ilakkiyainfo

ilakkiyainfo

இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்!!

இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்!!
June 18
17:49 2017

இந்திய அணியை பிரித்து மேய்ந்த பாகிஸ்தான்: கிண்ணத்தை வென்று சாதனை,இந்திய ரசிகர்கள் கொதிப்பு

லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

_96540293_pakplayerspa  இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்!! 96540293 pakplayerspaசாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்

தொடக்கத்திலேயே அதிர்ச்சி

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பந்துவீச்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

_96539242_ggggggggggggggggggggg  இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்!! 96539242 ggggggggggggggggggggg

2 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது அமீர்

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணித்தலைவர் விராத் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமீர் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

5 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்த இந்தியா போட்டியில் தடுமாறியது.

யுவராஜ்சிங் மற்றும் தவான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தோனி மற்றும் ஜாதவ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டம் மேற்கொண்டார்.

_96539250_pandya  இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்!! 96539250 pandyaஅரைச்சதம் எடுத்த ஹர்திக் பாண்ட்யா

6 சிக்ஸர் அடித்து, 43 பந்துகளில் 76 ரன்கள் பெற்ற எதிர்ப்பாராவிதமாக ரன்அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில் 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை மட்டுமே இந்தியா பெற்றது. இதனால், 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர் மற்றும் ஹாசன் அலி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை எடுத்தனர்.

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பஃக்கார் ஜமான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

_96537660_paaa  இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்!! 96537660 paaa143 ஓவர்களின் முடிவில் 247 ரன்கள்:

முன்னதாக, இன்றைய போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி இந்திய அணி முதலில் பீஃல்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

இன்றைய இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் மட்டைவீச்சாளர்கள் நன்கு அடித்தாடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் பஃர்கார் ஜமான் ஆகிய இருவரும் அரைச்சதம் அடித்த நிலையில், அஸ்வின் வீசிய 23-ஆவது ஓவரில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் பஃர்கார் ஜமான் ஆகியோரின் தவறான கணிப்பால், தன்னை நோக்கி வந்த பந்தை பீஃல்டர் பூம்ரா விக்கெட்கீப்பர் தோனியை நோக்கி வீச, அவர் அஸார் அலியை ரன் அவுட் செய்தார்.

106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசி, தனது முதலாவது ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர் பஃக்கார் ஜமான் பெற்றார். 114 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியாவின் பந்துவீச்சில் பஃக்கார் ஜமான் ஆட்டமிழந்தார்.

  _96537662_ttttttttttttttttt  இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்!! 96537662 tttttttttttttttttபாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைச்சதம்

தனது நான்காவது ஒருநாள் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி பஃக்கார் ஜமான் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அனுபவம் மிருந்த ஸோயீப் மாலிக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், களமிறங்கிய முகமது ஹஃபிஸ் தனது அதிரடி ஆட்டத்தால், 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

மட்டைவீச்சுக்கு சாதகமாக கருதப்படும் ஓவல் மைதானத்தில், பாகிஸ்தான் அணியின் மட்டைவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடி 339 என்ற இமாலய இலக்கை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.


Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

சிவா முருகுப்பிள்ளை சொல்கிறார். “பல இடங்களில் திலீபனின் கொலை வெறி செயற்பாடுகளை பதிவு செய்து வந்திருக்கின்றேன். மீண்டும் பதிவு செய்கின்றேன். ரெலோவை [...]

ஆனந்திக்கு விசா கொடுத்து தானே உள்ளார்கள் , காதலர்களை பிரித்த பாவம் இந்தியாவை சும்மா விடாது. [...]

Traitor Mano Kanesan , since when have new job as Chicks Broker ? didnt he [...]

தற் போது உள்ள அரசு நாட்டுக்கு மட்டுமல்ல முழு ஆசியாவுக்கே துரோகம் செய்கின்றது , [...]

தேச துரோகம் ( முன்னைய அரசை கவிழ்க்க சாதி செய்தது ) , செய்து வந்த இவன் இப்ப [...]

இலங்கை பத்திரிகைகள்

English News