ilakkiyainfo

ilakkiyainfo

இடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க!!- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)

இடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க!!- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)
June 09
23:37 2019

அண்­மையில் நடை­பெற்று முடிந்த லோக் சபா தேர்­தலில் அனைத்து தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெ­று­வ­துடன், தமி­ழ­கத்தில் வெற்­றி­ட­மாக இருந்த 22 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெ­று­வதே தி.மு.க வின் குறிக்­கோ­ளாக இருந்­தது.

தேர்தல் நடை­பெற்ற லோக்­சபா தொகு­தி­களில் ஒன்றைத் தவிர, ஏனைய 37 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெற்று சாதனை படைத்­தது. எனினும் 22 சட்­டப்­பே­ரவை தொகு­தி­க­ளுக்­கான இடைத்­தேர்­த­லிலும் வெற்­றி­பெற்று தமி­ழ­கத்தின் ஆட்­சியைக் கைப்­பற்­று­வது என்ற தி.மு.க வின் திட்டம் நிறை­வே­றாமல் போய்­விட்­டது.

இடைத்­தேர்தல் நடை­பெற்ற 22 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெற்­றி­ருந்தால் தி.மு.க வின் எதிர்­பார்ப்பு நிறை­வே­றி­யி­ருக்கும். மு.க.ஸ்டாலினும் தமி­ழக முதல்­வ­ரா­கி­யி­ருப்பார்.

13 தொகு­தி­களில் மாத்­திரம் வெற்­றி­பெற்­றதால் தி.மு.க வின் எதிர்­பார்ப்பு நிறை­வே­றாமல் போனது.

அதே­வேளை, எதிர்­பா­ராத வகையில் 9 தொகு­தி­களில் வெற்­றி­ பெற்­ற­தன்­ மூலம் ஆளும் அ.தி.மு.க. தமது ஆட்­சியைத் தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளது.

எடப்­பா­டியின் ஆட்சி தப்­பி­யது.

தற்­போது மத்­தியில் பா.ஜ.க. தலை­மையில் மீண்டும் ஆட்சி அமைந்­துள்ள நிலையில், எடப்­பாடி அரசை எதுவும் செய்ய முடி­யாது என்­பதை தி.மு.க. நன்கு உணர்ந்­துள்­ளது.

ஆனால், இடைத்­தேர்­தல்­களில் அதி­க­ளவு பணத்தை செல­வு­செய்து வெற்­றி­பெற்­ற­தன்­மூலம் எம்.எல்.ஏக்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள், தி.மு.க.ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்பில் இருக்­கின்­றனர்.

எனவே, எடப்­பாடி அரசு கவிழ்க்­கப்­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் உள்­ளனர். அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்­டுள்­ளனர்.

தி.மு.க வின் மாற்றுத் திட்டம்

இந்த நிலை­யி­லேயே அ.தி.மு.க வின் சில எம்.எல்.ஏ.க்களை தமது பக்கம் இழுத்­தெ­டுப்­ப­தன்­மூலம் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­ மு­டி­யு­மென்ற ரீதி­யிலும் தி.மு.க. காய்­ந­கர்த்தி வரு­கி­றது.

அதற்­க­மைய தி.மு.க. விரித்­துள்ள வலைக்குள் சிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக தக­வல்கள் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இது ஆளும் அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தும் செய்­தி­யாக இருக்­கப்­போ­கின்­றது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முதல்வர் எடப்­பாடி தலை­மை­யி­லான அ.தி.மு.க. ஆட்­சியை கவிழ்க்கப் போவ­தில்லை என்­பதே தி.மு.க.வின் நிலைப்­பா­டாக இருந்­தது.

சட்­டப்­பே­ரவை இடைத்­தேர்­தல்­களில் அத்­தனை தொகு­தி­க­ளையும் தி.மு.க. கைப்­பற்றும் எனவும், அதன்­மூலம் எடப்­பாடி அரசு தானாக கவிழும் எனவும் தி.மு.க. எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்தது உண்மை.

