ilakkiyainfo

ilakkiyainfo

ஆம்புலன்ஸ் கொடுக்காத எய்ம்ஸ்… இறந்த மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை… பாட்னாவில் கொடூரம்- (வீடியோ)

ஆம்புலன்ஸ் கொடுக்காத எய்ம்ஸ்… இறந்த மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை… பாட்னாவில் கொடூரம்- (வீடியோ)
October 20
06:07 2017

பாட்னா: பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு மருத்துவம் அளிக்காமல் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி வரிசையில் இருந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதையடுத்து இறந்த மகளை வீடு வரை தோளிலேயே சுமந்து சென்றுள்ளார் அந்தப் பெண்ணின் தந்தை. சிகிச்சைக்கு வந்த சிறுமி பலி ஆன சம்பவமும், அதையடுத்து ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு அவர் மகளை சுமந்து சென்ற வீடியோ வெளியானதும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுஷன் குமாரி பீகாரின் ‘லகிஷராய்’ என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக கொடூரமான காய்ச்சல் நிலவி வந்து இருக்கிறது.

நாளுக்கு நாள் உடலில் வெப்பவும், காய்ச்சலும் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இவருக்கு உள்ளூரில் கொடுக்கப்பட்ட மருத்துவம் எதுவும் பலன் அளிக்காததால் பாட்னாவில் இருக்கும் உயர்தர மருத்துவமனையான பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவருக்கு உடனடியாக மருத்துவம் பார்க்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை ராம்பாலாக் கூறியதாவது ”மருத்துவமனைக்கு இவளை மிகவும் மோசமான நிலையில்தான் கொண்டு வந்தோம்.

ஆனால் இங்கு இவர்கள் உடனியாக சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளாமல் விண்ணப்ப படிவங்களைக் கொடுத்து நிரம்ப சொல்லிவிட்டனர்.

அந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதை வரிசையில் நின்று கொடுப்பதற்குள் அதிக நேரம் ஆகிவிட்டது” என்றார். சரியாக ராம்பாலாக் விண்ணப்ப படிவத்தை நிரம்பி வெளியே வரும் நொடியில் அவரது மகள் ரவுஷன் குமாரி மரணம் அடைந்து இருக்கிறார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் இருந்து உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ராம்பாலாக் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

மேலும் அவர் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து இவர் ஆம்புலன்ஸ் இல்லாமல் , இறந்த மக்களின் உடலை தோளிலேயே சுமந்து வீடு வரை சென்றிருக்கிறார்.

இணையத்தில் வெளியான வீடியோ

இந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர் அவரது மகளை சுமந்து செல்லும் சோகமான காட்சிகள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி இருக்கிறது.

இதன் காரணமாக இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாகி உள்ளது. காலையில் அந்தப் பெண்ணின் மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகமே மதியத்திற்குள் இப்படி ஒரு செயலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News