ilakkiyainfo

ilakkiyainfo

அப்ரிடி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி

அப்ரிடி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி
March 02
10:52 2014

இந்தியாவுக்கு எதிரான  பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டால் த்ரில் வெற்றி பெற்றது.  இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், , பங்களாதேஷ் மற்றும் ஆப்காகிஸ்தான் ஆகிய 5 அணிகள் இடையிலான 12அவது ஆசிய கிண்ண கிரிக்கெட் திருவிழா பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது.

இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய முன்னணி அணிகளை  தோற்கடித்துள்ள இலங்கையின்  இறுதிவாய்ப்பு  ஏறக்குறைய  உறுதியாகி விட்டது. மற்றொரு  இடத்திற்கு எஞ்சிய 4 அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த தொடரில், ஆவலை ஏற்படுத்தியுள்ள முக்கிய இரு அணிகளான இந்தியா–பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் மிர்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு 246 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இந்திய அணியில் ஜடேஜா 52 ஓட்டங்களுடனும், மிஷ்ரா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல்  களத்தில் நின்றனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 56 ஓட்டங்களும், ராயுடு 58 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 246 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது. ஷர்ஜீல் 25, அஹ்மத் சேஹ்ஷாத் 42, முகமட் ஹபீஸ் 75 ஓட்டங்களை பெற்று வலுவான அடித்தளம் அமைத்தனர்.

நடுவரிசையில் சற்றே தடுமாறினாலும், கடைசிக் கட்டத்தில் அப்ரிடி சிறப்பாக ஆடி, 34 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதிக் கட்டத்தில் பரபரப்பான ஓவரில் சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார் அப்ரிடி.

இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தத் தோல்வியின் மூலம், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கியது.  போட்டியின் ஆட்டநாயகனாக முஹமட் ஹபீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

நேரடி ஒளிபரப்பை காண இங்கே அழுத்தவும் http://www.starsports.com/cricket/video/index.html?v=1309251

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News