ilakkiyainfo

ilakkiyainfo

அ.தி.மு.க – தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது

அ.தி.மு.க – தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது
March 11
03:16 2019

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வும், பா.ம.க-வும் இணைந்துள்ளன, அதேபோல தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க மற்றும் இதர சிறிய கட்சிகளும் இணைந்துள்ளன.

இந்த இரு கூட்டணியும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்றுவிட்டன. இன்னும் எந்தத் தொகுதியில் யார் போட்டியிட உள்ளனர் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாக வேண்டும். அது முடிந்தால், இந்த இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிடுவார்கள்.

WhatsApp_Image_2019-03-10_at_21.52.40_21438 அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது WhatsApp Image 2019 03 10 at 21தே.மு.தி.க விஜயகாந்த்

ஆனால், தே.மு.தி.க-வைப் பொறுத்த வரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது.

முன்னதாக, அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணையவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தத் தகவல் வெளியாகி நீண்ட நாள்கள் ஆகியும் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால், அதற்குள் பா.ம.க மற்றும் பா.ஜ.க உடனான தங்களின் கூட்டணியை அறிவித்தது அ.தி.மு.க. இதற்கிடையில், தி.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

இது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், தி.மு.க-வுடன் சொந்த விஷயம் தொடர்பான பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது; கூட்டணி இல்லை என சுதீஷ் அறிவித்தார்.

இதனையடுத்து, துரைமுருகனின் கருத்தை தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவும் கடுமையாக விமர்சித்தார். இதனால், தே.மு.தி.க-தி.மு.க இடையே கூட்டணி இல்லை என உறுதியானது.

WhatsApp_Image_2019-03-10_at_21.30.02_21542 அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது WhatsApp Image 2019 03 10 at 21எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் இன்று, சென்னையில் அ.தி.மு.க உடனான தே.மு.தி.க கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க – தே.மு.தி.க இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் பங்கேற்றனர். அ.தி.மு.க தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, அ.தி.மு.க – தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் அ.தி.மு.க சார்பில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ், தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் கையெழுத்திட்டனர்.

 

இதை கடந்த 5ந்தேதியே ஓத்துக்கொண்டிருந்தால் சிறப்பாக கண்ணியமாக இருந்திருக்கும் ..வொரு சில வேண்டாத நிகழ்வுகளும் ,விமர்சனங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும் .ஊடகங்களுக்கும் ,எதிர்க்கட்சிகளுக்கும் மெல்லுவதற்க…

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News