ilakkiyainfo

ilakkiyainfo

ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தது எப்படி? – சிறிலங்கா காவல்துறை உயர்மட்ட விசாரணை

ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தது எப்படி? – சிறிலங்கா காவல்துறை உயர்மட்ட விசாரணை
January 09
11:50 2017

அம்பாந்தோட்டையில் தெற்கு கைத்தொழில் அபிவிருத்திய வலய ஆரம்ப நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு, நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்றுமுன்தினம், தெற்கு கைத்தொழில் அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக, கூட்டு எதிரணியினர், பேரணியாகச் சென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து, நிகழ்வில் பங்கேற்றிருந்த சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்த முயன்றனர். எனினும் சிறிலங்கா காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் விரட்டியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, கடுமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு நிகழ்வு நடைபெறும் பகுதிக்கு வந்தார்கள் என்று காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நிகழ்வு நடைபெறும் பகுதிக்கு, கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே, காவல்துறையினர் அனுமதித்திருந்தனர்.

ஆனாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வருவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே, அங்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தச் சம்பவம் நடந்த போது, சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அங்கு ஏற்கனவே வருகை தந்திருந்தனர்.

நீதிமன்றத் தடையை மீறி பேரணி நடத்தியவர்கள், நிகழ்வு நடைபெறும் பகுதி வரை வந்தது எவ்வாறு என்பது குறித்தே விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

கலகம் விளைவித்த 32 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

hambantota-protesters  ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தது எப்படி? – சிறிலங்கா காவல்துறை உயர்மட்ட விசாரணை hambantota Protestersஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கலகம் விளைவித்து, அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட 32 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள், இன்று (09) ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் அவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை மீறி இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு, 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் வயது குறைந்த சிறுவர் ஒருவர் உள்ளடங்குவதாக நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த சிறுவனை காலி, கிதுலம்பிட்டியவிலுள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட சீன – இலங்கை அபிவிருத்தி வலய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட மஹிந்த அணி ஆதரவாளர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News