ilakkiyainfo

ilakkiyainfo

அலோசியஸ் கைது : கசுன் பலிசேனவும் சிக்கினார் வீடு­களை சுற்­றி­வ­ளைத்து அதி­ரடி: நான்காம் மாடியில் தடுத்­து­ வைத்து தீவிர விசாரணை

அலோசியஸ் கைது : கசுன் பலிசேனவும் சிக்கினார் வீடு­களை சுற்­றி­வ­ளைத்து அதி­ரடி: நான்காம் மாடியில் தடுத்­து­ வைத்து தீவிர விசாரணை
February 05
14:12 2018

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை­முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பேப்­ப­ச்சுவல் ட்ரஷரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனின் மருமகன் அர்ஜுன் அலோ­சியஸ், குறித்த நிறு­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக இருந்த கசுன் பலி­சேன ஆகியோர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர்.

வெள்­ள­வத்தை, அர்­துசா வீதியில் உள்ள கசுன் பலி­சே­னவின் இல்­லத்­தினை நேற்று காலை 6.15 மணி­ய­ளவில் சுற்­றி­வ­ளைத்த குற்றப் புலனாய்வுப் பிரி­வினர் சுமார் 45 நிமி­டங்­களின் பின்னர் 7. மணி­ய­ளவில் அவரைக் கைது செய்­தனர்.

பின்னர் 7.45 மணி­ய­ளவில் கொள்­ளு­பிட்டி, பிளவர் வீதியில் உள்ள அர்ஜுன் அலோ­சி­யஸின் வீட்டை சுற்­றி­வ­ளைத்து அவரை கைது செய்­தி­ருந்­தனர்.

கைது செய்­யப்­பட்ட இரு­வரும் நேற்று காலை 8.00 மணி­யாகும் போது குற்றப் புல­னா­யவுப் பிரிவின் தலை­ம­யகம் அமைந்­துள்ள நான்காம் மாடி கட்­டிடத் தொகு­திக்கு அழைத்து வரப்­பட்ட நிலையில் அங்கு வைத்து, அவர்­க­ளிடம் பிணை முறி மோசடி உள்­ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆர்ம்­பிக்­கப்­பட்­டன.

இந்த விசா­ர­ணைகள் நேற்று இரவு வரை நீடித்­தன. இந் நிலையில் கைதான இரு­வரும் கோட்டை நீதிவான் லங்க ஜய­ரத்ன முன்னிலையில் ஆஜர் செய்ய குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல   ஆகி­யோரின் மேற்­பார்­வையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபேசே­க­ரவின் வழி நடத்­தலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் பி.அம்­பா­வல தலை­மையில் பெண் பொலிஸ் பரி­சோ­தகர் தர்­ம­லதா சஞ்­ஜீ­வனீ, பொலிஸ் சார்ஜன் ஜய­வீர உள்­ளிட்ட சிறப்புக் குழு­வினர் இவ்­வி­சா­ர­ணை­களை முன்னெ­டுத்­துள்­ளனர்.

இந்த விவ­கா­ரத்தில் முதல் சந்­தேக நப­ராக மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிங்­கப்பூர் பொலிஸார் ஊடாக , கோட்டை நீதி­மன்றின் 15 ஆம் திக­திக்குள் சி.ஐ.டி.யில் ஆஜ­ராக வேண்டும் எனும் அறி­வித்­தலை 20, கஸ்­காடன் வீதி, 18/1, டெம்சன், சிங்­கப்பூர், 2497726 எனும் முக­வ­ரிக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

அதன்­படி அத்­தி­க­திக்குள் அவர் குற்றப் புல­னா­யவுப் பிரிவில் ஆஜ­ரானால் அவர் பெரும்­பாலும் விசா­ர­ணையின் பின்னர் கைது செய்யப்படலாம் எனவும், அவர் ஆஜ­ரா­காமல் இருந்தால், சர்­வ­தேச பொலிஸார் ஊடாக உட­ன­டி­யாக கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தின் போது, ஒரு போதும் வெளிப்­ப­டுத்த முடி­யாத நிதி விவ­காரம் தொடர்­பி­லான உணர்­வு­பூர்­வ­மானை  ரக­சிய தக­வல்கள் மத்­திய வங்­கியின் சிற் சில தரப்­பி­னரால் வெளியே வழங்­கப்­பட்­டுள்­ளதா என விசா­ரணை செய்யு­மாறு  கடந்த 2016 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம் மத்­திய வங்­கியின் ஆளுநர் இந்­தஜித் குமா­ர­சு­வாமி முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இந்த முறைப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் பிணை முறி விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இது தொடர்பில் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள் தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜன­வரி 10 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப்பிரிவு சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைக் கோரி­யி­ருந்­தது.

