ilakkiyainfo

ilakkiyainfo

இணையத்தில் டிரெண்டாகும் பிசாசு உதடுகள்

இணையத்தில் டிரெண்டாகும் பிசாசு உதடுகள்
December 14
16:10 2019

இணையத்தில் டிரெண்டாகி வரும் இயற்கைக்கு மாறான பிசாசு உதடுகள் உண்மையானதா என நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.

மாஸ்கோ:

உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக எந்தவொரு சிறு செயலும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் பதிவேற்றப்படுகின்றன.

நெட்டிசன்களுக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் அதை உலக அளவில் டிரெண்டாக்கி விடுவார்கள். அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அவ்வகையில், வித்தியசமான ஒப்பனை முறைகள் மூலம் உதடுகளை இயற்கைக்கு மாறான முறையில் மாற்றி டிரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் இவை உண்மையானது போன்று தோற்றம் அளிப்பது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை ரஷியாவில் இருந்து டிரெண்ட் ஆக தொடங்கியதாக கூறப்படுகிறது. அநேக பெண்கள் வித்தியாசமான ஒப்பனை முறைகளின் மூலம் இந்த ‘பிசாசு உதடுகள்’ அல்லது ஆக்டோபஸ் உதடுகள் உருவாக்க முயல்கிறார்கள்.

உதடுகளினுள் நிரப்பிகளை உட்செலுத்தி உதடுகளில் அலைகள் செல்வது போன்று தோற்றமளிக்கச் செய்கின்றனர். வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் இந்த பதிவிற்கு பலரும் இது மிக ஆபத்தானது என்றும் இயற்கைக்கு மாறானது என்றும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

201912131400004433_1_Lips-2._L_styvpf  இணையத்தில் டிரெண்டாகும் பிசாசு உதடுகள் 201912131400004433 1 Lips 2ஒப்பனை செய்த உதடுகளுடன் பெண்

இதுகுறித்து புகழ்பெற்ற அழகு நிலையத்தின் நிறுவனர் கூறுகையில், ‘நான் முதலில் இதை பார்க்கும் போது போட்டோஷாப் என்று நினைத்தேன்.

ஆனால் அது உண்மையானது என தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் மோசமான ஒப்பனை முறையாகும். நிரப்பிகள் அல்லது பச்சை (டாட்டூ) குத்துதல் மூலமாகவோ இவ்வாறு செய்கிறார்கள்.

எதுவாக இருந்தாலும் அதை செய்யாதீர்கள். இது இயற்கைக்கு மாறானது. உங்கள் உதடுகள் முற்றிலும் சிதைந்து விடும்.

தயவுசெய்து அப்பாவியாக இருக்காதீர்கள், இது போன்ற வேடிக்கையான போக்குகளைப் பின்பற்றினால் நீங்கள் அதை எளிதாக மாற்றியமைக்க முடியாது மற்றும் உங்கள் இயற்கையான உதடுகளை திரும்பப் பெற முடியாது’, என தெரிவித்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News