பொதுவாக இதை பற்றி பெண்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஆண்களில் பலரும் இந்த இடங்களை பற்றி அதிகமாக அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.. உடலுறவுக்கு முன் விளையாட்டுகளின் போது ஆண்களின் இந்த இடங்களை தொடுவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் பெண்களிடன் இருந்து இதனை எதிர்பார்க்கிறார்கள்.
கழுத்து பகுதி ஒரு மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். இந்த பகுதியில் தொடும் போது ஆண்களின் உடலில் ஒரு வித நடுக்கம் உண்டாகும். கழுத்துப்பகுதியை உதடுகளால் வருடுவதும், மெதுவாக முத்தமிடுவதும் ஆண்களுக்கு அதிக இன்பம் உண்டாகும். கழுத்திலிருந்து மார்பு பகுதிக்கு நகர்வதும், பின் கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கு நகர்வதும் அவர்களுக்கு ஒருவித எழுச்சியை உண்டு செய்யும்.
காதுகள் உணர்ச்சியை தூண்டும் மிகச்சிறந்த இடமாகும். இந்த இடத்தை மெல்லமாக கைகளால் வருடுவது அல்லது நாக்கால் வருடுவது போன்றவற்றின் மூலம் உங்களது துணையை சிறையெடுக்கலாம்.
ஆண்களின் உடல் பகுதி முழுவதையும் வருடி விடுங்கள். அவர்களது சின்ன சின்ன உறுப்புகளையும் கூட தவறாமல் வருட வேண்டியது அவசியம். பிட்டம் போன்ற பகுதிகளில் ஆண்களுக்கு மசாஜ் செய்வதால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதாம்.
நீங்கள் ஆண்களை முகத்தை கையாளும் விதம் மூலமாக இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கலாம். உங்களது இரு கைகளாலும் அவரது கன்னங்களை பற்றிக் கொள்ள வேண்டும்.
இதனை ஏன் கைகளால் செய்ய வேண்டும் என்றால், நமது கைகளுக்கு மிகச்சிறந்த சக்தி உள்ளது. ஏதேனும் பேசிக் கொண்டே உங்களது கணவருடைய தலைமுடிகளை கோதி விடுங்கள்.. இதனால் அவர் சோர்வுகளை எல்லாம் மறந்து விடுவார். உங்கள் மீதான காதலும் நெருக்கமும் அதிகரிக்கும்.
ஆண்களுக்கு அவர்களது மார்பகங்களுடன் நீங்கள் விளையாடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அவர்களது மார்பக காம்புகளை தீண்டுவது அவர்களுக்கு அதிக சுகத்தை அளிக்கும். மார்பக காம்புகளை உங்களது நாக்கால் வருடுவது போன்றவை அவர்களுக்கு அதிக இன்பத்தை தரும். இதை மிக மிக மெதுவாக செய்ய வேண்டியது அவசியம்.
நாக்கு பகுதி மிகவும் அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உணர்ச்சி பூர்வமான பகுதியாகும். இந்த பகுதியை உங்களது நாக்கால் வருடலாம். முத்தமிடும் போது நாவையும் சேர்த்து சுவைக்கலாம்.