ilakkiyainfo

ilakkiyainfo

இந்தியா – பாக்கிடையே போர் மூண்டால் 125 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாவர்

இந்தியா – பாக்கிடையே போர் மூண்டால் 125 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாவர்
October 06
05:56 2019

அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிப்பு

இந்தியா- பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடைபெற்றால் 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடனடியாக கொல்லப்படுவார்கள் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, -பாக். இடையே போர் ஏற்பட்டால் 2025 ல் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து அமெரிக்காவின் Alan Robock of Rutgers University-New Brunswick ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின.Journal Science Advances ல் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அண்டை நாடுகளான இந்தியா-, பாக். இடையே பல போர்கள் நடந்துள்ளன. இந்த பதற்றம் காரணமாக 2025 ம் ஆண்டில் இரு நாடுகளும் 400 முதல் 500 அணுஆயுதங்களை வைத்திருக்கும்.

இவ்விரு நாடுகள் இடையே அணுஆயுத போர் ஏற்பட்டால் உடனடியாக 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடனடியாக கொல்லப்படுவார்கள். இந்த போர் உலகையே அணுஆயுதத்தில் உறைய வைக்கும்.

உலக அளவில் தாவர வளர்ச்சியும் 15 முதல் 30 சதவீதம் குறையும். கடலிலும் உயிரின உற்பத்தி 5 முதல் 15 சதவீதம் குறையும். போரினால் ஏற்படும் புகையின் தாக்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளிமண்டலத்தில் இருக்கும்.

9 நாடுகள் அணுஆயுதங்களை வைத்துள்ளன. ஆனால் இந்தியாவும்- பாக். மட்டும் தான் தங்களின் படைகளின் வலிமையை மிக வேகமாக அதிகப்படுத்தி வருகின்றன.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகள் இடையே நிலவும் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்தால் அது அணுஆயுத போருக்கு வழிவகுக்கும்.

2025 ல் 15 கிலோ தொன் வெடிக்கும் திறன் கொண்ட அணுஆயுதங்கள் இருக்கும். இது 1945 ல் உலகப் போரின் போது அமெரிக்காவால் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டிற்கு சமமானதாக இருக்கும். இதனால் ஏற்படும் நேரடி பாதிப்பு காரணமாக 50 முதல் 125 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள்.

உலக அளவில் பெரிய அளவிலான மக்கள் கொல்லப்படுவதற்கும் பட்டினி சாவு போன்ற அவலங்கள் நடைபெறவும் அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News