ilakkiyainfo

ilakkiyainfo

ஆபரேஷன் செய்த பெண் வயிற்றில் கத்தரிக்கோல் – தெலுங்கானாவில் டாக்டர்கள் மெத்தனம்

ஆபரேஷன் செய்த பெண் வயிற்றில் கத்தரிக்கோல் – தெலுங்கானாவில் டாக்டர்கள் மெத்தனம்
February 09
20:07 2019

தெலுங்கானா மாநிலத்தில் ஆபரேஷன் செய்ய வந்த பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் கத்தரிக்கோலை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் மங்கலஹாட் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி சவுத்ரி (32), குடலிறக்க நோயால் கடும் பாதிப்பு அடைந்தார்.

இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (NIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவானது.

கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டாக்டர்கள் அவருக்கு ஆபரேஷன் செய்தனர். உடல்நலம் தேறி வந்தவருக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

201902091945070311_1_husband1._L_styvpf  ஆபரேஷன் செய்த பெண் வயிற்றில் கத்தரிக்கோல் - தெலுங்கானாவில் டாக்டர்கள் மெத்தனம் 201902091945070311 1 husband1இதைத்தொடர்ந்து, ஆபரேஷன் செய்த மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். வயிற்றில் நீளமான கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், ஏற்கனவே நிம்ஸ் மருத்துவமனையில் நடந்த ஆபரேஷனில் தவறுதலாக கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்துள்ளது தெரிய வந்தது. நிம்ஸ் மருத்துவமனையில் நடந்த இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மகேஸ்வரியின் கணவர் மருத்துவமனை மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News