ilakkiyainfo

ilakkiyainfo

இயேசுவின் பிறப்பில் மக்களாட்சி பிறக்கட்டும்

இயேசுவின் பிறப்பில் மக்களாட்சி பிறக்கட்டும்
December 24
22:44 2016

இயேசு பிறந்த தினம் சகல கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் ஒரு மகிழ்ச்­சி­க­ர­மான பரி­சுத்த தினமாகும்.

உல­கத்தில் உள்ள சகல கிறிஸ்­த­வர்­களும் இத்­தி­னத்தை பரி­சுத்த தின­மா­கவும் பக்­தி­யுள்­ள-­மேன்­மை­யுள்­ள-­ச­மய வழி­பா­டாகக் கொண்­டா­டு­கி­றார்கள்.

கிறிஸ்மஸ் விழாவில் சிறப்­புத்­தன்மை என்­ன­வென்றால், தற்­கா­லத்தில் உள்ள பிரிவினை­களும் சிறை­யி­ருப்­புக்­களும் அகற்­றப்­பட்டு மக்கள் சாந்­தியும் சமா­தான சக வாழ்­வு­டனும் வாழ உதவி செய்­வ­தாகும்.

ஆனால், இயே­சுவின் பிறப்பின் நோக்­கத்­தின்­படி குறிப்­பி­டப்­பட்­டுள்ள செயற்­பா­டுகள் ஒன்றும் இக்­கா­லத்தில் நடை­பெ­று­வ­தில்லை.

எங்கும் கொலைகள். போர் அழி­வுகள், குடி­வெ­றிகள், வன்புணர்வுகள் நிறைந்து காணப்­ப­டு­கின்றன. இந்­நா­ளிலே இதற்கோர் எண்­ணக்­க­ருவை நாம் கொடுக்க வேண்டும்.

கிறிஸ்மஸ் விழாவின் உண்­மை­யான தாத்­ப­ரியம் என்ன என்­பதை நாம் கண்­டு­பி­டிக்க வேண்டும். மனிதம், இரக்கம், கிருபை, கருணை என்றால் என்ன என்­பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

உலக மக்­க­ளுக்­காகக் கட­வுளின் குமாரன் இயேசு மனி­த­னாகப் பிறந்தார்.

மனித அவ­தாரம் எடுத்து வாழ்ந்த காலத்தில் அவர் செய்த சேவைகள் எண்ணிலடங்காத­வை. அள­வி­ட­மு­டி­யா­தவை.

மனி­தனின் இரட்­சிப்­புக்­கா­கவும் நல்­வாழ்­வுக்­கா­கவும் தம்மை சிலு­வையில் பலியாக்கினார்.

அவர்­க­ளோடு உல­கத்தில் வாழ்ந்த காலத்தில் மரித்­தோரை உயிர்ப்­பித்தார். குரு­டர்­களைப் பார்­வை­ய­டையச் செய்தார். செவி­டர்­க­ளுக்கு செவிப்­பு­லனைக் கொடுத்தார். ஊமைகள் பேசி­னார்கள். முட­வர்கள் எழுந்து நடந்­தார்கள். நோயா­ளிகள் சொஸ்­த­ம­டைந்­தார்கள். அநீ­தி­யையும், அடி­மைத்­த­னத்­தையும் பகி­ரங்­க­மாக எதிர்த்தார்.

நீதிக்­கா­கவும் சமத்­து­வத்­திற்­கா­கவும் போரா­டினார். உண்­மையில் இந்த நத்தார் தினத்தை முன்­னிட்டு உல­கத்­திலும் இலங்­கை­யிலும் உள்ள சகல கிறிஸ்­தவ ஆல­யங்­க­ளிலும் விசேட ஞாப­கார்த்த ஆரா­த­னைகள் நடை­பெ­று­கின்­றன.

24 ஆம் திகதி நடு இரவில் மக்கள் குடும்பம் குடும்­ப­மாகச் சென்று பிறந்த இயேசு பால­னையும் வணங்­கு­வார்கள். இந்த இரவில் பல இடங்­க­ளிலும் நத்தார் கரோல் சேவை­களும் நடை­பெறும்.

இயேசு பிறந்த சந்­தோ­ஷத்­தினால் வீடு வீடாக இன்­னிசைப் பாடல்­க­ளுடன் பவனி வரு­வார்கள். கிறிஸ்­த­வர்கள் மட்­டு­மல்ல, பல மதத்­த­வர்­களும் பல்­லி­னத்­த­வர்­களும் இப்­ப­டி­யான விழாவில் பங்­கு­பற்றி ஆனந்தம் கொண்­டா­டு­வார்கள்.