ஆனால், சட்­டப்­பே­ரவை இடைத்­தேர்­தல்­களில் 9 தொகு­தி­களில் வெற்­றி­பெற்­ற­தன்­மூலம் ஆட்­சியைத் தக்க வைத்­துக்­கொண்­டது அ.தி.மு.க. எனவே,தற்­போ­தைய நிலையில், எடப்­பாடி அர­சாங்­கத்தை தி.மு.க. கவிழ்க்க முடி­யாது என்­பது உண்மை.

ஆரம்­பத்தில் மூன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மாத்­தி­ரமே தி.மு.க. வலையில் சிக்­கி­யி­ருந்­தனர். தற்­போது இந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருக்­கின்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

நிலைமை மோச­மா­வதை உணர்ந்த முதல்வர் எடப்­பாடி பழ­னி­சாமி, இந்த விவ­கா­ரத்தை டெல்­லி­யி­லுள்ள பா.ஜ.க. உயர்­மட்­டத்­துக்கு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஆனாலும், அங்­கி­ருந்து தி.மு.க.வின் திட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்­கான எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை எனவும், இதனால் அ.தி.மு.க.அதி­ருப்­தியில் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆத­ரவு

தமி­ழக சட்­டப்­பே­ரவைச் சபா­நா­யகர் தனபால் மீதான, நம்­பிக்கையில்லா தீர்­மா­னத்தை, அ.தி.மு.க. வின் எம்.எல்.ஏ.க்கள் சிலரின் ஆத­ர­வுடன், சட்­டப்­பே­ர­வையில் நிறை­வேற்­று­வ­தற்கு, தி.மு.க. இர­க­சிய திட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­படும் நிலையில், முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சா­மியின் ஆட்சி நீடிக்­குமா என்ற, கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது.

எனவே, ஆட்­சியை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக, அ.தி.மு.க. வின் எம்.எல்.ஏ.க்களுடன் சென்­னையில், சில தினங்­க­ளுக்­கு ­முன்னர் முதல்­வரும், துணை முதல்­வரும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.

சபா­நா­யகர் மீதான, நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்தை முறி­ய­டிப்­ப­தற்கு, அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்று அவர்­க­ளிடம் கேட்டுக் கொண்­டுள்­ளனர்.

நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம்

சபா­நா­ய­க­ருக்கு எதி­ராக, நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள தி.மு.க, அந்தத் தீர்­மா­னத்தை, அ.தி.மு.க, – எம்.எல்.ஏ,க்கள் சிலரின் ஆத­ர­வுடன், சட்­ட­ச­பையில் வெற்றி பெற­ வைப்­ப­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளது.

ஆளும் கட்­சியைச் சேர்ந்த சில, எம்.எல்.ஏ.,க்களிடம், இது­தொ­டர்பில் தி.மு.க., தரப்பில் பேசப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இதில், தி.மு.க., வெற்றி பெற்று விட்டால், எடப்­பாடி ஆட்­சிக்கு ஆபத்து ஏற்­பட்­டு­விடும்.

அ.தி.மு.க., ஆட்சி பெரும்­பான்மை இழந்து விட்­ட­தாக, தி.மு.க. பிரச்சி­னையை கொண்­டு­வரும்.

ஆட்சி நீடிக்­குமா என்ற கேள்வி எழுந்து விடும். எனவே, தி.மு.க.,வின், இந்த முயற்­சியை முறி­ய­டிக்க வேண்­டிய கட்­டா­யத்தில், அ.தி.மு.க. இருக்­கின்­றது. அதற்­காக, முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி மற்றும் துணை முதல்வர் பன்­னீர்­செல்வம் ஆகியோர், தமது கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்­தித்­துப்­பே­சி­யுள்­ளனர்.

180 தொகு­தி­களில் வெற்றி தேவை

இதே­வேளை, சட்­டப்­பே­ரவை பொதுத்­தேர்­தலை எதிர்­கொண்டு, ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்கு அனை­வரும் கடு­மை­யாக உழைக்­க­வேண்டும்.

