ilakkiyainfo

ilakkiyainfo

ஆண் நண்பர்கள் விற்பனை!! : புதிய கடை திறப்பு குவிந்த பெண்கள்- (வீடியோ)

ஆண் நண்பர்கள் விற்பனை!! : புதிய கடை திறப்பு குவிந்த பெண்கள்- (வீடியோ)
December 30
23:54 2017

சீனாவின் ஹைகொ பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பெண்கள் தங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை ஆண் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக ஷோ ரூம் திறக்கப்பட்டுள்ளது.

479826D100000578-5215121-image-a-62_1514380358131  ஆண் நண்பர்கள் விற்பனை!! : புதிய கடை திறப்பு குவிந்த பெண்கள்- (வீடியோ) 479826D100000578 5215121 image a 62 1514380358131

அந்த ஷோ ரூம்பில் 6 அழகான ஆண்கள், திருமணம் செய்யாத ஆண்கள் ஒரு பெட்டியின் உள்ளே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சரசாரியாக 6 அடி உயரம் இருந்தனர்.

இதனால் இந்த வருடம் அவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த ஷோ ரூம்மின் உரிமையாளர் 6 அழகான ஆண்களை அங்கிருக்கும் பெட்டி ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார்.

4797EDAB00000578-5215121-image-a-48_1514379673790  ஆண் நண்பர்கள் விற்பனை!! : புதிய கடை திறப்பு குவிந்த பெண்கள்- (வீடியோ) 4797EDAB00000578 5215121 image a 48 1514379673790அதன் பின் அந்த பெட்டியில் ஒரு QR கோடு ஒன்றை வைத்துள்ளார்.

அதில் உங்களுக்கு இவர் தேவையா, இவருடன் நீங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டுமா, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா, இவர் உங்களுக்கு ஒரு அருமையான நண்பர் போன்று இருப்பார்,

இவர்களில் ஒருவருடன் நீங்கள் ஒரு மணி நேரம் பொழுதை கழிப்பதற்கு 11p சீன மதிப்பு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை அறிந்த பெண்கள்ஷோ ரூம்மில் குவிந்தனர் . ஆனால் அறிவிக்கப்பட்ட 6 நிமிடங்களிலே அந்த 6 ஆண்களும் வாடகைக்கு எடுத்துவிட்டதால் வந்த பெண்கள் ஏமாற்றத்துடனே சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது எனவும், இதனால் இந்த சலுகை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டுமே என்றும் அதுவும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே என்ற நிபந்தனையும் உள்ளது.

இப்படி தங்கள் ஆண் நண்பர்களுடன் செல்லும் பெண்கள் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க முடியாது எனவும், அவர்கள் உங்களுக்கு ஒரு நண்பர் மட்டுமே எனவும், இந்த ஷாப்பிங் மாலில் மட்டுமே நீங்கள் அவர்களுடன் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதில் இருந்த ஒரு நபரை 20 வயது மதிக்கத்தக்க 4 பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் முடிந்துள்ள நிலையில், இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

Jey

What is her name and address..?? [...]

Jey

Krishna [...]

இலங்கை பத்திரிகைகள்

English News