ilakkiyainfo

ilakkiyainfo

இந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு! – திருமலை நவம் (கட்டுரை)

இந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு! – திருமலை நவம் (கட்டுரை)
September 06
20:17 2014

தமி­ழர்கள் சுய­ம­ரி­யா­தை­யுடன் நியாய­பூர்­வ­மான அபி­லா­ஷை­களைப் பெற்றுக் கெள­ர­வ­மாக வாழ்­வ­தற்­கு­ரிய இலக்கை அடை­வ­ தற்கு இந்­தியா உறு­து­ணை­யாக இருக்கும் என தமிழ்த்­தே­சியக்  கூட்­ட­மைப்பின் தலை வர் இரா.சம்­பந்தன் இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய பின் கூறிய கருத்தும் மொனராகலையில்  ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ள கருத்தும்  இன்­றைய அர­சியல் போக்கில் ஒன்­றுடன் ஒன்று மோதி தீப்­பற்றும் கருத்­தாகக் கொள்ளப்படுகிறது எனலாம்.

மொன­ரா­கலை – விபு­லா­னந்த வித்­தி­யா­லய வைப­வ­மொன்றில் இவ்­வா­ரத்தின் முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கலந்­து­கொண்டு தமிழில் பின்­வ­ரு­மாறு உரை­யாற்­றி­ யி­ருந்தார்.

தமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையே தாய்­நாடு. நமக்­கென்று வேறு­நா­டுகள் எது­வு­மில்லை. தமிழ் மக்­க­ளுக்கு எந்த நாடும் தாய­க­மல்ல. எனவே, அவர்­களை எவரும் பொறுப்­பேற்­கவும் மாட்­டார்கள் என ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருந்­த­தோடு பின்­வ­ரு­மாறும் கூறி­யி­ருந்தார்.

”எமக்கு வடக்கு, தெற்கு, சிங்­களம், தமிழ் என்ற பேத­மில்லை. நாம் அனை­வரும் இந்த நாட்டில் பிறந்­த­வர்கள் என்ற வகையில் பெற்­றுக்­கொண்ட சுதந்­தி­ரத்­தையும் நாட்­டையும் பாது­காப்­போ­ம்” என ஜனா­தி­பதி சூளு­ரைத்­தி­ருந்தார்.

இதே­வேளை, அமைச்சர் சம்­பிக்க ரண­வ க்க இவ்­வாறு கூறி­யி­ருந்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தமி­ழீழ இலக்­கிற்கு இந்­தி­யாவின் புதிய அரசாங்கமும் துணை­போ­வது எமக்கு பெரும் ஏமாற்றம் அளிக்­கி­றது.

இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த இந்­தியா முயற்­சிக்­கு­மாயின் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­தி­ருந்தார்.

ஜனா­தி­பதி, தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப் பின் தலைவர் இரா.சம்­பந்தன், அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகிய மூவரும் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வெவ்வேறு நிலை சார்ந்த கருத்­துக்­களை கூறி­யி­ருந்­தாலும் யதார்த்த அர­சி­யலில் இம்­மூ­வ­ரு­டைய கருத்­துக்­களும் வெவ்­வேறு அளவில் கனதி கொண்டதா­கவே பார்க்­கப்­பட வேண்டும்.

இலக்கை அடைய இந்­தியா உறு­துணை புரியும் என்று சம்­பந்தன் கூறி­யி­ருக்கும் கருத்து இலங்கை அர­சாங்­கத்­தாலும் அதன் தலை­மைத்­து­வங்­க­ளாலும் கொள்­ளப்­ப­டு­கின்ற அர்த்­தங்கள் விப­ரீ­த­மா­ன­வையா என எண்ண வைக்­கின்­றது.

சம்­பந்தன் தனது இந்­திய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பிய பின் தமது விஜ­யத்தின் பெறு­பே­றுகள் பற்றி அவர் விளக்­கி­ய­போதே மேற்­கண்ட கருத்தைக் கூறி­யி­ருந்தார்.

தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகளை கைய­கப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள், குடிப்­பரம்­பலை மாற்றும் செயற்­பா­டுகள், மீள்­கு­டி­ யேற்­றப்­ப­டாத நிலையில் இன்­னமும்  மக்கள் இருக்­கி­றார்கள். உயர்  பாது­காப்பு வல­யங்கள் அகற்­றப்­ப­டாது இருப்­ப­துடன் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­மாகக் காணப்படுகிறது.

இவ்­வா­றான சூழ்­நி­லைக்குள் வாழும் தமிழ் மக்­க­ளுக்­கான  இனப்­பி­ரச்­சனை  தீர்வு தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை­யென்­பது பற்றி  கலந்­து­ரை­யா­டி­யுள்­ளோ­மென சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்தார்.

modi  இந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு! - திருமலை நவம் (கட்டுரை) modiஇந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­தி­ர­மோடி உட்­ப ட்ட அர­சியல் தலை­வர்­க­ளு­ட­னான  சந்­திப்பு கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு வெற்­றி­ய­ளித்­துள்­ளதா? இல்­லையா? என்­ப­தற்கு அப்பால் இலங்கை அர­சாங்­கத்­தையும் அது சார்ந்த தலை­வர்­க­ளையும் கடுமை­யான சீற்­றத்­துக்கு உள்­ளாக்­கி­விட்­டி­ருக்­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யாக உண­ரப்­ப­டு­கிற உண்­மை­யாகும்.

அதன் ஒரு வெளிப்­பா­டா­கவே அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, கூட்­ட­மைப்பின் தமி­ழீ­ழத்­துக்கு இந்­திய அர­சாங்கம் துணை­போ­கி­றது எனச் சாடி­யி­ருந்தார்.

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் கருத்­துப்­படி தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தனி­ நாட்­டுக்­கான முன்­னெ­டுப்­புக்­களை சர்­வ­தேச­ ம­யப்­ப­டுத்­து­கின்­றது என்­பது ஒரு குற்­றச்­சாட்டு. மறு­புறம்  இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் அதற்கு துணைபோய்க் கொண்­டி­ருக்­கி­றது என்­பது மறு­பக்க குற்­றச்­சாட்டு.

இதில் முன்­னைய விட­யத்தை கருத்தில் எடுத்­துக்­கொள்­ளு­வோ­மாயின் 2009ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகக் கூறப்­படும் முன்­னைய காலப்­ப­கு­தி­யிலும் சரி, அதற்குப் பின்­னைய காலப்­ப­கு­தி­யிலும் சரி, தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் சுயநிர்ணய உரி­மை­யுடன்  தமிழ் மக்கள்  வாழும்  அர­சியல் தீர்வு சார்ந்த விட­யத்­தையே பேசி­வந்­தி­ருக்­கி­றார்கள்.

sampanthan  இந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு! - திருமலை நவம் (கட்டுரை) sampanthanநாட்டை துண்­டாட வேண்டும். பிரிக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்தை அவர்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் வலி­யு­றுத்­தி­ய­தா­க­வில்லை. இரா.சம்­பந்தன் பல்வேறு சந்­தர்ப்­பங்­களில் இதை பகி­ரங்­க­மா­கவே பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இது மட்­டு­மன்றி விடு­தலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் பல சம­நிலை பெற்­றி­ருந்த காலத்­திலும்   வட­கி­ழக்குப் பிராந்­தி­யத்­துக்கு சுயாட்சி முறை­யான தீர்­வொன்று கிடைக்கும் சந்­தர்ப்பம் உரு­வா­கு­மானால் அதை ஏற்றுக்­கொண்டு முன்­னோக்கி நகர்­வ­தற்கு முயற்­சிக்க வேண்­டு­மென்­பதை விடு­தலைப் புலி அமைப்­பி­ன­ரி­டமும் பகி­ரங்­க­மா­கவும் இர­க­சி­ய­மா­கவும் கூட மதி­யுரை நல்­கி­ய­தாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தெரி­வித்­துள்ளார்.

