ilakkiyainfo

ilakkiyainfo

இந்தியா – சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா

இந்தியா – சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா
February 13
22:45 2020

சமூக வலைத் தளத்தில் அதிகம் பேசப்படுபவர்களில் ஒருவராக இருக்கிறார் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா.

ஹுமன்ஸ் ஆஃப் பாம்பே என்னும் வலைத்தளத்துடனான அவரது உரையாடலின்போது ரத்தன் டாடா தன் மிகவும் அந்தரங்கமான வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவருக்கு ஏற்பட்ட காதல், அந்த காதல் திருமணம் வரை சென்றது மற்றும் அவரது பெற்றோரின் மண முறிவால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் என சில விஷயங்கள் குறித்து கூறியுள்ளார்.

இத்துடன் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

_110894440_gettyimages-163137581 இந்தியா - சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா இந்தியா - சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா 110894440 gettyimages 1631375811தாய் தந்தை மண முறிவின் விளைவு

மூன்று பாகங்கள் கொண்ட தொடரில் முதல் பாகத்தில், “என்னுடைய குழந்தைப்பருவம் நன்றாக சென்றது.

ஆனால் என்னுடைய தாய் தந்தையின் மண முறிவுக்குப் பிறகு நானும் என்னுடைய சகோதரரும் நிறைய கஷ்டங்களை சந்தித்தோம். ஏனென்றால் அந்நாளில் விவாகரத்து என்பது இப்போதுபோல் சாதாரண விஷயமல்ல” என கூறியுள்ளார்.

”என்னுடைய பாட்டி எங்களை கவனித்து கொண்டார். என்னுடைய அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்தபோது பள்ளியில் என்னையும் என் சகோதரரையும் புண்படும்படி பேசுவார்கள்.

எங்களை கேலி செய்வார்கள். எங்களை சண்டை போடத் தூண்டுவார்கள். ஆனால் அந்த நேரத்தில் எங்கள் பாட்டி, எங்களை சண்டை போடக் கூடாது, அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறுவார். என்ன நடந்தாலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனக் கூறுவார்” என்றார் ரத்தன் டாடா.

அதில் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் மனக்கசப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

தந்தையுடனான கருத்து வேறுபாடு

_110894443_gettyimages-75282661 இந்தியா - சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா இந்தியா - சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா 110894443 gettyimages 752826611“இப்போது யார் சரி? யார் தவறு? என்று கூறுவது எளிது. நான் வயலின் கற்றுகொள்ள வேண்டும் என நினைத்தேன்.

ஆனால் என் தந்தை பியானோ கற்க வேண்டும் எனக் கூறினார். நான் படிப்பதற்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்றேன்.

என் தந்தை பிரிட்டன் செல்ல வேண்டும் என்றார். நான் கட்டட வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என நினைத்தேன். ஆனால் என் தந்தை நான் பொறியாளர் ஆக வேண்டும் என எண்ணினார்.” என்றார்.

பிறகு ரத்தன் டாடா அமெரிக்கா கார்னல் பல்கலைக்கழகத்துக்கு படிக்க சென்றார். இதற்கு முழு காரணமும் தன் பாட்டிதான் எனவும் கூறினார்.

முதலில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிப்பதற்காக பதிவு செய்தார். ஆனால் கட்டட வடிவமைப்பாளர் பட்டத்தையே பெற்றார்.

பின் லாஸ் ஏஞ்சலீஸில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தார்.

காதல் கதை

_110894441_5fc8e55a-6ebf-4240-9406-46819538b1ce இந்தியா - சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா இந்தியா - சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா 110894441 5fc8e55a 6ebf 4240 9406 46819538b1ce

ரதன் டாடா

லாஸ் ஏஞ்சலீஸில் இருந்தபோது தன் மனதுக்கு பிடித்த பெண்ணைக் கண்டதாக கூறினார். “லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கும்போதுதான் எனக்கு காதல் ஏற்பட்டது.

அந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள இருந்தேன். ஆனால் அந்நேரத்தில் என்னுடைய பாட்டியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் நான் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.

அவரும் என்னுடன் திரும்புவார் என எண்ணினேன். ஆனால் 1962ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சீனாவுடன் போர் மூண்டதால், அவருடைய தாய், தந்தை அவரை இந்தியா வர அனுமதிக்கவில்லை. இதனால் எங்கள் உறவு முறிந்தது” என்று கூறினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News