ilakkiyainfo

ilakkiyainfo

ஆண்களும் இனி கருத்தரிக்கலாமா பெண்களும் இதை ஆதரிக்கலாமா?

ஆண்களும் இனி கருத்தரிக்கலாமா பெண்களும் இதை ஆதரிக்கலாமா?
September 09
14:21 2017

இனிமேல் தண்ணீர் பருகும் ஒவ்வொரு முறையும் ஆண்கள் தங்கள் அடிவயிற்றைத் தடவிப் பார்க்க வைத்து விட்டனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள்

ஒரு நாளா­வது பெண்­ணாக இருந்து பார்த்­தால்தான் எங்­களின் கஷ்டம் உங்­க­ளுக்குப் புரியும் என்று பெண்கள் விடும் சாபம் இனி பலிக்கப்போகி­றது?

ஆண்­களும் கருத்­த­ரிக்­கலாம் எனும் அதிர்ச்சி ரிப்­போர்ட்டைத் தந்து திகில் கிளப்­பு­கி­றார்கள் இங்­கி­லாந்து நாட்டு விஞ்ஞா­னிகள்.

சார்லஸ் டைலர் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து விஞ்­ஞா­னிகள் குழு, கழி­வுப்­பொ­ருட்­களால் சுற்­றுச்­சூழல் மாற்றம் குறித்த ஆராய்ச்சியில் ஈடு­பட்­டது.

ஆராய்ச்­சியின் ஒரு பகு­தி­யாக அந்­நாட்டு ஆறு­களில் வாழும் மீன்­களை சோதனைக்குட்­ப­டுத்­தி­யதில், ஆண் மீன்­க­ளிடம் விந்­துக்குப் பதிலாக கரு­முட்டை இருப்­பதைக் கண்டு அனை­வரும் அதிர்ந்­தனர்.

இயற்­கைக்கு மாறாக இது சாத்­தி­ய­மா­னது எப்­படி? என்று குழம்பிப் போனார்கள்.

பின்னர் அந்த ஆற்றின் நீர் மாதி­ரி­களைச் சேக­ரித்து சோதனை செய்­ததில் பெண்­தன்­மையை உரு­வாக்­கக்­கூ­டிய ஈஸ்­டி­ரோஜின் எனும் ஹார்மோன் அதில் கலந்­தி­ருப்­பதைக் கண்­டு­பி­டித்­தனர்.

அதி­கப்­ப­டி­யான இர­சா­யன மற்றும் உயி­ரியல் கழி­வுகள் நீர்­நி­லை­களில் ஈஸ்­டி­ரோ­ஜினை உரு­வாக்­கி­விடும் என்­பது அறி­வியல் ஆராய்ச்­சி­களின் முடிவு.

உலக நாடுகள் அனைத்­திலும் ஓடும் மாசு­பட்ட நதி, ஆறு மற்றும் நீர்நிலை­களில் ஈஸ்­டி­ரோஜின் என்­கிற ஹார்­மோன்கள் கலந்­தி­ருக்க வாய்ப்­பி­ருப்­ப­தா­கவும் விஞ்­ஞா­னிகள் குழு தெரி­வித்­துள்­ளது.

எவ்­வ­ளவு தான் நீரைச் சுத்­தி­க­ரித்­தாலும் அதிலுள்ள ஹார்­மோன்­களை அழிக்க முடி­யாது என்றும் அந்த நீரை மனி­தர்கள் பரு­கு­வ­தற்­கான சூழல் ஏற்­பட்டால் அது பெரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்றும் அடுத்த குண்டை தூக்­கிப்­போட்டு மனித சமூ­கத்தை அதிர்ச்­சிக்கு உள்­ளாக்கி இருக்­கின்­றனர்.

அது இந்த நீரைப் பருகும் ஆண்­களும் கருத்­த­ரிக்க முடியும் என்­பதே.

இந்த ஆய்வு முடிவு குறித்துப் பிர­பல பாலின மருத்­துவர் காம­ரா­ஜிடம் பேசி­ய­போது, ஆண்கள் கர்ப்­ப­மாகும் வாய்ப்பே இல்லை என்று எடுத்த எடுப்­பி­லேயே  அடித்துப் பேசி­யவர், மனி­தர்­களின் இனப்­பெ­ருக்க முறையும் மீன்­களின் இனப் பெருக்க முறையும் முற்­றிலும் மாறு­பா­டா­னது.

