ilakkiyainfo

ilakkiyainfo

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை
November 02
04:39 2019

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நோயுற்ற அண்ணனுக்கு ஆம்புலன்ஸ் தராததால் செங்கற்களை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டியில் அண்ணனை சிகிச்சைக்காக தங்கை அழைத்துச் சென்றதாகவும், ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தி இந்து தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.

சிறிதுகாலமாக உடல் நலம் பாதித்த நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்துள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட அவரது தங்கை விழுப்புரத்திலிருந்து அண்ணனைப் பார்க்க வந்தார்.

_109500357_523048 ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை 109500357 523048அவரது உடல் நிலையைப் பார்த்து பதறிப்போய் பக்கத்தில் 4 கி.மீ.தொலைவில் உள்ள புதுவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்டபோது, செங்கல் சூளை தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வேறு வழியில்லாத நிலையில், கையில் பணமும் இல்லை என்பதால் செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் அண்ணனை படுக்கவைத்து உடன் வேலைச் செய்யும் நபர் ஒருவரை அழைத்துக்கொண்டு தானே தள்ளுவண்டியை இழுத்துச் சென்றுள்ளார் . வழியெங்கும் அவரைக்கடந்துச் சென்ற வாகன ஓட்டிகள் யாரும் உதவ முன்வரவில்லை.

ஆனால் அதை புகைப்படமும், வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் என்று இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News