ilakkiyainfo

ilakkiyainfo

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!
December 05
13:29 2017

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

சுயேட்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நடிகர் விஷால் வேட்புமனுவை ஏற்பதில் தொடக்கம் முதலே நீடித்தது. விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஷால் மனுவில் கணக்கு, உறுதிமொழி சரியாக இல்லை என புகார் கூறினார். இதனையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே தீபாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அவரது வேட்புமனுவில் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என கூறப்பட்டது.

பின்னர் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

எனது வாக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷ க்கே , இந்த நாட்டிடை நிர்வகிக்க இவர் தான் சரியான ஆள் , அந்த [...]

ஜெயா ஒரு தேவடியா என்று நான் பல முறை கருத்து தெரிவித்து உள்ளேன் , ஒரு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News