ilakkiyainfo

ilakkiyainfo

« அம்மா » காத்திருப்பேன் உனக்காக!

« அம்மா » காத்திருப்பேன் உனக்காக!
January 27
19:40 2014

எனது பெயர்  »கரு »
எனக்கு இப்போது தான்
வயசும், உடலும், உள்ளமும்
வளர ஆரம்பித்துள்ளன!

என் கண்கள்
திறக்கப்படாதபோதும்
என் காதுகளுக்கு கேட்கும்
திறன் நிறையவே உண்டு!

புதுமணத்தம்பதியாக
புதுக்குடியிருப்புக்கு புலம் பெயர்ந்து
வந்தவேளை உடலும், உள்ளமும் ஒன்றாகிப்போக
உருவாக்கப்பட்ட ‘ ‘புதுவரவு »   நான்!

உணர்ச்சிக்குள்
உருவானபோதும்  »உணர்வு »  களால்
உந்தப்பட்டவனாய்
உணர்ந்து கொள்கிறேன்!

ஜூலைக்கலவரத்து
ஆரம்பத்தின் வாசலிலே  »ஈழத்து » மண்ணில்
அவதரித்தவர் என் தாயும், தந்தையும்
என கேள்விப்படுகிறேன்!

அன்றைய  »இவர்கள் »   கருத்தரிப்பு
தமிழர்  »விடுதலை »’  க்கான புதிய »  பயணிப்பு »
எனது   »ஆரம்பமே » முடிவுக்கு வந்த
போருக்கு மத்தியிலே கால் பதிக்க பதிவாகியவனாக!

தாயே நீ பேசிக்கொண்டு
எனக்காக  »கால்வயிறு » கஞ்சிக்காக, கால்வலிக்க
கொளுத்தும் வெய்யிலிலும், கொட்டும் மழையிலும்
காத்திருப்பதையிட்டு கவலை கொள்கிறேன்!

உன்னுள்  »நான் » இல்லையென்றால்
உன்னைக்கூட மாய்த்திருப்பாய் எப்போதே!
»மானம் »   கெட்ட வாழ்க்கையிதுவென்று
என்னால் இப்போது அதிக வலியும், காயங்களுமுனக்கு!

உந்தன்  »கரு »   அறைகூட
ஒருவகை  »சிறை » தான் இருந்தபோதும்
உன்னாலே கவனிக்கப்படுகிறேன்
எந்தக்குறையுமில்லாமல்!

எந்தன் வருகைக்காக
உன்னை  »வருத்தி »   நிற்கின்றாய்
கடந்துசென்ற  »தொண்ணூறு » நாட்களாக
மீதமுள்ள நாட்களை எண்ணியவாறே!

திறந்த  »வெளிச்சிறை »  யில் நீ சிரமப்பட
எப்படி பொறுத்திருப்பது இங்கு நான்?
இழப்பதற்கு உன்னிடம்  »மானம் »  மட்டுமே மீதியாக
அதற்கும் அப்பப்போ  »ஆபத்து »  எட்டிப்பார்க்க  »உஷார் » ஆக நீ!

நீயிருந்த நல்ல நிலையில்
»நான் »  உதயமாகியிருந்தால் மேலும்
எத்தனை மடங்கு சந்தோஷத்தால்
பூரித்து மகிழ்ந்திருப்பாய்!

மாறாக தூக்கத்தை களவு கொடுத்து
துக்கத்தை வாங்கிக்கொண்டவளாய் இன்னும்
எத்தனை நாளைக்கு  »அவல »  நிலை எனக்காக?
இப்போது என்  »வருகை » தேவைதானா யோசி ஒருமுறை!

உன்னைப்போலவே
எனக்கும்  »உந்தன் » மேலே நிறையவே
அக்கறை உண்டென்பதாலும் – இனிமேலும்
என்னால் தாங்கமுடியாது சொல்கிறேன்!

கேட்பதற்கு கனமான  »வார்த்தை » ஆனால் உங்கே
வாழ்ந்தவர்கள் கூட  »கடைசி » யில்  »வாழ »   முடியாது
»கருணை »க் கொலை என்ற வழிதேடி நிற்கின்றாரே
அதை விட இதுவொன்றும் பெரிதான விஷயமில்லை!

தாயே! உன்னை ஒருமுறை
»அம்மா »  என்று அழைக்கலாமா? அப்படியாயின்
அம்மா இதுவே எனது  »வேண்டுகோள் »
இப்போதே என்னை  »கரு » விலே கலைத்துவிடு!

ஏழு முறை  »பிறவி »  உண்டென்று
உன்னாலே பேசப்பட்டபோதே என் காதிற்கு எட்டியது
உனக்குமெனக்கும்  »உறவு »  நிசமென்றால்
»பாடுகள் »  வேண்டாம், இந்தப்பார  »சிலுவை » யை
இன்றே இறக்கி வை-இவனால்  »சுயனல »மாக சிந்திக்கமுடியாது
உனக்கொரு  »நியாயம் »  எனக்கொரு நியாயமா?
இந்த  »முள்ளு »க் கம்பிவேலியை விட்டு வெளியே வா!!!
மீண்டும்  »சந்தோஷம் » உன்னிடம் குடியேறும்!

அப்போது என்னைத்தேடு அதுவரைக்கும்
இந்த வானத்தில் வடக்குக்கும், கிழக்குக்கும் நடுவே
»நட்சத்திர »மாக  »கண்சிமிட்டி »
காத்திருப்பேன் உன் அழைப்புக்காக!

—-இவன்—-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News