அது­வு­மன்றி விடு­தலைப் புலி­க­ளுக்கும் இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கும்    பேச்­சு­வார்த்­தைகள் நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெற்ற காலத்தில் விடு­த­லைப்­புலிகள் அமைப்­பினர் சம்­பந்தன் போன்ற அர­சியல் ஞானம்­பெற்­ற­வர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­த­வில்­லை­யென்­ப­தையும் இங்கு கவ­னம்­கொண்டு பார்க்க வேண்டும்.

திம்பு பேச்­சு­வார்த்­தைக்கு பின்னால் ஆன எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும் அர­சி­யல்­ஞானம் கொண்­ட­வர்கள் உள்­வாங்­கப்­ப­டா­ததன் கார­ண­மாக, குறிப்­பாக வட கிழக்கின் பூகோள அர­சியல் விவர்­ண­கர்த்­தாக்கள் சேர்க்­கப்­ப­டா­ததன் கார­ண­மாக ஆயுத பலத்­துக்கு சம­மாக அர­சியல் பலமோ, நியாயப்­ப­டுத்­தல்­களோ இல்­லா­ததன் கார­ண­மாக இனத்­துவ சுதந்­தி­ரத்­துக்­காகப் போரா­டி­ய­வர்கள் மீது பயங்­க­ர­வா­திகள் என்ற முத்­திரை குத்­தப்­பட்­டதை நாம் அறிவோம்.

இந்த படு­ப­யங்­க­ர­மான குற்­றச்­சாட்­டுக்­க ளின் கூட்டு மொத்த விளை­வு­களே ஒரு இனத்தின் நியாய­மான கோரிக்­கைகளைக் கூட சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்­பது உலகம் அறிந்த விடயம்.

அடுத்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இலக்கை அடைய இந்­தியா துணை­ நிற்கப் பார்க்­கி­றது என்­பது இலங்­கை­ய­ர­சாங்­கத்தின் இன் னொரு வகைக் குற்­றச்­சாட்­டாகும்.

இலங்கைத் தமி­ழர்­களின் சுதந்­திரப் போரா ட்டம் அகிம்சை மயம்­கொண்­ட­தா­கவே 1956 ஆம் ஆண்டு முதல் உரு­வாகி வளர்ந்து வந்­தி­ருக்­கி­றது. ஆயுதம் அல்­லது தேசப்­பி­ரி ப்பு என்ற சொல்லை அவர்கள் எச்­சந்­தர்ப்­ப த்­திலும் உச்­ச­ரித்­த­தாக வர­லாற்றில் எந்த வரி­யிலும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

1983 ஆம் ஆண்­டு­வரை அகிம்சைத் தத்­துவம் கொண்ட உள்­ளகம் கொண்ட போராட்­ட ங்­க­ளையே தமிழ்­மக்கள் நடத்­தி­வந்­தி­ருக்­கி­றார்கள்.

ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னாவின் 1978 மே 19 பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் அதனைத் தொடர்ந்து 1979 ஜூலை 20 கொண்­டு ­வ­ரப்­பட்ட பின்­னைய பயங்­க­ர­வாதத் தடை­சட்டம் 1981 ஆம் ஆண்டு (31.05.1981) இனக்­க­ல­வரம்  1983 ஆம் ஆண்டு  உரு­வா கிய ஜூலைக்­க­ல­வரம் இது­த­விர யாழ்.நூலக எரிப்பு, யாழ்.தமி­ழாராய்ச்சி மகா­நாட்டு (10.01.1974) குழப்­பங்கள் போன்ற பல நூறு இனத்­துவ துவாம்­ஷங்கள் இந்­தி­யாவின் உள்­நு­ழை­வுக்கு கார­ண­மா­கி­யது.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­காரம் தேசம் கடந்து இந்­தியப் பிராந்­தி­யத்­துக்கு கொண்டு சென்­ற­வர்கள் விடு­தலைப் போராளிகள்.

