ilakkiyainfo

ilakkiyainfo

அமெரிக்க ராணுவத்திடம் “ஏலியன் டெக்னாலஜி” இருக்கிறது! வைரலாகும் வீடியோ!

அமெரிக்க ராணுவத்திடம் “ஏலியன் டெக்னாலஜி” இருக்கிறது! வைரலாகும் வீடியோ!
June 29
02:55 2019

“அதென்னடா? ஏலியன்ஸ் வந்தால் ஏன் அமெரிக்காவிற்கு மட்டும் தான் வருமா? வேறு எந்த நாட்டுலயுமே பாலைவனம் இல்லையா? இல்ல சமுத்திரங்கள் தான் இல்லையா? இதுல இருந்தே நல்லா புரிஞ்சுக்கணும்! அமெரிக்கா காரன் சரியான டகால்டினு!” – என்று கொந்தளிக்கும் க்ரூப்ஸ் ஒருபக்கம் இருக்க,

மறுபக்கம் “அட அமெரிக்காகாரன் சொன்னா சரியாதான்பா இருக்கும், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” – என்று தலைக்கு மேல் தூக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.

ufo-sighting-aliens-china-youtube-video-1-gd-1561696284நம்பலாமா? வேண்டாமா?
அவ்வப்போது வெளியாகும் ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றிய புகைப்படங்கள், தகவல்கள், சதியாலோசனை கோட்பாடுகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் தான், நம்பலாமா? வேண்டாமா? இருக்கிறதா? இல்லையா? என்பது போன்ற வாக்குவாதங்களுக்கு ஆதிமூல காரணமாக திகழ்கிறது.

ஆனால் இப்போதே எல்லாவற்றிக்கும் மேலாக ஏலியன்களின் இருப்பை அமெரிக்கா ஒற்றுக்கொள்வதை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

s

அமெரிக்க ராணுவத்திடம் சூப்பர் அட்வான்ஸ்டு ஏலியன் டெக்னாலஜி!

அது உண்மையான வீடியோவா அல்லது போலியானதா என்பது பற்றிய விவரங்கள் ஏதுமில்லை.

ஆனால் வீடியோவில் காட்சிப்படும் ஏலியன் டெக்னாலஜி ஆனது சற்று திகிலாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏலியன்பிளாக் எனப்படும் வலைத்தளத்தில் வெளியாகி உள்ள வீடியோவின் படி, அமெரிக்க ராணுவத்திடம் சூப்பர் அட்வான்ஸ்டு ஏலியன் டெக்னாலஜி உள்ளது.

“கருப்பு பட்ஜெட்டின்” கீழ்!

டாம் கெல்லர் நாசாவின் முன்னாள் ஊழியர் ஆவார், இவர் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் கணினி ஆய்வாளராக பணியாற்றினார்.

இவர் தான் அமெரிக்க இராணுவம் தற்போது வைத்திருக்கும் தொழில்நுட்பம் குறித்து ஒரு நம்பமுடியாத அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

டாம் கெல்லர் கூற்றின் படி, அமெரிக்க இராணுவம் ஒரு வேற்று கிரக தொழில்நுட்பத்தை தன் கைவசம் கொண்டுள்ளதாகவும், இந்த தொழில்நுட்பத்தை கொண்டு நட்சத்திரங்களுக்கு இடையிலான பயணத்தை மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க “கருப்பு பட்ஜெட்டின்” கீழ் பெரிய அளவிலான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளார்.

சரி இதனால் மனித இனம் பாதுகாக்கப்படுமா?

துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழில்நுட்பம் ஆனது ஒருபோதும் மனிதகுலத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படாது.

ஏனெனில், நாம் மிகவும் முன்னேறிய ஒரு கண்டுபிடிப்பை (ஆயுத தொழில்நுட்பத்தை) கற்பனை செய்யும் அதே நேரத்தில், ஏலியன்களிடம் அந்த தொழில்நுட்பம் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கலாம் என்று பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்களால் நம்பப்படுகிறது.

அவர்களால் (வேற்று கிரக வாசிகளால்) நாம் நமது வாழ்நாள் முழுவதும் செய்து கடக்கும் தூரங்களை, பயணங்களை சில நொடிகளில் கடக்கும் தொழில்நுட்பம் கூட இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

nasa-alien-etjtj-rh-dg-1561696674சாத்தியமில்லாத ஒரு காரியம்! எது?

இந்நிலைப்பாட்டில், நாமும் அத்தகைய தொழில்நுட்பங்களை கொண்டு தான் அஅவர்களை அடைய முடியும் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

“இதுநாள் வரையிலாக நாம் முயற்சி செய்து வரும் வேதியல் வழியிலான விண்வெளி பயணங்களை கொண்டு ஏலியன்களை கண்டறிவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியம் ஆகும்.

இந்த இடத்தில தான் அமெரிக்காவின் வேற்று கிரக தொழில்நுட்பம் உள்ளே நுழைகிறது” என்கிறார் டாம் கெல்லர்.

இந்த ஏலியன் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும் ? இந்த கேள்வியை, அதாவது வீடியோவில் காட்சிப்படும் யுஎஃப்ஒ ப்ராபல்ஷன் எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு பொறியியலாளரிடம் கேட்கப்பட்டபோது, நேரம் மற்றும் இடத்தின் அனைத்து புள்ளிகளும் இணைக்கப்பட்டுள்ளன என்றும், அதன் விளைவின் கீழ் யுஎஃப்ஒ-வின் உந்துவிசை செயல்படும் என்றும் அவர் பதில் அளித்து உள்ளாராம்.

இந்த இடத்தில் நமக்குள் கிளம்பும் ஒரு சந்தேகம்! அது என்னது?

உண்மையில் அமெரிக்க ராணுவத்திடம் பறக்கும் தட்டுகள் போன்ற தொழில்நுட்பம் இருக்கிறது தான் என்றால், அவ்வப்போது அமெரிக்க வான்வெளிகளில் “மட்டும்” காட்சிப்படும் விண்கலங்கள் ஆனது அமெரிக்க ராணுவத்தின் சொந்த விமானங்கள் தானா? ஆக நாம் அடிக்கடி புகைப்படங்களில் காணும் பறக்கும் தட்டுகள் அனைத்துமே அன்னிய வம்சாவளியைச் சேர்ந்தவை அல்ல! அப்படித்தானே?

இருக்கலாம் உண்மையில் அவைகள் அன்னிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இராணுவ விமானங்களாக இருக்கலாம்.

அதனால் தான் என்னவோ அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன போல!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News