ilakkiyainfo

ilakkiyainfo

“இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ”: பத்திரிகையை எரித்த பருத்தித்துறை இளைஞர்கள்!! (படங்கள்)

“இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ”: பத்திரிகையை எரித்த பருத்தித்துறை இளைஞர்கள்!! (படங்கள்)
January 06
19:02 2019

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படத்தை பிரசுரித்து ‘ இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ‘ என தலைப்பிடப்பட்ட நிலையில் பத்திரிகை வெளியாகி உள்ளது.

குறித்த செய்தி தலைப்புடன் தொடர்புடைய செய்தியானது இந்தியாவை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான சங்கர் என்பவரது கதையாகும். தொடர் கொலைகளை செய்த கொலையாளியின் மரண வாக்கு மூலம் என செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த செய்திக்கு இடப்பட்ட தலைப்பு , மற்றும் படம் என்பன வேண்டும் என்றே போடப்பட்டது என தெரிவித்தே பருத்தித்துறை பகுதிகளில் பத்திரிக்கையின் பிரதியை தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் தேசிய தலைவர் என்றால் வே.பிரபாகரனே ஞாபகத்திற்கு வரும் நிலையில் வேணும் என்றே தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் நோக்குடன் இச் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.

IMG_2495 “இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ”: பத்திரிகையை எரித்த பருத்தித்துறை இளைஞர்கள்!! (படங்கள்) “இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ”: பத்திரிகையை எரித்த பருத்தித்துறை இளைஞர்கள்!! (படங்கள்) IMG 2495IMG_2496 “இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ”: பத்திரிகையை எரித்த பருத்தித்துறை இளைஞர்கள்!! (படங்கள்) “இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ”: பத்திரிகையை எரித்த பருத்தித்துறை இளைஞர்கள்!! (படங்கள்) IMG 2496IMG_2497 “இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ”: பத்திரிகையை எரித்த பருத்தித்துறை இளைஞர்கள்!! (படங்கள்) “இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ”: பத்திரிகையை எரித்த பருத்தித்துறை இளைஞர்கள்!! (படங்கள்) IMG 2497

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News