ilakkiyainfo

ilakkiyainfo

ஆர்யா-சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் இன்று நடந்தது – நடிகர்-நடிகைகள் வாழ்த்து

ஆர்யா-சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் இன்று நடந்தது – நடிகர்-நடிகைகள் வாழ்த்து
March 10
21:01 2019

நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் வைத்து இன்று திருமணம் நடந்து முடிந்தது. நடிகர்-நடிகைகள் பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது.

கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

201903101146244517_1_Arya-Sayyeshaa-Marriage2._L_styvpf  ஆர்யா-சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் இன்று நடந்தது - நடிகர்-நடிகைகள் வாழ்த்து 201903101146244517 1 Arya Sayyeshaa Marriage2அதன்பிறகு பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடிவந்தனர். இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்தது.

சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று, சாயிஷாவையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டார்.

திரை பிரபலங்கள் பலரும் ஆர்யா – சாயிஷா ஜோடிக்கு திருமண வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே மார்ச் 9 மற்றும் 10-ந் தேதிகளில் தங்களது திருமணம் நடைபெறும் என ஆர்யா-சாயிஷா ஜோடி தெரிவித்தது.

201903101146244517_2_Arya-Sayyeshaa-Marriage6._L_styvpf  ஆர்யா-சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் இன்று நடந்தது - நடிகர்-நடிகைகள் வாழ்த்து 201903101146244517 2 Arya Sayyeshaa Marriage6திருமணத்தை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் நடிகை சாயிஷா போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News