ஆடு, மாடு­களை வெட்டி சுவை­யான உண­வு­களைச் சமைத்து தாங்கள் உண்­ப­துடன் உற­வி­னர்­க­ளுக்கும் கொடுப்­பார்கள். மது­பா­னத்தைப் பாவித்து மதி­ம­யங்­கு­வார்கள்.

ஒரு­வ­ருக்­கொ­ருவர் கிறிஸ்மஸ் வாழ்த்­துக்­களைக் கூறு­வார்கள். விலை உயர்ந்த அன்­ப­ளிப்­புக்­களை ஒரு­வ­ருக்­கொ­ருவர் கொடுத்து சந்­தோ­ஷ­ம­டை­வார்கள்.

கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்­களை அனுப்­பு­வார்கள். கிறிஸ்மஸ் மரத்தை உண்­டு­பண்ணி அதில் வெளிச்சம் தரும் பல வர்ண மின்­சார விளக்­கு­களை அந்த மரத்தைச் சுற்றி இணைத்து அழ­கு­ப­டுத்­து­வார்கள்.

லூக்கா 2-–7 இன் படி யுதேயா நாட்டில் உள்ள பெத்­லகேம் என்னும் தாவீதின் ஊரிலே அவள் தனது முதற்­பே­றான குமா­ரனைப் பெற்று, சத்­தி­ரத்­திலே அவர்­க­ளுக்குத் தங்குவதற்கு இடம் கிடைக்­கா­மையால் பிள்­ளையைத் துணியால் சுற்றி முன்­ன­ணி­யிலே கிடத்­தி­னார்கள்.

லூக்கா 2:10 இல் தேவ­தூதன் ஆடு மேய்க்கும் இடை­யர்­களைக் கண்டு பயப்படாதிருங்கள்.

இதோ எல்லா இனத்­தா­ருக்கும் மிகுந்த சந்­தோ­ஷத்தை உண்­டாக்கும் நற்­செய்­தியை உங்­க­ளுக்கு அறி­விக்­கின்றேன்.

லூக்கா 2:11. இன்று கர்த்­த­ரா­கிய கிறிஸ்து என்னும் இரட்­சகர் உங்­க­ளுக்­காகத் தாவீது என்னும் ஊரிலே பிறந்­தி­ருக்­கிறார் எனக் கூறினார்.

லூக்கா 2:16 இடை­யர்கள் தீவி­ர­மாக வந்து மரி­யா­ளையும் ஜோசேப்­பையும் முன்­ன­ணியில் கிடத்தி இருக்­கிற பிள்­ளை­யையும் கண்­டார்கள்.

03 வான­சாஸ்­தி­ரிகள் நட்­சத்­தி­ரங்­களைப் பற்றிப் படித்­த­வர்கள். கிழக்­கி­லி­ருந்து வந்த நட்­சத்­தி­ரத்தைப் பின் தொடர்ந்து ஜெரு­ச­லே­மிற்கு வந்து குழந்தை இயே­சுவைக் கண்டு ஆரா­தனை செய்­தார்கள்.

பொன், தூபம், வெள்ளி மீறை போன்ற திர­வியங்­களை அன்­ப­ளித்துச் சென்­றார்கள்.

தாவீதின் அரசன் இயேசு பிறந்­துள்ளார் என்ற செய்தி ஏரோது மன்­ன­னுக்கு கிடைத்­த­வுடன் அவன் பயந்து இயே­சுவைக் கொல்ல வழி­தே­டினான்.

கர்த்­த­ரு­டைய தூதன் அன்­றி­ரவு யோசேப்­புக்கு கனவில் தோன்றி, ஏரோது அரசன் குழந்தையைக் கொலை செய்ய விருப்­பதால் இர­வோடு இர­வாக எகிப்து தேசத்­துக்குப் போகும்­படி கூறிய படியால் யோசேப்பு குடும்­பத்­துடன் எகிப்து தேசத்­துக்குச் சென்றார்.

ஆனாலும், ஏரோது அரசன் இயே­சுவைக் கொல்லும் நோக்­கத்தில் இஸ்ரேல் தேசத்தில் உள்ள இரண்டு வய­துக்­குட்­பட்ட சகல ஆண் குழந்­தை­க­ளையும் கொலை செய்தான். தாய்­மாரின் அழுகைச் சத்­தமோ தேச­மெங்கும் பர­வி­யது. லூக்கா 23-– 27 இயேசு கூறி­யவை வரு­மாறு:

மாயைக்­கா­ரர்­களே வேத­பா­த­க­ரே -­ப­லி­சே­யர்­களே உங்­க­ளுக்கு: ஐயா, வெள்ளையடிக்கப்­பட்ட கல்­ல­றைக்கு ஒப்பாய் இருக்­கி­றீர்கள். அவைகள் புறம்பே அலங்காரம் காணப்­படும்.

