ilakkiyainfo

இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் – ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல”

இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் – ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல”
November 02
18:22 2019

இங்கிலாந்திலுள்ள எஸ்ஸெக்ஸில் ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சோந்தவர்கள் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தொழிற்துறை மண்டலம் ஒன்றில், கண்டெய்னர் லாரியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 39 பேரும் தொடக்கத்தில் சீனர்கள் என்று கருதப்பட்டது.

“இப்போது இதில் இறந்தவர்கள் குறித்து முழு விபரங்களை பெற, பிரிட்டனுக்கும், வியட்நாம் அரசுக்கும் இடையே தொலைபேசி வழியாக நேரடித் தொடர்பு ஏற்பட்டுள்ளது” என்று எஸ்ஸெக்ஸ் காவல்துறை கூறியுள்ளது.

இவ்வாறு இறந்தோரில் தங்களின் உறவினர்கள் இருக்கலாம் என அஞ்சி பல வியட்நாம் குடும்பங்கள் தாங்களே முன்வந்து தகவலை தெரிவித்திருந்தன.

_109500280_12b2e5ce-665e-471b-ac49-a5314b39cb53 இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் - ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல” இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் - ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல” 109500280 12b2e5ce 665e 471b ac49 a5314b39cb53செவ்வாய்கிழமை தனது குடும்பத்திற்கு அனுப்பிய செய்தி ஒன்றில் வெளிநாடு செல்லும் தனது முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக 26 வயதான ஃபாம் தி திரா மை தெரிவித்திருந்தார்.

இந்த 31 ஆண்கள் மற்றும் எட்டு பெண்களின் இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

“இறந்தவர்கள் அனைவரும் வியட்நாமியர்கள் என்று நம்புகிறோம். அந்நாட்டு அரசோடு நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம்” என்று துணை தலைமை காவலர் டிம் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.

இறந்தவர்களை அடையாளம் காணும் நிலையில் காவல்துறையினர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

_109500281_c61fa753-27e2-4196-a9fb-8a5abed84164 இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் - ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல” இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் - ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல” 109500281 c61fa753 27e2 4196 a9fb 8a5abed84164இந்த சம்பவத்தால் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் லண்டனிலுள்ள வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களை தனிப்பட்ட முறையில் இன்னும் அடையாளம் காண வேண்டியுள்ளது என்றும், இதனை வியட்நாம் மற்றும் பிரிட்டனிலுள்ள அதிகாரிகள் உறுதி செய்வர் என்றும் வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இறந்தோரின் உறவினர்கள் யாராவது இறந்த தங்களின் உறவினரின் சடலத்தை தாயகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென விரும்பினால், அந்த குடும்பங்களுக்கு வியட்நாம் மற்றும் பிரிட்டனிலுள்ள தொடர்புடைய துறை அதிகாரிகளோடு ஒத்துழைத்து உதவத் தயாராக இருப்பதாகவும் லண்டனிலுள்ள வியட்நாம் தூதரகம் தெரிவித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்