பிணை முறி விநி­யோ­கத்தின் போது பல்­வேறு மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சட்ட மா அதிபர் அவதா­னித்­துள்ள நிலையில் அது தொடர்பில் அவ­தானம் செலுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு சட்ட மா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

அதன்­ப­டியே கடந்த 2 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அன்று பிரதி சொலி­சிற்றர் ஜெனரால் யசந்த கோதா­கொ­ட­வுடன் கோட்டை நீதி­மன்றுக்கு சென்ற குற்றப்   புல­னா­யவுப் பிரிவு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவையின் 109 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக முதல் அறிக்­கையை நீதி­வா­னுக்கு சமர்ப்­பித்து, பிணை முறி விவ­கா­ரத்தின் சந்­தேக நபர்­க­ளாக முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்­திரன், அவ­ரது மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ் மற்றும் பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வன முன்னாள் பணிப்­பாளர் கசுன் பலி­சேன ஆகி­யோரை பெய­ரிட்­டது.

குற்றப் புல­னா­யவுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், அர்ஜுன் மகேந்­திரன் மத்­திய வங்கி ஆளு­ந­ராக இருந்­து­கொண்டு, அப்பதவி தொடர்பில் பூரண அறிவை பெற்­றி­ருந்தும் அடிப்­படை சட்ட விதி­களை மீறி அவர், அப்­ப­தவி தொடர்பில் நம்­பிக்கை துரோகம் செய்து பொது நிதியை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பன உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

இது குறித்து கோட்டை நீதி­வா­னுக்கு பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் யசந்த கோதா­கொட கடந்த 2 ஆம் திகதி வெள்­ளி­யன்று முன்­வைத்த தக­வல்­களில் குறிப்­பிட்­ட­தா­வது,

இந்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழ்­வொன்­றூ­டா­கவும் விசா­ரிக்­கப்­பட்­டது. அந்த விசா­ர­ணை­க­ளுக்கு குற்றப் புல­னா­யவுப் பிரிவின் 4 அதி­கா­ரிகள் ஆணைக் குழு­வுடன் இணைந்து செயற்­பட்­டனர். இது மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க குற்றப் புல­னா­யவுப் பிரி­வுக்கு இல­கு­வா­னது.

ஜனா­தி­பதி ஆணைக் குழு இங்கு சில குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கவும் பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. அதன்­படி ஆணைக் குழுவின் அறிக்­கையை ஆராய்ந்து, அதன் சாட்­சிகள், ஆவ­ணங்­களை பரி­சீ­லித்து குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் தற்­போது சுய­மான குற்ற விசா­ர­ணை­களை நடாத்தி வரு­கின்­றனர்.

அந்த விசா­ர­ணைகள் தற்­போது ஆரம்­ப­கட்ட எடு­கோள்­களை எடுக்கும் வரை முன்­னே­றி­யுள்­ளன. அதன்­படி இந்த விசா­ர­ணை­களில் ஒருவர் செய்­துள்ள குற்­றங்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்­படும் போது அவர்­களை கைது செய்­யவும் முடியும்.

பிணை முறி விநி­யோக நட­வ­டிக்­கையின் போது கடை பிடிக்க வேண்­டிய சட்ட திட்­டங்கள் பல உள்­ளன. அவை மீறப்­பட்­டுள்­ளன.

அது தொடர்பில் குற்­ற­வா­ளி­களை 5 வரு­டங்கள் வரை சிறையில் அடைக்க முடியும். இந்த குற்­றங்­களை புரிய மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் உத­வி­யுள்ளார்.

இவை மேலோட்­ட­மாக பார்க்கும் போதே தெளி­வா­கின்­றன. இவை தொடர்பில் மேலும் சில சான்­றுகள் கிடைக்கும் பட்­சத்தில் இவர்கள் கைது செய்­யப்­ப­டுவர்.’ என தெரி­வித்­தி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே நேற்று காலை அர்ஜுன் அலோ­சியஸ், கசுன் பலி­சே­னவின் வீட்டை சுற்றி வளைத்த தலா 11 பேர் கொண்ட குற்றப் புல­னா­யவுப் பிரிவின் குழு­வினர் அவ்­வி­ரு­வ­ரையும் கைது செய்­தி­ருந்­தனர்.

குறித்த இரு­வ­ரையும் கைது செய்ய முன்னர் குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர், சாட்­சி­யங்கள் பல­வற்றை பதிவு செய்­துள்­ளனர்.

மத்­திய வங்கின் ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி, மத்­திய வங்­கியின் உதவி ஆளுநர் எச்.ஏ.கரு­ணா­ரத்ன, தகவல் பிரிவின் பணிப்­பாளர் டீ.என்.குமா­ரி­ஹாமி, அரச கடன் திணைக்­க­ளத்தின் மேல­திக அத்­தி­யட்சர் உபுல்­லத அம­து­கல, அத்­தி­ணைக்­க­ளத்தின் அதி­காரி கலா­நிதி எம்.எம்.ஆசிம், இலங்கை மத்­திய வங்­கியின் அரச கடன் அத்­தி­யட்சர் டி.எம்.பி. சரத்­சந்ர, அரச கடன் திணைக்­கள பதில் மேல­திக அரச கடன் அத்­தி­யட்சர் ஆர்.டி.டி. குண­சே­கர, பேப்­ப­சுவல் ட்ரசறீச் நிறு­வ­னத்தின் நுவன் சல்­தாது, இலங்கை ந்மத்­திய வங்­கியின் மேல­திக பணிப்­பாளர் சந்ர அஜித் அபே­சிங்க, வங்கி அல்லா நிதி நிறு­வ­னங்கள் தொடர்­பி­லான பணிப்­பாளர் அமில சஞ்­ஜீவ உள்­ளிட்­டோரின் வாக்கு மூலங்­களை இவ்­வாறு குற்றப் புல­ன­ன­யவுப் பிரி­வினர் பெற்­றி­ருந்­தனர்.