உள்­ளேயோ மரித்­த­வர்­களின் எலும்­பு­க­ளாலும் சகல அசுத்­தத்­தி­னாலும் நிறைந்திருக்கும்.

அப்­ப­டியே நீங்­களும் மனு­ச­ருக்கு முன்­பாக நீதி­மான்கள் எனக் காணப்­ப­டு­கி­றீர்கள். ஆனாலும் உள்­ளத்­திலே மாயத்­தி­னாலும் அக்­கி­ர­மத்­தி­னாலும் நிறைந்­தி­ருக்­கி­றீர்கள்.

மத்­தேயு 5:3. இயேசு ஆவியில் எழு­மை­யுள்­ள­வர்கள் பாக்­கி­ய­வான்கள் பர­லோக இராச்­சியம் அவர்­க­ளு­டை­யது எனக் கூறினார்.

மத்­தேயு 19:23 அப்­போது இயேசு தம்­மு­டைய சீசர்­களை நோக்கி ஜஸ்­வ­ரி­ய­வான்கள் பர­லோக இராஜ்­யத்தில் பிர­வே­சிப்­பது மிகவும் அரி­தென்று மெய்­யா­கவே உங்­க­ளுக்குச் சொல்­கிறேன் என்றார்.

மேலும் நல்­லெண்ணம், நல்­லொ­ழுக்கம் மூலம் உரு­வாகும் ஏழ்­மை­யான வாழ்க்கையானது, பொய்­யான, நீதி­யற்ற முறையில் வஞ்­ச­க­மான முறையில் செல்வந்த­ராகி வாழும் வாழ்க்­கையை விடச் சிறந்­தது எனக் கூறினார்.

இயேசு வாழ்ந்துகாட்­டிய, துர்­ந­டத்­தை­களை எதிர்த்துச் செய்த நற்­க­ரு­மங்­களை நாம் கைக்­கொள்ள வேண்டும்.

ஆகவே கிறிஸ்­த­வர்­க­ளா­கிய நாங்கள் உயர்ந்த மனித பண்­புகள் நிறைந்த வாழ்க்­கையை வாழ முயற்­சிக்க வேண்டும்.

புது ஆடைகள் அணிந்து வீதி­களைச் சோடனை செய்து வீடு­களை அலங்­க­ரித்து பல வர்ண மின்­சார விளக்­கு­களை இணைத்து புசித்தும், குடித்தும் ஆடம்­பர வாழ்க்கை வாழ்வதை விடப் பரி­சுத்த வேதா­க­மத்தில் சங்­கீ­தக்­கா­ரன்­ கூ­று­வது போன்று நல்வாழ்க்கை என்­பது ருசி­யான சாப்­பா­டுகள் சமைத்துச் சாப்­பி­டு­வது அல்ல.

ஏழை­க­ளுக்குத் தான தருமம் செய்து கோப­ சு­பாவம் அற்­ற­வர்­களாய், பழி­வாங்கும் மனமற்­ற­வர்­களாய், பிரி­வி­னைகள் சாதி-­ச­ம­ய-­ப­கை­மை­களை மறந்து மன­மாற்றம் அடைந்­த­வர்­களாய் மாற வேண்டும்.

அப்­போது நீதி­யும் நி­யா­யமும் – சமத்­து­வமும் நாட்டில் நிலை­நிற்கும். கிறிஸ்மஸ் நற்செய்தி­யா­னது யாவ­ருக்கும் சமா­தானம் என்­ப­தாகும்.

எனவே, இயே­சுவின் சிலுவை மர­ணத்­தையும் பாடு­க­ளையும் நினைவுகூர்ந்து நல்மகிழ்ச்சி உடை­ய­வர்­க­ளாக ஜீவிப்­ப­தோடு படித்­தவர், பாமரர், ஏழை, பணக்­காரன் என்ற வேறு­பா­டு­க­ளையும், இனம், மொழி, நாடு, நிறம் என்ற எல்­லை­க­ளையும் தாண்டி கிராமங்­க­ளிலும் நாட்­டிலும் வாழும் சகல மனி­தர்­களும் சகல உரி­மை­க­ளு­டனும் சுதந்திரத்­து­டனும் வாழ­வேண்டும்.

மேலும் சிறைச்­சா­லையில் பல ஆண்­டு­க­ளாக துன்பம் அனு­ப­வித்­து­வரும் சிறைக்­கைதிகள் விடு­தலை அடை­ய­வேண்டும்.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தமது குடும்­பங்­க­ளுடன் மீண்டும் இணைய வேண்டும். போரில் கண­வனை இழந்த வித­வை­களும் ஊன­முற்­றோர்­களும் வீடு வாசல்­களை இழந்து அநா­தை­களாய் வாழ்­ப­வர்­களும் பூரண விடு­தலைப் பெற்று சந்­தோச சமாதானத்துடன் சக­வாழ்வை பெற்று நீடுழி வாழ இறை­வனை வேண்டி நிற்­கிறோம்.