பொது­வாகப் பெண்­மீன்கள் கரு­முட்­டையை வயிற்றில் வைத்­தி­ருக்­காது. கரு­முட்­டை­களை வெளி­யேதான் சுமக்கும். இந்தப் பெண் மீன்கள் மீது காதல் கொள்ளும் ஆண் மீன்கள், அந்தக் கரு­முட்­டையின் மேல் உயி­ர­ணுக்­களைப் பீச்­சி­ய­டிக்கும்.

இப்­படி வித்­தி­யா­ச­மான உட­ல­மைப்பைப் பெற்­றி­ருப்­பதால், புற­வெ­ளியில் ஏற்­படும் மாற்­றத்­திற்குப் பாதிக்­கப்­படும் முதல் உயி­ரினம் மீன்கள் தான்.

இந்த ஈஸ்­டி­ரோஜின் ஹார்மோன் பெண்­க­ளி­டமும் சுரக்­கக்­கூ­டிய ஒன்­றுதான். பெண்­க­ளுக்­கான இலட்­ச­ணங்­களை இந்த ஈஸ்­டி­ரோ­ஜின்­களே உறுதி செய்­கின்­றன.

இந்த மாதி­ரி­யாக ஒரு ஹார்மோன் பல­கீ­ன­மான வடி­வ­மைப்பும் உடல் உறுப்­பு­களும் உள்ள மீன்­களைத் தாக்கும் போது, மீன்கள் பாலினம் பாதிக்­கப்­ப­டு­வது இயற்கை.

ஆனால் இது­போன்ற பாதிப்­புகள் மனி­தர்­க­ளுக்கு ஏற்­ப­டாது. அவ்­வ­ளவு எளி­தாக ஹார்மோன் அட்டாக் செய்து ஆண்­களில் பாலின மாற்­றத்தைக் கொண்டு வந்­து­விட முடி­யாது என்று விவ­ரித்­த­வ­ரிடம் இங்­கி­லாந்து விஞ்­ஞா­னி­களின் ஆய்வில் ஆண்கள் கர்ப்பம் குறித்து கருத்தை வெளி­யிட காரணம் என்ன என்று கேட்­ட­போது….

சுற்­றுப்­புறச் சூழல் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­துதான் காரணம். சுற்­றுச்­சூழல் மற்றும் சமூ­கத்தின் மீது இருக்கும் அக்­க­றையில் சொல்­லப்­ப­டு­கின்ற விஞ்­ஞான பொய்தான் இது என்றார்.

ஆனால் அதுக்­காக இந்த விட­யத்தை அப்­ப­டியே ஒதுக்கித் தள்­ளி­விட முடி­யாது. ஹார்­மோனால் ஆண்­க­ளுக்குப் பாலின பாதிப்பு எதுவும் ஏற்­ப­டாது என்­றாலும் வேறு மாதி­ரி­யான பிரச்­சி­னை­களை சந்­திக்க வேண்­டி­வரும்.

குறிப்­பாக ஆண்மைக் குறை­பாடு, உடலில் பெண்­தன்மை ஏற்­ப­டுதல், மலட்­டுத்­தன்மை போன்ற பல பாதிப்­புகள் ஆண்­க­ளுக்கு ஏற்­ப­டலாம்.

மேலும் ஈஸ்­டி­ரோஜின் தண்­ணீரில் மட்டும் இல்லை. பாக்கெட் செய்­யப்­பட்ட உணவுப் பொருட்கள், வாகனப் புகை, பூச்­சிக்­கொல்லி மருந்­துகள் என எல்­லா­வற்­றிலும் இருக்­கி­றது என்று சர­வெ­டி­களை வீசினார்.

வயல், தோட்­டங்­களில் பூச்­சிக்­கொல்லி மருந்­துகள் தெளிக்கும் விவ­சா­யி­க­ளுக்கு ஹார்மோன் பாதிப்பால் நோய் வரு­வ­தற்கு அதிக வாய்ப்பு இருக்­கி­றது.

அங்கு விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும் போது நோய் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. மொத்தத்தில் இரசாயன கழிவுகள் கலந்துள்ள நீரைப் பருகினால் ஆண்களுக்கு மட்டுமல்ல, மனித சமூகத்துக்கே பாதிப்பு என்றார்.

எது எப்படியிருப்பினும் இனி மேல் தண்ணீர் பருகும் ஒவ்வொரு முறையும் ஆண்கள் தங்கள் அடிவயிற்றை தடவிப் பார்க்க வைத்துவிட்டனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News