ilakkiyainfo

ilakkiyainfo

இன்சுலின் சாராத சர்க்கரை நோய் (டைப் – 2) எப்படி உருவாகுகிறது?? பாதிப்புகள் என்ன?? (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-2)

இன்சுலின் சாராத சர்க்கரை நோய்  (டைப் – 2)  எப்படி உருவாகுகிறது?? பாதிப்புகள் என்ன??   (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-2)
August 24
01:50 2016

 இன்சுலின் சாராத சர்க்கரை நோய்.

இதை டைப் – 2   (Type 2 diabetes) அல்லது இன்சுலின் சாராத சர்க்கரை நோய் என்கிறார்கள்.

இரண்டாம் வகை சர்க்கரை நோயால் சுமார் 95 முதல் 96 சதவீதத்தினர் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்பெல்லாம் இந்த நோய் நடுத்தர வயதினருக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என்ற கருத்து இருந்தது. ஆனால் சிறுவர்களும் , டீன் -ஏஜ் பருவத்தினரும்கூட இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் , அவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டுவிதமான காரணங்களால் இந்த நோய் உருவாகக்கூடும். சில சமயங்களில்,  சர்க்கரையை எரிப்பதற்குத் தேவையான இன்சுலின் ஹார்மோனை செல்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கக்கூடும்.

சில சூழல்களில் கணையத்தால் போதுமான அளவு இன்சுலினைச் சுரக்க முடியாது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறன் முற்றிலுமாகக் குறைந்து , இரண்டாம் வகை சர்க்கரை நோயை உருவாக்கிவிடுகிறது.

உடல் பருமனாக உள்ளவர்கள் , இரண்டாம் வகை சர்க்கரை நோயால் மிக எளிதாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

இவ்வகை நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 80 சதவீதம் பேருக்கு உடல் பருமன் நோய் இருக்கிறது.

இரண்டாம் வகை சர்க்கரை நோயின்போது (Type 2 diabetes) அறிகுறிகள் மிக மெதுவாக வெளிப்படுவதால் , சர்க்கரை நோய் வந்துள்ளது என்பதை அவ்வளவு சுலபமாக யாரும் நம்பிவிட மாட்டார்கள்.

முதல் வகையில் சொன்ன அறிகுறிகளோடு அடிக்கடி நோய்வாய்ப்படுதல் , உடலில் காயங்கள் ஆறாமல் இருத்தல் போன்றவையும் காணப்படும்.

கணையத்தின் செயல்பாட்டில் கோளாறு காணப்படுவதாலேயே பெரும்பாலும் இந்த நோய் ஏற்படுகிறது. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மருந்துகளைக் கொடுக்கும் பட்சத்தில் இவர்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

இன்சுலின் ஊசி போட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இதில் இல்லை. நடுத்தர வயது உடையவர்கள் , பருமனான உடல்வாகு கொண்டவர்கள் , உடற்பயிற்சி செய்யாமல் சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்கள் ஆகியோரையே இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது.

குறைபட்ட சர்க்கரை ஏற்பு நிலை

இதை கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்பார்கள். இந்த வகை சர்க்கரை நோயால் கர்ப்பிணிகளில் இரண்டு முதல் மூன்று சதவீதத்தினர் பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பக் காலத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு , பிரசவத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.  கர்ப்பக் கால சர்க்கரை நோய் , பொதுவாக கர்ப்பக் காலத்தின் இரண்டாவது கட்டத்தில் அதாவது , ஆறாவது மாதவாக்கில் உருவாகிறது.

இது குழந்தை பிறந்த பிறகு சரியாகிவிடுகிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் பிற்காலத்தில் சர்க்கரை நோயால் அவதியுறும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் வந்தால் , கர்ப்பக் காலம் முழுவதும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும்.

இதன்மூலம் தாய்க்கும் , குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் பெருமளவு குறைக்கலாம்.

கருவுற்ற தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால் அவர்கள் பேறு காலத்தில் மட்டும் மருத்துவம் செய்துகொண்டால் போதும். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு பெரும்பாலும் சர்க்கரையின் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

கணையச் சர்க்கரை நோய்

பல்வேறு காரணங்களால் கணைய அழற்சி நோய் ஏற்படலாம். கட்டுப்பாடு இல்லாமல் மது அருந்துவது அவற்றில் ஒன்று.

