ilakkiyainfo

ilakkiyainfo

ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கமுற்ற வைத்தியசாலையில்!

ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கமுற்ற வைத்தியசாலையில்!
October 04
15:37 2017

நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையினுள் சுவாசிப்பதற்கு போதுமான ஒட்சிசன் வாயு போதுமானதாக இல்லாமையாலே 235 பெண் ஊழியர்கள் மயக்கமடைந்ததாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை தலைமை வைத்திய அதிகாரி திலின பெரேரா தெரிவித்தார்.

02  ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கமுற்ற வைத்தியசாலையில்! 02

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9.45 மணியளவில் கடமையிலிருந்த பெண் ஊழியர்கள் திடீரென மயைக்கமுற்று வீழ்ந்துள்ளனர்.

03-1-750x422  ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கமுற்ற வைத்தியசாலையில்! 03 1

மயக்கமுற்றவர்களில் 135 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலும் மிகுதி ஊழியர்கள் 100 பேர் கொண்ட வைத்திய குழுவினரால் ஆடைத்தொழிற்சாலை வளாகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

01-750x422  ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கமுற்ற வைத்தியசாலையில்! 01

ஆடைத்தொழிற்சாலையானது கண்ணாடிகளினால் முடப்பட்ட நிலையில் காணப்படுவதாலும் 850 பேர் வரையில் கடமையாற்றும் நிலையில் சுவாசிப்பதற்கு போதுமான காற்று உள்வராமையாலும் வெப்பகால நிலையாலும் இவ்வாறு மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

06-750x420  ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கமுற்ற வைத்தியசாலையில்! 06

மேலும் திடீரென மயக்கமுற்றவர்களை வைத்தியசாலையில் கொண்டு சென்ற போதும் வைத்தியசாலை வளாகத்திற்கும் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கும் நோர்வூட் பிரதேச மக்கள் படையெடுத்தமையினால் பதற்ற நிலை தோன்றியது

சம்பவத்தில் யாருக்கும் உயிராபத்துக்கள் இல்லை என்றும் சிகிச்சை பெற்று சில வீடு திரும்புவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News