ilakkiyainfo

ilakkiyainfo

“இந்தியா விரும்பினால் எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும்: பாகிஸ்தான் நேரடி சவால்”

“இந்தியா விரும்பினால் எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும்: பாகிஸ்தான் நேரடி சவால்”
January 14
07:45 2018

பாகிஸ்தானின் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ராணுவ தளபதி கூறிய இந்த கருத்திற்கு தற்போது பாகிஸ்தான் பதிலளித்திருப்பதுடன், இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டலையும் விடுத்துள்ளது.

பாகிஸ்தான்  வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது ட்விட்டர் பக்கத்தில்  கூறி இருப்பதாவது:-

khawaja  "இந்தியா விரும்பினால் எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும்: பாகிஸ்தான் நேரடி சவால்" khawaja

இந்திய ராணுவ தளபதியின் பேச்சு மிகவும் பொறுப்பற்றது. இது அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணு ஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார்.

ஒருவேளை அது தான் இந்தியாவின் ஆசை என்றால், அவர்கள் வந்து எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற, மிரட்டல் தோணியிலான பேச்சு இந்தியாவின் கெட்ட எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது.

பாகிஸ்தான் தனது தாக்குதல், தடுப்பு திறனை காட்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.அந்த வகையில் அவர்கள் எங்களை தவறாக எடைபோட வேண்டாம். பாகிஸ்தான் , தன்னை காத்துக் கொள்ள முழு திறனுடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News