இந்தக் கணைய அழற்சி நோய் , பின்னாளில் புற்றுநோயாகவும் உருவெடுக்கலாம். கணைய அழற்சி நோயால் , அதில் உள்ள லாங்கர்ஹான் திட்டுத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன.

இதனால் , இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. பிற நோய்களுடன் துணை நோயாகவோ அல்லது மற்ற நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகளின் காரணமாக இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதாலோ இந்த நிலை தோன்றும்.

சர்க்கரை நோயாளிகளில் சுமார் ஒரு சதவீதத்தினர் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

கணைய அழற்சி , அட்ரீனல் அல்லது பிட்யூட்டரி சுரப்பிக் கோளாறுகள் , மையோடோனிக் டிஸ்டிரோபி எனப்படும் தசை அழிவு நோய் ஆகியவற்றின் காரணமாகவும் , கார்டிகோ ஸ்டீராய்டுகள் காரணமாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

மேலே சொன்ன காரணங்களால் , கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

சிறுநீரகத்தில் பாதிப்பு ,  இதயத்தில் பாதிப்பு என்றால் பாதிக்கப்பட்ட அந்த உறுப்புகளை அறுவைச் சிகிச்சை மூலமாக மாற்றிக்கொள்வதற்கான வசதிகள் இருக்கின்றன.

ஆனால் , கணையத்தில் பாதிப்பு எனில் அதை மாற்றி வேறு கணையம் பொருத்த முடியாது. எனவே , இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இன்சுலின் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகைக்கும் தனிப்பட்ட அறிகுறிகள் இருந்தாலும் , சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பு பற்றி உணர்வதே இல்லை.

ஏனெனில் , சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படியானால் முன்னரே சுதாரித்துக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு சர்க்கரை நோயில் இல்லையா என்று நீங்கள் கவலையோடு கேட்பது புரிகிறது.

இருக்கிறது. நமது உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சற்று உன்னிப்பாகக் கவனித்தால் போதும். சர்க்கரை நோய்க்குரிய தனிப்பட்ட அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

அபாய அறிகுறிகள்

சர்க்கரை நோய்க்கும் பிற நோய்களுக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று உண்டு. மற்ற நோய்களுக்கு அறிகுறிகள் வெளியே தெரியும். அவற்றை வைத்து குறிப்பிட்ட நோய் வந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆனால் , சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அந்த நோயின் தாக்கம் உடனடியாக வெளியே தெரியாது.

இதனால் , தங்களுக்கு நோய் இருப்பதையே பலரால் அறிந்துகொள்ள முடிவதில்லை. நோயானது முற்றி உள் உறுப்புகளைப் பாதிக்கும்போதுதான் இதைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.

அந்த நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அதனால் பெரிய பலன்கள் கிடைப்பதில்லை. எனவே , ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை செய்துகொள்வதே நல்லது.

எந்தெந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம் என்தைப் பார்ப்போம்.

அதிகப்படியான தாகமும் , சிறுநீர்ப் பெருக்கும்

ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்போது சிறுநீரகத்தால் அனைத்து சர்க்கரையையும் வடிகட்ட முடிவதில்லை. ரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரை தன்னுடன் நீர்ச்சத்தையும் கொண்டு செல்லும்.

இதனால்தான் , சர்க்கரை நோயாளி களுக்கு அதிகப்படியான தாகம் ஏற்படுகிறது. அவ்வப்போது சிறுநீர்ப் பெருக்கும் ஏற்படுகிறது. உடல் திசுக்களிலிருந்து சர்க்கரையால் நீர இழுத்துக்கொள்ளப்படுவதால்தான் அபரிதமான தாகம் ஏற்படுகிறது.

உடல் அசதியும் , சோர்வும்

உடலின் முக்கிய எரிபொருளாக விளங்குவது சர்க்கரை. ஆனால் , அவை செல்களுக்குத் தேவையான சக்தியாக மாற்றப்படாத நிலையை சர்க்கரை நோய் உருவாகி விடுகிறது. செல்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் போவதால் எப்போதும் களைப்பாகவும் , சோர்வாகவும் , பலவீனமாகவும் இருக்க நேரிடுகிறது.

குறை எடையும் , மிகை எடையும்

குளுக்கோஸ் இழப்பை ஈடுசெய்வதற்காக உடல் தொடர்ந்து போராடுவதால் அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.

சிலருக்கு இது எதிர்மாறாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டாலும் எடை குறையும்.

இந்த நிலை , டைப் – 1 சர்க்கரை நோயின்போது பரவலாகக் காணப்படும்.