இதன் கார­ண­மாக இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­காரம் புதிய பரி­மா­ணங்­களை சுமந்­து­கொண்டு புதிய திசைக்கு திரும்­பிக்­கொண்­டது. ஆனா­லும்­கூட ராஜீவ் காந்­தியின் படு­கொ­லையைத் தொடர்ந்து அதன் வீரியம் வலு விழந்­து­போன நிலையில் இந்­தி­யாவின் கைக­ளி­லி­ருந்து நழு­விக்­கொண்­ட­தையும் ஐரோப்­பிய மத்­தி­யஸ்தம் என்ற பரி­மா­ ணத்தைப் பெற்­றுக்­கொண்­டதும் உண்மையே.

இவ்­வாறு இருக்­கும்­போது இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தமி­ழீழ இலக்­குக்கு துணை­பு­ரியப் பார்க்­கின்­றது என்ற குற்றச்சாட்டு புதி­தாக முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை அதன் தேசியக் கொள்­கையும் பிராந்­தியக் கொள்­கையும் மிகவும் கவ­ன­மா­கவும் தீர்க்­க­மா­கவும் ஆராய்ந்து திட்­ட­மி­டப்­ப­டு­கின்­ற­வை­யாகும். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமி­ழீழ இலட்­சி­யத்­துக்கு இந்­தியா துணை­நிற்­கின்­றது என்­பது ஒரு அர்த்­த­மற்ற கதைப்­பு­னைவு என்றே கூற­வேண்டும்.

புதிய இந்­திய அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை இலங்கை தமிழ்­மக்கள் பல­மான சுதந்­தி­ரத்­துடன் தன்­னாட்சி மயப்­பட்ட தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென்­பதில் நியாய­மான கரி­சனை கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள் என்­பது உண்­மையே.

அதற்கு ஏற்ற வழி­மு­றை­யாக தம்மால் முன்­மொ­ழி­யப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­டத்தை இலங்கை பூர­ண­மாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மென அழுத்தம் கொடுப்­ப­தற்கு அவர்கள் பின்­நிற்கப் போவ­தில்லை.

அதிலும் நரேந்­தி­ர­மோ­டியின் திட­காத்­தி­ர­மான கொள்­கையில் எவரும் செல்­வாக்கு செலுத்­த­மு­டி­யாது என்­பதும் அனை­வரும் அறிந்த விட­யமே. இப்­ப­டி­யான சூழ்­நி­லையை வைத்­துக்­கொண்டு புதிய அர­சாங்கம் இலங்­கைக்கு எதி­ராக நடக்கப் பார்க்­கி­றது என்று கூறு­வது ஒரு அர்த்­த­மற்ற கட்­டு­க­தை­யா­கவே நினைக்கத் தோன்­று­கின்­றது.

அடுத்த விட­ய­மாக  ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக ஷ மொன­ரா­க­லையில் ஆற்­றிய உரையின் நிதர்­சனம் எவ்­வாறு இருக்­கின்­றது என்­பதை நோக்­குவோம்.

தமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையே தாய்­நாடு. வேறு நாடுகள் அவர்­க­ளுக்கு தாய­க­மல்ல. எமக்கு வடக்கு, தெற்கு, தமிழ், சிங்­களம் என்ற பேத­மில்லை.

நாம் அனை­வரும் இந்­நாட்டில் பிறந்­த­வர்கள் என்ற கருத்­துடன் பெற்­றுக்­கொண்ட சுதந்­தி­ரத்­தையும் நாட்­டை யும் பாது­காப்­போ­மென ஜனா­தி­பதி உயர்ந்த உண்­மை­களை எடுத்துக் கூறி­யி­ருந் தார்.

rajapasa  இந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு! - திருமலை நவம் (கட்டுரை) rajapasa”தமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையே தாய்­நாடு’‘ என்ற உண்மைக் கருத்­துக்கு மாற்­றுக்­ க­ருத்­தே­யில்லை. இருக்­கவும் முடி­யாது. ஆனால், யதார்த்தம் அவ்வாறாகவா இருக்­கின்­றது என்­பதை தேடிப் பார்க்­கின்­ற­போ­து தான் உண்மை நிலை வேறாகக் காணப்­படு­கி­றது.

