிக்கம் செலுத்தக் கூடியது. எல்லா அரச நிதி ஒதுக்கீடுகளும் மக்களவையின் அங்கிக்காரம் அவசியம். தேவை ஏற்படின் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒன்று சேர்ந்து அதிபரின் கைகளைக் கட்டிப்போடும் சட்டங்களை உருவாக்க முடியும்.

பருந்துகளைப் பிடித்த டிரம்ப்
அமெரிக்க அரசியல்வாதிகளை பல விதங்களாக வகைப்படுத்துவர். அதின் ஒன்று பருந்துகளும் புறாக்களுமாக வகைப்படுத்தல். பருந்துகள் என்போர் போரையும் அடுத்த நாடுகளில் தலையிடுவதையும் விரும்புபவர்கள்.

புறாக்கள் சண்டையைத் தவிர்த்து வேறு வழிகள் மூலம் மற்ற நாடுகளை தமது வழிக்குக் கொண்டு வர முயல்வார்கள். டொனால்ட் டிரம்ப் தேர்தலுக்கு முன்னர் இருந்த கடுமையான நிலைப்பாட்டில் இருந்து தேர்தலில் வென்ற பின் மாறுவார் என நம்பியிருந்தவர்களுக்கு டிரம்ப் முக்கிய பதவிகளிற்கு பருந்துகள் பிரிவில் இருந்து ஆட்களை நியமித்தது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

சட்டமா அதிபராக அலபாமா மாநிலத்திற்கான மூதவை உறுப்பினர் ஜெஃப் செஷன்ஸை டிரம்ப் நியமித்துள்ளார்.

முன்பு அமெரிக்கப் படைத்துறையிலும் பணி புரிந்த இவர் சட்ட விரோதமாக   அமெரிக்காவிற்கு குடியேறியவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதைக் கடுமையாக எதிர்த்தவர் வேலைகளைச் செய்வதற்கு தேவையான வெளிநாட்டவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்கும் திட்டத்தையும் கடுமையாக எதிர்க்கும் ஜெஃப் செஷன்ஸ் முன்பு இனக்குரோதக் கருத்துகளை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுபவராகும்.

bn-qw271_1118po_gr_20161118081710 அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா? -வேல் தர்மா (கட்டுரை) BN QW271 1118po GR 20161118081710Mike Pompeo

அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயின் இயக்குனராக டிரம்ப் மைக் போம்பியை நியமித்துள்ளார். தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினண்ட் ஜெனரல் மைக்கேல் ஃபிலினை டிரம்ப் தெரிவு செய்துள்ளார்.

இந்த நியமனங்களை டிரம்பின் குடியரசுக் கட்சியினர் வரவேற்ற போதிலும் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரும் மனித உரிமை அமைப்புக்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

சட்டமா அதிபராக நியமிக்கப் பட்ட செஷனும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்கப் பட்ட ஃபிலினும் குடிவரவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரானவர்களாகும். ஆனால் டிரம்ப் இந்த நியமனங்கள் அமெரிக்கர்களை உள்நாட்டிலும் உலகிலும் பாதுகாப்பாய் இருப்பதை உறுதிச் செய்யும் என்றார்.

அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் சிறுபானமைக் குழுவின் தலைவர் இந்த நியமனங்கள் அமெரிக்காவின் எதிரிகள் தமது தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆட்சேர்ப்பதை இலகுவாக்கும் என்றார். ஏற்கனவே ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், ஈராக், சிரியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைத்துறையினர் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கின்றனர். டிரம்பின் பருந்துக்கள் இப்போர்களில் மேலும் தீவிரமாக ஈடுபடுவார்களா?

இரசியாவால் தற்போது நேட்டோக் கூட்டமைப்பில் உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும்.

நேட்டோ தொடர்பான டிரம்பின் கொள்கை அவரது தேர்தல் பரப்புரையின் போது இந்த நாட்டு ஆட்சியாளர்களை அச்ச முறவைத்தது. டிரம்ப் 2017-ம் ஆண்டு பதவி ஏற்க முன்னர் சிரியாவை முழுமையாக பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இரசியா அதிக முனைப்புக் காட்டுகின்றது.

