ilakkiyainfo

ilakkiyainfo

இதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்

இதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்
January 04
01:24 2019

ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம்.

ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் காதல் ததும்பியதாகவும் இருந்திருக்கிறது என்று தெரியுமா? ஈவா ப்ரான், ஹிட்லரின் ஆஸ்தான காதலி. ஹிட்லருக்கும் ஈவாவுக்கும் கிட்டத்தட்ட 23 வருட வித்யாசம் இருக்கிறது.

ஹிட்லரை பதினாறு வருடங்களாக பின் தொடர்ந்தவர் ஈவா. இவர்களது காதல் பக்கங்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது, திருமணம் செய்து கொண்ட சில மணி நேரங்களில் மரணத்தை தழுவிய இந்த காதல் ஜோடியின் சில காதல் பக்கங்கள்.

ஹிட்லர் ஈவாவை முதன் முதலில் சந்தித்த போது ஈவாவுக்கு பதினேழு வயது. ஹிட்லருக்கோ வயது நாற்பது.

ஒரு போட்டோகிராபருக்கு அஸிஸ்டண்ட்டாக பணியாற்றுக் கொண்டிருந்த போது தான் சந்தித்தார்.

ஹிட்லர் மீதான தன்னுடைய காதல் குறித்து வீட்டில் சொன்னபோது, ஒருவர் விடாமல் அனைவரும் எதிர்த்தார்கள். எல்லாரையும் எதிர்த்து ஹிட்லரை கரம்பிடிக்க தயாரானார் ஈவா.

2-1519369722

பொதுவெளியில் : தான் அரசியலிலும், இந்த நாட்டின் மீதும் அக்கறை கொண்டுள்ளவன் என்றே தன்னை காட்டிக் கொள்ள நினைத்தார் ஹிட்லர்.

அதனால் தன்னுடைய ஆசாபாசங்களை பொதுவெளியில் காட்டிக் கொள்வதை தவிர்த்தார். பதினாறு வருடங்கள் ஈவாவைத் தெரியும் என்றாலும் கடைசி நேரத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

3-1519369730
சந்தேகம் : ஈவாவுடன் டேட்டிங் செல்வதற்கு முன்னால் ஹிட்லருக்கு ஈவா மீதும் சந்தேகம் இருந்தது. அவரோ அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது யூதர்களாகவோ அல்லது யூதர்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் அவருக்கு அதிகம் இருந்தது.

இதனை விசாரித்து சொல்வதற்கென்றே ஒரு விசாரணைக் குழுவையும் ஒற்றர்களையும் நியமித்திருந்தார் ஹிட்லர்.

4-1519369738
கட்டுப்பாடு : ஹிட்லர் உடனான காதல் குறித்து ஈவா தன்னுடைய டைரியில் பல்வேறு குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்.

அதில், ஹிட்லர் தன்னை நிறைய கட்டுப்படுத்தியதாகவும் புகைப்பிடிக்கக்கூடாது, குடிக்கக்கூடாது, நடனமாடக்கூடாது, பொது இடத்தில் யாரையும் சந்திக்கக்கூடாது என்று எக்கசக்க விதிமுறைகள் விதிக்கப்பட்டது என்றிருக்கிறார்.

5-1519369746முதல் காதல் : ஹிட்லரை காதலிப்பதற்கு முன்னதாக ஈவாக்கு ஃபரர் என்பவர் மீது காதல் இருந்திருக்கிறது. இருவரும் காதலித்துக் கொண்டிருந்த போது முதல் காதல் பிரிய நேரிட்டது.

காதல் பிரிவால் மனதளவில் மிகவும் வருத்தத்தில் இருந்த ஈவா1932 ஆம் ஆண்டு மற்றும் 1935 ஆம் ஆண்டு என இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

6-1519369755
ஒரே கனவு : ஈவாவுக்கு இருந்தது ஒரேயொரு கனவு அது என்ன தெரியுமா? தான் இறப்பதற்கு முன்னால் ஹிட்லர் தன்னை திருமணம் செய்து கொண்டு விட வேண்டும் என்பது தான்.

