ilakkiyainfo

ilakkiyainfo

அவள் இறப்பதை நான் பார்த்தேன்: அதை ரசித்தேன்!

அவள் இறப்பதை நான் பார்த்தேன்: அதை ரசித்தேன்!
January 05
20:49 2017

தனது முன்னாள் மனைவியை கொலை செய்துள்ள கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. ஷான் ஹார்டி என்பவரே இவ்வாறு தனது முன்னாள் மனைவியான ஆன் கிறிஸ்டின் ஜோன்ஸன் என்பவரை இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர். ஆனாலும் இவர்களது குழந்தையானது தாயாரின் வசம் இருந்ததால், தனது குழந்தை தனக்கு வேண்டும் என கணவனான ஷான் சண்டையிட்டுள்ளார்.

குழந்தை விவகாரம் தொடர்பாக இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனையடுத்து கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி டெக்ஸாஸில் வசித்து வந்த தனது கணவனை பார்ப்பதற்காக ஆன் சென்றுள்ளார். அதன் பின்னர் 3 வாரங்கள் ஆகியும் ஆனைக் காணவில்லை.

இது தொடர்பில் பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து ஷான் வீட்டினை சோதனை செய்ததில் ஆன் கைப்பேசி அங்கு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஷான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கணவனான ஷான் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, எங்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.

அவள் இறப்பதை என் கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படியே எனது வீட்டுக்கு வந்த அவளுடன் எனக்கு சண்டை ஏற்பட்டது.

அதன் இறுதியில் அவளை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை எனது வீட்டின் பின்புறத்தில் புதைத்தேன்.

இதனை யாரும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கு புதைத்த இடத்தில் அமோனியாவை போட்டு சரிசெய்தேன் என தெரிவித்துள்ளார். தற்போது இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News