ilakkiyainfo

ilakkiyainfo

இரா­ணு­வத்­தினர் அணியும் உடைக்கு ஒப்­பான உடை அணிந்து முகத்தை மூடிக்­கொண்டு வீட்­டுக்குள் புகுந்த நப­ராலும் மற்­றொ­ரு­வ­ராலும் ஆசி­ரியை மீது பாலியல் வல்­லு­றவு

இரா­ணு­வத்­தினர் அணியும் உடைக்கு ஒப்­பான உடை அணிந்து முகத்தை மூடிக்­கொண்டு வீட்­டுக்குள் புகுந்த நப­ராலும் மற்­றொ­ரு­வ­ராலும் ஆசி­ரியை மீது பாலியல் வல்­லு­றவு
October 31
06:16 2019

இரா­ணு­வத்­தினர் அணியும் உடைக்கு ஒப்­பான உடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு ஆசி­ரியை ஒரு­வரின் வீட்­டினுள் நுழைந்து இரண்டு பிள்­ளை­களின் தாயான அப்­பெண்ணை கூட்டு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய பின்னர் அங்­கி­ருந்து 2,43,000 ரூபா பெறு­ம­தி­யான உடை­மை­களைக் கொள்­ளை­யிட்டுத் தப்பிச் சென்ற இரு சந்­தேக நபர்­களைக் கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக நொச்­சி­யா­கம பொலிஸார் தெரி­வித்­தனர்.

நொச்­சி­யா­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பிர­தே­சத்தில் வசிக்கும் பெண் ஒரு­வரே இவ்­வாறு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வ­ராவார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை 46 வய­து­டைய குறித்த பெண்ணின் வீட்டில் அப்­பெண்ணின் மகன் மற்றும் உற­வினர் ஆகியோர் உறங்கிக் கொண்­டி­ருந்­த­போது வீட்டைத் திறந்து உட்­சென்ற இருவர் சத்தம் போட்டால் சுட்டுக் கொலை செய்து விடுவோம் என அங்­கி­ருந்­த­வர்­களை அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.

இதனால் அச்­ச­ம­டைந்த அவ்­வீட்­டி­லி­ருந்த மூவரும் மௌன­ம­டைந்­துள்­ள­தோடு கொள்­ளை­யர்கள் அங்­கி­ருந்­த­வர்­களில் ஒரு­வரைக் கட்­டிலில் கட்டி வைத்­து­விட்டும் அப்­பெண்ணின் மகனை மற்­றொரு அறையில் அடைத்து வைத்து விட்டும் குறித்த ஆசி­ரி­யையின் கழுத்தில் கத்­திவை வைத்து அச்­சு­றுத்தி அப்­பெண்ணை கூட்டு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

அதன் பின்னர் அந்த ஆசி­ரி­யையின் மோட்டார் சைக்­கி­ளுடன் அவர் அணிந்­தி­ருந்த ஒரு சோடி காதணி மற்றும் அங்கு தங்­கி­யி­ருந்த மற்­றொ­ருவர் அணிந்­தி­ருந்த 11, 500 ரூபா பெறு­ம­தி­யான தங்கச் சங்­கி­லி­யையும் கொள்­ளை­யிட்டுத் தப்பிச் சென்­றுள்­ளனர்.

இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு­வரும் 35 — 40 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் என்றும் அவர்­களுள் ஒருவர் இரா­ணு­வத்­தினர் அணியும் ஆடையை ஒத்த டீ சேர்ட் அணிந்­தி­ருந்­த­தா­கவும் அவர்கள் வீட்­டினுள் வரும் போது தங்கள் முகத்தை துணி­யினால் கட்டி மறைத்­தி­ருந்­த­தா­கவும் பாதிக்கப்பட்ட ஆசிரியை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய துரித விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News