அத்­துடன் இந்த விவ­கா­ரத்தை விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் செய­லாளர் சும­தி­பால உடு­கம்­சூ­ரி­யவின் வாக்கு மூலத்­தி­னையும் பெற்­றுள்ள குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர், பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தில் இருந்த, வொய்ஸ் லொகர் கட்­ட­மைப்பில் இருந்து பறி­மாற்­றப்­பட்ட தொலை­பேசி அழைப்­புக்­களின் குரல் பதி­வு­க­ளையும் ஆராய்ந்­துள்­ளனர்.

அதன்­போது 2016 மார்ச் மாதம் 29 ஆம் திகதி கசுன் பலி­சே­னவும், அர்ஜுன் அலோ­சி­யஸும் மத்­திய வங்­கியின் மிக இர­க­சி­ய­மான உணர்வுபூர்­வ­மான தக­வல்­களை பறி­மா­ரி­யுள்­ளமை உறு­தி­யா­ன­தாக கூறும் குற்றப் புல­னா­யவுப் பிரிவு, அது உள்­ளிட்ட சாட்­சி­யங்­களின் பிர­காரம் அவர்கள் இரு­வ­ரையும் நேற்று கைது செய்­தனர்.

குற்றப் புல­ன­யவுப் பிரிவின் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒரு­வரின் தக­வலின் பிர­காரம், 2015 பெப்ர்­வரி மாதம் 27 ஆம் திகதி இடம்­பெற்ற பிணை முறி விநி­யோ­கத்தின் போது, பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வனம் 5 பில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பிணை முறி­க­ளையும், 2016 மார்ச் 29 ஆம் திகதி பிணை முறி ஏலத்தின் போது 26.6 பில்­லியன் ரூபா பிணை முறி­யி­னையும்,

2016 மார்ச் 31 ஆம் திகதி இடம் பெற்ற ஏலத்தில் 15.6 பில்­லியன் பிணை முறி­யி­னையும் கொள்­வ­னவு செய்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இத­னை­விட 2015 பெப்­ர­வரி 27 ஆம் திகதி ஏலத்தின் போது இலங்கை வங்கி ஊடாக பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வனம் 3 பில்­லியன் ரூபா பிணை முறி­களைப் பெற்­றுள்­ள­மையும் குற்றப் புல­னா­யவுப் பிரிவின் விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு இந்த விடயம் தொடர்பில் விசா­ரணை செய்த போது சாட்­சி­யங்­களை அழிக்க, மறைக்க முயற்­சிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

இலங்கை மத்­திய வங்­கியின் கடன் திணைக்­களம் 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 29 ஆம் திகதி முதல் மே மாதம் வரை வெளி­யிட்ட பிணை முறி விநி­யோகம் தொடர்பில், கணக்­காய்­வாளர் நாயகம் விஷேட அறிக்கை ஒன்­றினை தயார் செய்­துள்­ள­தாக கூறும் குற்றப் புலனாயவுப் பிரிவு, அந்த அறிக்­கையின் தீர்­மா­னங்­களின் பிர­காரம் 2015.02.27 மற்றும் 2016.3.29 ஆம் திகதி இடம்­பெற்ற பிணை முறி ஏலங்கள் இரண்­டிலும் முறையே 88358050.00 மற்றும் 784898755.00 ருப்பா நட்­டங்­களை தவிர்க்க நட­வ­டிக்கை எடுக்­கா­மைக்கு அதி­கா­ரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

அதன்­ப­டியே ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பரிந்­து­ரைகள் மற்றும் குற்றப் புல­னா­யவுப் பிரிவின் விசா­ர­ணை­களில், அர்ஜுன் மகேந்­தி­ரனும், அவர் மரு­மகன் அர்ஜுன் அலோ­சி­யஸும் கசுன் பலி­சே­னவும் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம், பங்­குகள் பிணையங்கள் கட்­டளைச் சட்டம் மற்றும் தண்­டனை சட்டக் கோவையின் கீழ் குற்­ற­மி­ழைத்­துள்­ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அரசுக்கு தேவையான நிதியை குறைந்த செலவில் பெற்று, அவற்றை அரசுக்கு கையளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன், வஞ்சகமான எண்ணத்துடன் அந் நிதியை தவறாக பயன்படுத்தி திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளதாக குற்றப் புலனாயவுப் பிரிவினர் கூறுகின்றனர்.

இதனைவிட தவறான பயன்பாடு, சதித் திட்டம் தீட்டல், பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள நிலையிலேயே, அர்ஜுன் மகேந்திரனுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் மருமகன் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோர் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 113, 386 உள்ளிட்ட அத்தியாயங்களின் கீழும் 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பங்குகள் பிணையங்கள் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாகவும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]

இவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News