இறப்பதற்கு முந்தைய இரவு அதாவது சில மணி நேரங்களுக்கு முன்பே ஈவாவின் கனவு நிறைவேறியது. அந்த நாள் ஏப்ரல் 29,1945

நீ வேண்டாம் : தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்த ஹிட்லர் ஈவாவையும் தன்னோடு அழைத்துச் செல்ல விரும்பவில்லை, நீ தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று எதிர்த்தார்.

ஆனால் ஈவா விரும்பவில்லை, உறுதியுடன் காதலனைத் பின் தொடர்ந்தார்.

8-1519369772
ஏன் ஈவா : ஹிட்லரைச் சுற்றி பல பெண்கள் இருந்தார்கள், அவரை ஈர்த்த பல பெண்களில் ஈவா தான் தன்னுடைய காதலி என்று தேர்ந்தெடுக்க காரணம், ஈவாவின் உண்மையும் நேர்மையும் தான். அதோடு ஹிட்லரின் அரசியல் குறித்து எந்த கவனமும் செலுத்தாமல் இருந்தார்.

9-1519369780
தாய் வாடகைக்கு : 1936 ஆம் ஆண்டு நாஸி படைகளின் ஆதரவாளரும், பள்ளிப்படிப்பை முடித்திருந்தவருமான ஹைல்ட்கார்ட் ட்ரூட்ஸ் ஒரு வேலைக்காக அழைக்கப்படுகிறார்.

அவரது மிக முக்கியமான வேலை என தெரியுமா? ஆர்ய குழந்தையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

10-1519369788காரணம் : ஜெர்மானியர்கள் இந்த டாஸ்கில் பங்கேற்க வேண்டும் என்று ஹிட்லர் கட்டளையிட்டிருந்தார் இதற்கு லெபனன்ஸ்பார்ன் என்று பெயர் வைக்கப்படிருந்தது.

கிட்டத்தட்ட 200 மில்லியன் குழந்தைகளை இப்படி பெற்றெடுக்க வேண்டும்.

இது சாத்தியமானால் உலகம் முழுவதும் ஜெர்மானியர்களே நிறைந்திருப்பார்கள் என்று கற்பனை செய்தார்கள்.

இப்படியொரு விசித்திர ஐடியாவைக் கொடுத்தது, எஸ் எஸ் படைகளின் தலைவராக இருந்த ஹெய்ன்ரிச் ஹிம்லர்.

11-1519369796

கட்டாயம் : ஜெர்மனியின் மிக ஆக்ரோசமான படை என்று வர்ணிக்கப்படுகிற எஸ் எஸ் படையினர் கண்டிப்பாக ஜெர்மானியப் பெண்களுடன் உறவு கொள்ள வேண்டும், அதோடு நாட்டுக்காக குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டது.

12-1519369804
திட்டம் துவங்க காரணம் : 1900களில் ஜெர்மனி குழந்தைகள் பிறப்பது பெருமளவு குறைந்தது.

காரணம் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதும் கூடுதலாக அங்கு பொருளாதார நெருக்கடி, முதலாம் உலகப்போர் எல்லாம் சேர்ந்து கொண்டது.

கருக்கலைப்பு அங்கு மிக சாதரணமாக நடந்தது. 1930களில் வரலாறு காணாத அளவிற்கு மிகவும் குறைவாக போகவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

13-1519369813
வசதி வாய்ப்புகள் : தன்னுடைய குழந்தை ஓர் ஆர்யருக்கு பிறக்கப்போகிறது என்பதை நிரூபித்தால் அவருக்கு ஏராளாமன சலுகைகள் வழங்கப்பட்டன.

கூடவே அந்தப் பெண்ணுக்கு ஏராளமான பணமும் வழங்கப்பட்டது. இதற்கு கைமாறாக அந்த பெண் தான் குழந்தை பெற்றெடுத்த பிறகு, லெபென்ஸ்பார்ன் ஹோமில் குழந்தையை விட்டு விட வேண்டும்.

அங்கே குழந்தைக்கு உரிய கல்வி போதிக்கப்பட்டு வளர்க்கப்படும்.