காயம் ஆறாத நிலை

ரத்தத்தில் அதிகமாக குளுக்கோஸ் இருந்தால் இயல்பாக காயத்தை ஆற்றும் உடலின் தன்மையில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இதனால் , காயங்கள் எளிதில் ஆறாது.

தவிர , திசுக்கள் மிகவும் மென்மையாக மாறிவிடுவதால் நோய்த் தொற்றும் அதிகரிக்கும். உடலில் இயல்பாகவே உள்ள குணப்படுத்தும் திறனை சர்க்கரை நோய் குறைத்துவிடுகிறது.

நோய்த்தொற்றை எதிர்க்கும் சக்தியையும் தடைசெய்து விடுகிறது. இதனால் பெண்களுக்கு சிறுநீர்ப்பை , பிறப்புறுப்புப் பகுதிகளில் அவ்வப்போது நோய்த்தொற்று ஏற்படுவது சர்வ சாதாரணம்.

தோல் பகுதியிலும் கிருமிகள் எளிதில் தாக்குதல் நடத்தும். ஆண் – பெண் இருவருக்குமே பிறப்புறுப்புப் பகுதிகளில் கொப்புளங்கள் தோன்றும்.

சருமம் வறண்டு நமைச்சலுடன் இருக்கும்.

ஈறு மற்றும் பற்களில் ஏற்படும் பாதிப்பு

ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை , வாயில் உள்ள ஈறு களை வலுவிழக்கச் செய்து நோய் எதிர்ப்புத் திறனையும் குறைத்துவிடுகிறது.

இதனால் ஈறுகளில் மட்டுமின்றி தாடை எலும்புகளிலும் நோய்த்தொற்றுகள் எளிதில் ஏற்படுகின்றன. இதன் காரணமாக வாய் துர்நாற்றம் , ஈறுகளில் ரத்தக்கசிவு , மற்றும் சீழ் பிடித்தல் , பற்கள் ஆடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

நாள்பட்ட சர்க்கரை நோயால் நரம்புகள் வலுவிழந்து போகும். இது எண்ணற்ற அறிகுறிகளை உண்டாக்கும். அதிகமாகக் காணப்படும் அறிகுறிகளாக , கை கால்கள் மரத்துப்போவதையும் , அந்தப் பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதையும் சொல்லலாம்.

இதனால் கால்களிலும் , பாதங்களிலும் , கைகளிலும் எரிவது போன்ற உணர்வு இருக்கும். உணவு செரிமானத்தைத் துரிதப்படுத்தும் நரம்புகள் சேதமடைவதால் எப்போதும் குமட்டல் உணர்வு , வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியவை இருக்கும்.

கண் பிரச்னைகள்
ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை , கண்களில் உள்ள இயற்கையான லென்ஸ்களின் ஹைட்ரேஷன்களைத் தாக்கி சேதப்படுத்திவிடுகின்றன. இதனால் பார்வைக் குவியம் தடைபடுகிறது.

சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் இந்தப் பிரச்னையைச் சரிப்படுத்திவிடலாம். நாள்பட்ட சர்க்கரை நோய் இருந்தால் கண்களில் உள்ள நரம்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.

நரம்புகளில் தோன்றும் ரத்த ஒழுக்கினால் எந்த அறிகுறியும் தெரியாது என்றாலும் , கண்களில் கருப்பு நிறப்புள்ளிகளும் , சில சமயம் பார்வை இழப்பும் ஏற்படும்.

தொடரும்…
டாக்டர் டி. காமராஜ் ,

 

சக்கரை நோய் ஏன் வருகிறது??

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்’!! – டாக்டர் டி. காமராஜ்

http://www.healthline.com/health/type-2-diabetes

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து [...]

புலி வாலுகளின் சந்தோசம் ஒரே நாளில் தூளாச்சு , இந்த ஐரோப்பிய நீதி மன்றம் கொடுத்த [...]

நீதிபதி தமது முதல் பேட்டியில் தம்மை நோக்கி அந்த நபர் சுட்ட்தாகவும் , தமது பாது [...]

எனக்கு மற்றைய எல்லாத்தையும் விட விஷத்தை தான் பிடித்திருக்கு , ஏனெனில் நானும் ஒரு கொடிய விஷம். [...]

வித்தியாவின் படுகொலையில் முக்கியமான சந்தேக நபரான சுவிஸ் குமார் பற்றி, ஆறாவது சாட்சியாளரான முகமட் இவ்லார் என்பவர் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News