இந்த இலக்கை அடை­வ­தற்கு ஒன்­று­பட்டு முயற்­சிப்போம். தமி­ழ­கத்தில், 150 -– 180 தொகு­தி­களில் வெற்றி பெறு­வ­தற்கு அனை­வரும் தயா­ரா­குங்கள் என்று, தி.மு.க.வின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்­கட்­சியின் தலைவர், மு.க.ஸ்டாலின் பணிப்­புரை விடுத்­துள்ளார்.

தி.மு.க., மாவட்ட செய­லா­ளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­க­மான, சென்னை, அறி­வா­ல­யத்தில், சில தினங்­க­ளுக்­கு ­முன்னர் நடை­பெற்­றது.

இதில், ஒன்­பது சட்­டப்­பே­ரவை தொகு­தி­களின் இடைத்­தேர்தல் மற்றும் தேனி லோக்­சபா தொகு­தியில், தி.மு.க., தோல்­வி­யுற்­ற­தற்­கான கார­ணங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டது.

அப்­போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நடந்து முடிந்த, 22 சட்­ட­சபை தொகு­தி­களின் இடைத்­தேர்­தலில், தி.மு.க., வெற்றி பெற்­றி­ருந்தால், அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்­தி­ருக்கும்; தி.மு.க., ஆட்சி அமைந்­தி­ருக்கும்.

ஒன்­பது தொகு­தி­களில், தி.மு.க. தோற்­றதால், ஆட்சி அமைக்க முடி­யாமல் போய்­விட்­டது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சில கார­ணங்­களால் அ.தி.மு.க. ஆட்சி எந்த நேரத்­திலும் கவி­ழக்­கூ­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது. ஆட்­சியை கவிழ்த்து, தி.மு.க., ஆட்சி அமைக்­கப்­ப­டுமா என்ற எதிர்­பார்ப்பு இருக்­கலாம்.

ஆனால், அ.தி.மு.க., ஆட்­சியில், அனைத்து துறை­க­ளிலும் ஊழல் நடந்­துள்­ளது. இந்த நேரத்தில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், கெட்டப் பெயர்தான் ஏற்­படும்.

கடந்த, 2006 தி.மு.க., ஆட்­சியில், கூட்­ட­ணியில் இருந்த, பா.ம.க., உள்­ளிட்ட சில கட்­சிகள், நமக்கு அளித்த நிபந்­த­னைகள், நெருக்­க­டி­களால், அந்தக் கட்­சி­கள்தான் இலா­ப­ம­டைந்­தன.

அதுவே, தி.மு.க. தோல்­விக்கு கார­ண­மா­கி­விட்­டது. என­வேதான், சட்­டப்­பே­ரவைப் பொதுத் தேர்தல் பெரிதும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

Edappadi-Palanisamy-2-1 இடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க!!- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை) இடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க!!- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை) Edappadi Palanisamy 2 1முதல்வர் எடப்­பாடி திட்டம்

இத­னி­டையே, தமது ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான மறை­முகத் திட்டம் இடம்­பெற்று வரு­வதை அறிந்­த­கொண்­டுள்ள முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி, வரு­மான வரித்­து­றையின் உத­வியை நாடி­யுள்­ள­தாக செய்­திகள் வெளி­வந்­துள்­ளன.

லோக் சபா தேர்­தலில் தி.மு.க. மற்றும் கூட்­டணிக் கட்­சிகள் பெரும் வெற்றி பெற்­றுள்­ளன. இது தி.மு.க.வுக்கு இருக்கும் பெரும் மக்கள் ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதே­போல இடைத்­தேர்­த­லிலும் தி.மு.க. 13 தொகு­தி­களில் வெற்றி பெற்­றுள்­ளது. இதனால், தி.மு.க. ஆத­ரவு எம்.எல்.ஏக்­களின் எண்­ணிக்கை 109 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.

