ilakkiyainfo

ilakkiyainfo

ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)

ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)
April 18
17:18 2019

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை மண்ணுடன் சங்கமமாகின.

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில்  மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று அதிகாலை  இடம்பெற்ற  வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட  10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த  சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் உடல்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டன.

பத்து பேரின் உடல்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

அங்கு நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்து திரண்டு வந்த ஆயிரம் கணக்கான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Mahiyanganaya-Accident-Funeral-1 ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி) ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி) Mahiyanganaya Accident Funeral 12 e1555607778127இதனால் மட்டக்களப்பு நகரம் எங்கும் சோகமயமாக காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் மற்றும்  இறுதி ஆராதனைகளுக்காக மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் உடல்கள் வைக்கப்பட்டன.

இதன் பின்னர் சடலங்கள் புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இறுதி அஞ்சலி வழிபாடு ஒப்புகொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு பேரின் உடல்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு டச்பார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களின் உடல்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டன.

Mahiyanganaya-Accident-Funeral-2 ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி) ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி) Mahiyanganaya Accident Funeral 2மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், மாணவர்கள், இளைஞர்கள், கிராமத்தவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News