சீனா ஆசிய பசுபிக் நாடுகளுடனான வர்த்தகத்தை தனக்கு சாதகமாக்கி அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்திற்கு ஆப்பு வைக்க முயல்கின்றது.

மூச்சடக்கிய நாய்க்கு முக்கிய பதவி
2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமாவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னி டிரம்ப் தேர்தலில் போட்டியிட்ட போது  அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

பதிலுக்கு டிரம்ப் மிட் ரோம்னியை முச்சடக்கிய நாய்க்கு ஒப்பிட்டுப் பேசி இருந்தார். தற்போது இருவரும் சந்தித்து ஒரு மணித்தியாலம் உரையாடியுள்ளனர். அது மட்டுமல்ல அமெரிக்காவின் முக்கிய த் துறைச் செயலர் பதவி மிட் ரோம்னிக்கு வழங்கப்படும் எனச் செய்தி அடிபடுகின்றது.

அமெரிக்க மூதவை டிரம்பிற்குக் கொடுக்கும் ரோதனை
100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையில் டிரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 52 பேர் உள்ளனர்.

இது அமெரிக்க்காவைப் பொறுத்தவரை ஒரு அதிபரின் சிறப்பான செயற்பாட்டுக்கு உகந்த பெரும்பான்மை அல்ல. போதாக் குறைக்கு அந்த 52 பேரில் 12 பேர் டிரம்பிற்கு எதிரானவர்கள்.

பல சட்டங்களை நிறைவேற்றவும் பல நியமனங்களைச் செய்யவும் மூதவையில் 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எல்லா குடியரசுக் கட்சியினரும் கட்சியின் கொள்கைப்படி நடப்பவர் அல்லர்.

சிலர் தமக்கு என ஒரு கொள்கை உடையவர்கள். இவர்கள் பல கட்டங்களில் டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்கலாம். குடியரசுக் கடியின் 7 உறுப்பினர்கள் ஹிஸ்பனிக் சமூகன் எனப்படும் ஸ்பானிய வம்சா வழியினராகும். இவர்கள் டிரம்பின் குடிவரவுக் கொள்கைகளை எப்படி ஆதரிக்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும்.

கீழ்க்காணும் பதவிகளுக்கு இன்னும் டிரம்ப் ஆட்களை நியமிக்கவில்லை:
Secretary of State
Secretary of the Treasury
Secretary of Defense
Secretary of the Interior
Secretary of Agriculture
Secretary of Commerce
Secretary of Labor
Secretary of Health and Human Services
Secretary of Housing and Urban Development
Secretary of Transportation
Secretary of Energy
Secretary of Education
Secretary of Veterans Affairs
Secretary of Homeland Security
Administrator of the Environmental Protection Agency
Director of the Office of Management & Budget
United States Trade Representative
United States Ambassador to the United Nations
Chairman of the Council of Economic Advisers
Administrator of the Small Business Administration

வழிக்கு வராவிடில் ஒழிக்கப்படுவார் – trump will be over trumped
டிரம்பின் பல கொள்கைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆட்டிப் படைக்கக் கூடியதாக இருக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது அதன் அதிபரோ பாராளமன்றமோ இரு பெரும் கட்சிகளோ அதன் படைத்துறையோ அல்ல.

அது உணர்ந்து கொள்ள முடியாத வலிமை மிக்க ஒன்று. இனம் காணக் கடினமான கட்டமைப்பு. பல பல்தேசியக் நிறுவனங்களின் நலன்கள்தான் அதன் அடிப்படை.

அதன் வழிக்கு வராமால் டிரம்ப் தன் பாட்டுக்கு அமெரிக்காவை வழிநடத்த முற்பட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம் சும்மா இருக்காது. துணை அதிபராகத் தேர்தலில் வெற்றி பெற்ற பென்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உகந்தவராகக் கருதப்படுகின்றார்.

தேவை ஏற்படின் அமெரிக்க ஏகாதிபத்தியம் பராளமன்றத்தின் உதவியுடன் டிரம்பைப் பதவி நீக்கம் செய்ய முடியும். அது முடியாமல் போனால் சித்த சுவாதீனமற்ற ஒருவரால் டிரம்ப் கொலைசெய்யப்படும் வாய்ப்புகள் இல்லை எனச் சொல்ல முடியாது.

-வேல் தர்மா-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News