ilakkiyainfo

ilakkiyainfo

அமைச்சர் ரிஷாத்திடம் துப்பாக்கி கேட்ட செல்வம் அடைக்கலநாதன் எம்.பி!

அமைச்சர் ரிஷாத்திடம் துப்பாக்கி கேட்ட செல்வம் அடைக்கலநாதன் எம்.பி!
August 01
15:02 2019

வவுனியா அபிவிருத்திகுழுக் கூட்டம் இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது அண்மைக் காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட்கன்கள் (துப்பாக்கி) மீளப் பெறப்பட்டுள்ளதால் தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவதனால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எனவே அவர்களுக்கு மீண்டும் சொட்கன் (துப்பாக்கிகள்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவசக்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவரான ரிசாட் பதியுதீன் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் என அனுமதி பெறவேண்டும் என தெரிவித்தனர்.

அத்துடன் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா அரசாங்க  அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அந்த விண்ணப்பத்தை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ‘தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லம்’ என நகைச்சுவையாக தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ‘பழைய ஞாபகங்கள் வந்துள்ளது போல்’ என செல்வம் அடைக்கலநாதனை பார்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

1 Comment

  1. arya
    arya August 02, 04:27

    துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 – 1996 வரை நீ செய்த உல் படுகொலைகள் கோட்டாபஜே ஜனாதிபதி ஆனா பின் மீண்டும் விசாரிக்க படும் புளொட் வசந்தன் படுகொலை உட்பட.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News