ilakkiyainfo

ilakkiyainfo

ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம்

ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம்
March 16
16:39 2019

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். பல்பலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் பேரணி இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.

yal  ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம் yalமதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் இந்தப் ரேணியில் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ. கஜேந்திரன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

yall  ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம் yallபால், வயது வேறுபாடின்றி கொழுத்தும் வெயிலிலும் பெருமளவானோர் உணர்ச்சி பொங்கக் கலந்து கொண்டுள்ளனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் எனச் சாரப்பட்ட கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கிச் சென்றனர்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News