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னைய 66 வரு­ட­கால அனு­ப­வங்­களை உரைத்துப் பார்க்­கின்­ற­போது கிடைக்கும் விடைகள் பூஜ்­ஜி­ய­மா­கவே காணப்­ப­டு­கி­ன்றன. உரிய அர­சியல் சமத்­துவம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. இவ்­வாறு எவ்­வ­ளவோ காரி­யங்­களில் தமிழ்­மக்கள் மாற்­றான்தாய் மனப்­பாங்­கோடே நடத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார்கள்.

இன்­றைய சூழ்­நி­லையில் தமி­ழ­கத்தின் அதிர்­வ­லை­களை ஜீர­ணிக்க முடி­யாத நிலையில் இவ்­வா­றான தாய்­நாட்டுப் பற்று வியாக்­கி­யானம் செய்­யப்­ப­டு­கின்­றது.

அது­வு­மன்றி கூட்­ட­மைப்­பினர் தமது டெல்லி பய­ணத்தை முடித்­துக்­கொண்டு தமி­ழ­கத்­தி­லுள்ள தலை­வர்­க­ளையும் சந்­தித்து வந்­த­மையும் முதல் அமைச்சர் ஜெய­ல­லி­தாவை சந்­திப்­ப­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றார்கள் என்ற செய்­தி­களும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு கடும் விச­னத்தை உண்­டாக்­கி­யி­ருக்­கின்­றதன் கார­ண­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையே தாய்­நாடு. வேறு நாடுகள் தாய­க­மல்ல என்ற கருத்து வலி­யு­றுத்திக் காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

தெரிந்தோ, தெரி­யா­மலோ மொழி பண்­பாடு, பாரம்­ப­ரி­யங்கள் ஆகி­ய­வற்றின் மூல­வே­ராக இருப்­ப­வர்கள் தமிழ்­நாட்டு மக்கள் என்­பது மறுக்­கப்­பட முடி­யாத உண்மை.

இலங்கைத் தமி­ழர்கள் கடந்த 60 வரு­டங்­க­ளுக்கு மேலாக அனு­ப­வித்து வரும் கொடு­மை­களை அவர்கள் கண்­ணூ­டா­கவே கண்டு துன்­பப்­ப­டு­கின்­ற­வர்கள். இவர்­களின் தலை­யீ ட்டை உரு­வாக்­கி­ய­வர்கள். இலங்கை அர­சாங்­கமே   தவிர தமிழ் மக்கள் அல்லர் என்­ப­தே­யுண்மை.

இன­வ­ழிப்பு, இனச்­சங்­காரம், இன ஒடுக்கல் என்ற இன்­னோ­ரன்ன அட்­டூ­ழி­யங்­களின் ஒன்­று­தி­ரண்ட  கொடு­மையின் புறப் போரே! இன்­றைய தமி­ழக மக்கள் இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு ஆத­ர­வாக மேற்­கொண்­டு­வரும் போராட்­டங்­க­ளா கும்.

இவற்றை சகிக்க முடி­யாத நிலையில் சுட­லை­ஞானம் போல் தாய்­நாடு இலங்­கை தான் என்று பற்­றுக்­கோட்டை உரு­வாக்க முனை­வது பய­னற்ற விதைப்பா­கவே இருக்க­ மு­டியும்.

இப்­பற்றை உண்­மையில் கொண்­டு­வர வேண்­டு­மானால் நியாய­மான பரி­கா­ரத்தை இலங்கை அரசு தமிழ் மக்­க­ளுக்கு காண வேண்டும். உண்­மையைச் சொல்­லப் ­போனால் இலங்கை மீது அதிக விசு­வாசம் கொண்­ட­வர்­க­ளாக அவர்­களே இருந்­தி­ருக்­கி­றார்கள்.