அ.தி.மு.க.வுக்கு ஆத­ர­வாக 123 எம்.எல்.ஏக்கள் உள்­ளனர். அவர்­களில் கலைச்­செல்வன், ரத்­தி­ன­ச­பா­பதி உள்­ளிட்ட மூவரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் உள்­ளனர். மேலும் கரு­ணாஸும் அ.தி.மு.க. வுக்கு எதி­ரான நிலை­யில்தான் இருக்­கிறார்.

அதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்­களின் மொத்த எண்­ணிக்கை 119 தான் . இதனால் இன்னும் சில எம்.எல்.ஏக்­களை அ.தி.மு.க.வில் இருந்து தம­து­பக்கம் இழுப்­ப­தற்கு தி.மு.க. மாவட்ட செய­லா­ளர்கள் உள்­ளிட்ட சிரல் ஈடு­பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­காக தி.மு.க. மாவட்ட செய­லாளர் உள்­ளிட்ட சில நிர்­வா­கிகள் ரக­சி­ய­மாக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. அதற்­காக பெரியத் தொகை ஒன்று தி.மு.க. தரப்பில் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாகக் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதனால் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ள எடப்­பாடி பழ­னிச்­சாமி, வரு­மான வரித்­து­றையின் உத­வியை நாடி­யுள்­ள­தாக தெரி­கி­றது. தேர்தல் நேரத்தில் தி.மு.க. வின் பணப் புழக்­கத்தைத் தடுப்­ப­தற்­காக சோத­னை­களை நடத்­தி­ய­து­போன்று, தற்­போதும் சோத­னை­களை நடத்­த­வேண்டும் எனக் கோரிக்­கை­களை வைத்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதனால் தி.மு.க. உறுப்­பி­னர்கள் சில­ரது வீடு­களில் விரைவில் சோதனை மேற்­கொள்­ளப்­ப­டலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

ஆட்­சியைக் கலைக்க காங்­கிரஸ் ஆத­ரவு

அ.தி.மு.க. ஆட்­சியைக் கலைப்­ப­தற்கு தி.மு.க. இர­க­சி­ய­மாக செயல்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­படும் நிலையில் அதற்கு காங்­கிரஸ் ஆத­ரவு அளிக்கும் என தமி­ழக காங்­கிரஸ் தலைவர் தெரி­வித்­துள்ளார்.

நடந்து முடிந்த இடைத்­தேர்­தலில் தி.மு..க 13 தொகு­தி­களில் வெற்றி பெற்று, 109 எம்.எல்.ஏக்­களைக் கைவசம் வைத்­துள்­ளது.

அ.தி.மு.க. அரசைக் கலைக்க இன்னும் சில எம்.எல்.ஏக்­களின் ஆத­ரவே தி.மு.க.வுக்கு தேவை­யாக உள்ள நிலையில், சில அதி­முக எம்.எல்.ஏ.களை தங்கள் பக்கம் இழுப்­ப­தற்­கான முயற்­சியில் தி.மு.க.ஈடு­பட்­டுள்­ளது.

திருச்­சியில் தமிழ்­நாடு காங்­கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழ­கிரி இத­தொ­டர்பில் கெருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே, தி.மு.க.வுக்கு 100 சத­வீதம் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும், அ.தி.மு.க. ஆட்சி கவிழ்­வது தவிர்க்க முடி­யா­தது குறிப்­பிட்­டுள்ளார்.

அ.தி.மு.க.- பா.ஜ.க.பிளவு?

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் பெரும் வெற்றிபெற்ற பா.ஜ.க. தமிழகத்தில் வலுவான கூட்டணி இருந்தும் மண்ணை கவ்வியமை அக்கட்சியின் தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த தோல்விக்கு அ.தி.மு.க.வே காரணம் என்பது பா.ஜ.க. தலைவர்களின் கருத்தாகும். சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு காட்டிய முக்கியத்துவத்தை மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. காட்டவில்லை என்பதால் அ.தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் பா.ஜ.க. தலைமை உள்ளது.

எனவே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி விரைவில் உடையவிருப்பதாகவும், அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு ஆறு மாதங்கள் குடியரசு தலைவர் ஆட்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News