சிறந்த கொள்கை பிர­க­ட­னங்­க­ளுடன் புதிய அரசை அமைத்­தி­ருக்கும் நல்­லாட்சி அரசு கடந்த 68 ஆண்­டு­க­ளாக துன்­புறும் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்த்து அவர்களு­டைய ஜன­நா­யக உரி­மை­க­ளையும் மனித உரி­மை­க­ளையும் வழங்க முன்வரவேண்டும்.

அந்த வகையில் மன்னார் சமா­தான அமைப்பு நல்­லாட்சி அரசின் கவ­னத்­துக்கு கீழ்­வரும் விட­யங்­களை முன்­வைக்­கி­றது.

ஐக்­கிய இலங்­கைக்குள் வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்­சியின் அடிப்­ப­டையில் மாநில அந்­தஸ்தை வழங்­குதல். சமஷ்டி என்­பது பிரி­வி­னை­வா­த­மில்லை.

இந்­தியா, அமெ­ரிக்கா, ஆபி­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களில் உள்­ளது போன்ற ஒரு உன்னத­மான ஆட்­சி­மு­றை­யாகும்.

அங்கு அனை­வரின் மதங்­களும் நலன்­களும் உரி­மை­களும் மொழி­களும் பாது­காக்­கப்­பட்டு வரு­வதை காணலாம்.சிங்­கள பௌத்த தேசிய அரசு என்ற நிலை மாற்­றப்­பட்டு சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள், முஸ்­லிம்கள், மலை­நாட்டு தமி­ழர்கள் ஆகிய அனை­வ­ருக்கும் பொருத்­த­மான நல்­லாட்சி அரசை ஸ்தாபித்தல் முக்­கி­ய­மா­ன­தாகும்.

சர்வ அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­பட்டு குடும்ப ஆட்சி அகற்­றப்­பட்டு மக்­க­ளுக்கு பொறுப்புக் கூறக்­கூ­டிய பாரா­ளு­மன்ற மக்கள் பிர­தி­நி­திகள் கொண்ட பிர­தமர் ஆட்­சியை ஸ்தாபித்தல்.

தமிழ்­மொ­ழிக்கும் சிங்­கள மொழிக்கு கொடுத்­துள்ள தேசிய அந்­தஸ்தை வழங்­குதல். இலங்கை கடல் எல்­லைக்குள் அத்­து­ மீறி­வந்து மீன்­பி­டித்­துச்­செல்லும் இந்தியர்களையும் அவர்­க­ளது பட­கு­க­ளையும் பறி­முதல் செய்து அதி­கூ­டிய தண்­ட­னையும் சிறை­வா­சமும் அளித்தல்.

அத்துடன் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களிலும் தென்பகுதி சிங்களவர்கள் வந்து மீன்பிடித்தல் தடைசெய்தல்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை இரா ணுவ மயமாக்கி அதன் மூலம் சிங்கள குடியேற்ற ங்களை உருவாக்கி பௌத்த விகாரைகளை அமைத்தல் தடைசெய்யப்பட வேண்டும்.

இறுதியாக யேசு பிறந்த நன்னாளில் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களுக்கு ஜனநாயக உரிமைகளையும் வழங்கி மனித உரிமைகளையும் வழங்கி உலகிலே சாந்தி சமாதானத்தோடு கூடிய நல்லாட்சி நடைபெறும் நாடு என்ற பெரு மையை உலகத்திற்கே எடுத்துக்காட்டி, தர்மம் காக்கும் ஓர் புண்ணிய பூமி என்ற நற் பெயரை உலகத்திற்கு வழங்க வேண்டும்.

ஐ.நா. சபையும் உலகநாடுகளும் இணைந்து ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சமாதானத் திற்கான நோபல் பரிசை வழங்கவேண்டு மென கேட்டு நிற்கிறோம்.

பீ.ஏ. அந்தோனி மார்க்
தலைவர், மன்னார் சமாதான அமைப்பு
செயலாளர், மன்னார் பிரஜைகள் குழு.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Latest Comments

நாட்டிற்கு மிகவும் தேவையான விடயம். இதில் பெற்ற அறிவு -"சொந்த வீட்டில திருகுதாளங்கள் செய்ய வேண்டாம்" [...]

சீன ஆசியாவின் பாதுகாவலன் , அவர்களுக்கு இத்தகைய ஆயுதம் அவசியம், ஆனால் கக்கூசு புகழ் நாடு ஆசியாவின் துரோகி, அமெரிக்காவுக்கு [...]

This news good [...]

awesome dance [...]

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

இலங்கை பத்திரிகைகள்

English News