ilakkiyainfo

ilakkiyainfo

‘‘அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்’’ – பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு

‘‘அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்’’ – பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு
December 02
15:37 2019

‘‘ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்தார்’’ என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டினார்.

‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. முன்எப்போதும் நிகழாத வகையில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிந்ததால் இது உலக அளவில் கவனம் ஈர்த்தது.

சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து கவலை தெரிவித்தனர். டைட்டானிக் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியாண்டோ டிகாப்ரியோ இது பற்றி கவலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.36 ஆயிரம் கோடி) நிதி வழங்குவதாக அறிவித்தார்.

201912020027309715_1_r5yn6vr9._L_styvpf  ‘‘அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்’’ - பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு 201912020027309715 1 r5yn6vr9இந்த நிலையில் அமேசான் காட்டுத்தீ குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ ‘‘ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்தார்’’ என குற்றம் சாட்டினார். எனினும் அவர் இதற்கு எந்தவித ஆதாரங்களையும் வழங்கவில்லை. இந்த குற்றச்சாட்டை லியாண்டோ டிகாப்ரியோ மறுத்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘‘அமேசான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், தங்களது இயற்கை வளத்தையும் பாரம்பரிய கலாசாரத்தையும் பாதுகாக்க போராடும் பிரேசில் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஆதரவு தெரிவிக்கும் நேரத்தில், அமைப்புகளுக்கு நாங்கள் பண உதவி செய்வது கிடையாது. பிரேசில் மக்களின் எதிர்காலத்திற்காக அமேசானை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்’’ என தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News