அதன்­மாற்று நிலைக்கு கார­ண­கர்த்­தாக்­க­ளாக விளங்­கு­ப­வர்­களே இன­வா­தி­களும் இலங்­கை­ய­ர­சாங்­க­மு­மாகும். ஜனா­தி­ப­தியின் இன்­னொரு கருத்து மிகவர­வேற்­கத்­தக்­கதும் பாராட்­டப்­பட வேண்­டிய கூற்­றா­கவும் கரு­தப்­பட வேண்டியது. எமக்கு வடக்கு தெற்கு தமிழ் சிங்களம் என்ற பேதமில்லை என்ற கூற் றாகும்.

வடக்கு, தெற்கு பேதம் என்பது அரசாங்கத்தால் பார்க்கப்படவில்லையென வைத்துக்கொண்டாலும் இனவாத அமை ப்புக்களின் இன்றைய போக்குக்கள் சிறு பான்மை சமூகத்தின்மீது எத்தகைய அட்டூ ழியங்களை விளைவித்துவருகின்றது என் பது வெளிப்படையாகவே தெரியப்படுகின்ற உண்மைகளாகும்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சி அமைப்புக்குப் பிறகு ஜே.வி.பி., பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய, பொதுசவிய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், ஜாதிக பலசேனா போன்ற இனவாத அமைப்புக்களின் கெடுபிடிகள் எவ்வளவு வேகமாக வளர்ச்சி கண்டுள்ள மையையும் இவற்றை கட்டுப்ப டுத் துவதற்கு ஆளும் அரசாங்கம் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமையும் வெளிச்சம்போட்டு காட்டப்படக்கூடியவை.

இந்த இனவாத அமைப்புக்களுக்குப் பின்னால் அரசாங்கம் நின்று கொண் டிருக்கிறது என்ற குற்றச்சாட் டுக்கள் சிறுபான்மை சமூகத்தால் முன்வைக்கப் படுகின்றன. இந்த அமைப்புக்கள் வடக்கு கிழக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாது.

வளப்பங்கீடு செய்யப்படக்கூடாது. பேரின சமூகத்தின் தயவிலேயே சிறுபான்மை சமூ கம் இருக்க முடியும். பெளத்தமும் சிங்கள முமே தேசியத் தன்மையுடையது என்று வலியுறுத்திவருகின்ற நிலையில் பேதம் பார் க்கப்படவில்லையென்பதில் என்ன உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

இலங்கைக்கு கிடைக்கப்பட்ட சுதந்திரம் என்பது பிராந்திய விளைவுகளின் பரிசு. இச்சுதந்திரத்தை மனப்பூர்வமாகவோ ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்திலோ தமிழ் மக்கள் அனுபவிக்கவிடப்படவில்லை.

சுதந்திரத்துக்குப்பின் உண்டாக்கப்பட்ட அரசியல் அமைப்பு திட்டங்கள்   இன முஸ்தீப்புகள்  ஒடுக்குமுறைகள் குறிப்பாக 2009 ஆம் ஆண்டுக்குப்பின் ஆயுதப் போரை முடிவு கட்டியதாக கூறப்படும் அகங்கார  நிலையில் இரா.சம்பந்தன் கூறியதுபோல்….

வட கிழக்கின் இனப்பரம்பலை இல்லாது ஒழிக்கும் சாதுரியமான திட்டங்கள் இந்தப் பிரதேசத்துக்கு சொந்தமான தனித்துவமான பண்பாடுகளையும் பாரம் பரியங்களையும்  மூடி மறைக்கும் செயல்கள் காணி அளப்புக்கள் என்ற இன் னோரன்ன செயல்கள் இந்த தேசத்தை தாய் நாடென்றோ இங்குதான் நாம் பிறந் தவர்கள் என்றோ பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை பேணவேண்டுமென்றோ எணணத் தூண்டப்படவில்லை.

அந்த எண்ணம் தூண்டப்பட வேண்டுமாயின் சிறு பான்மை மக்கள் சம உரிமை கொண்டவர்களாக சுயமுறையான வாஞ்சை கொண்டவர்களாக வாழ வழி சமைக்கப்படவேண்டும் அந்த அரசியல் மலர்வு கொண்டுவரப்படவேண்டும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News