14-1519369821எத்தனை குழந்தைகள் : கிட்டத்தட்ட பத்து ஹோம்கள் இதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தன. பன்னிரெண்டு வருடங்களில் இருபதாயிரம் குழந்தைகள் பிறந்தது.

இவர்களில் ஹில்டிகார்ட் ட்ரூட்ஸ் சொன்ன தகவல் மிகவும் பரபரப்பை உண்டாக்கியது.

நான் ஹிட்லருக்கு குழந்தை பெற்றுக் கொடுத்தேன் என்றார். இவர் புண்ட் ட்யூட்சர் மேடல் படையில் தீவிரமான செயல்பாட்டாளராக இருந்தார். இந்த படை லேடி ஹிட்லர் க்ரூப் என்றே அழைக்கப்பட்டது.

15-1519369829

அந்த நாள் : எனக்கு பதினெட்டு வயதாகியிருந்தது, பள்ளிப்படிப்பை முடித்திருந்தேன் அதற்கடுத்து என்ன செய்வதென்ற திட்டமிடலும் இல்லை, என்ன செய்தவதென்று தெரியவும் இல்லை.

இந்நிலையில் தான் பிடிஎம் தலைவர் என்னை அழைத்திருந்தார். அப்போது தான் திட்டத்தின் முக்கிய அம்சத்தைப் பற்றியும், அது நம் ஜெர்மனிக்கு எவ்வளவு அவசியமான தேவை என்பது குறித்தும் விளக்கினார்.

16-1519369838
வீட்டிற்கு தெரியாமலே…. : மருத்துவர் ஒருவர் பரிசோதிக்க இவர் ஜெர்மன் வம்சாவளியைச் சார்ந்தவர் தானா என்று உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது இவர் கருத்தரிக்க ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னர் வேண்டும். எஸ் எஸ் அலுவலர்கள் மத்தியில் இந்த தகவல் பகிரப்பட்டது.

பெற்றோர் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதையறிந்த ஹில்டிகார்ட் தான் ரெஸிடன்ஷியல் ப்ரோகிராம் ஒன்றில் பங்கேற்க போவதாகவும் அதனால் அங்கேயே தங்க வேண்டியது கட்டாயம் என்று சொல்லி வீட்டிலிருந்து வெளியேறினார்.

17-1519369846

40 பேர் : இப்படி தன்னைப் போலவே ஏராளமான பெண்கள் விண்ணப்பித்திருந்தது எஸ்கார்டட் வீட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிந்தது கிட்டத்தட்ட நாற்பது பெண்கள் வரை அங்கிருந்தார்கள்.

ஏராளமான டாக்குமெண்ட்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. இவர்களுக்கு பணிவிடை செய்ய எக்கசெக்க வேலைக்காரர்கள் இருந்தார்கள், செல்வசெழிப்பான வாழ்க்கை,சொகுசான வாழ்க்கையாகவும் இருந்தது.

18-1519369854
மூன்று இரவு : பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இங்கிருந்து வெளியில் செல்லும் வரை இது தான் உங்களுடைய பெயர் என்று சொல்லப்பட்டது.

பின்னர் தங்களுக்கான இணை யாரென்று தேர்ந்தெடுக்க வேண்டும் அவருடன் மூன்று இரவுகளை கழிக்க வேண்டும்.

அங்கே எஸ் எஸ் பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இது ஒரு டாஸ்க். தங்களது திருமணத்திற்கு முன்னதாக குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்று கொடுத்திருக்க வேண்டும்.

19-1519369864
எல்லாம் ஹிட்லருக்காக : ஹில்டிகார்ட் கர்ப்பமானார். அவருடைய குழந்தை லெபென்ஸ்பார்ன் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஹிட்லர் மீது தீவிர ஈர்ப்பு கொண்டிருந்த இந்தப் பெண் அவர் சொன்னது போலவே தொடர்ந்து நிறைய குழந்தைகளை இப்படி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்

ஹில்டிகார்ட் ஆனால், அதற்குள்ளாக ஒரு ஆபிஸரை காதலித்து திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News