அத்தோடு இந்த வெற்றிடத்துக்கு சுதந்திர கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண பதில் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் குழு கூட்டம் மற்றும் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

625.300.560.350.160.300.053.800.450.160.90-1-1நாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கமுடைய தலைமைத்துவத்தின் கீழான ஆட்சியை தோற்றுவிப்பது அவசியமாகும்.

எனவே கட்சியின் தீர்மானங்களை மீறி செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

அதற்கேற்பவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அவருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எனினும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்பதால் ஆலோசகர் பதவியில் தொடர்ந்தும் அவரே காணப்படுகின்றார்.

கட்சிக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆற்றிய பணிகளை மறந்து செயற்பட முடியாது.

எனவே அவரது கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பிலோ அல்லது ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பிலோ எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

அரசியல் குழு கூட்டம் மற்றும் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.