ilakkiyainfo

ilakkiyainfo

இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம்

இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம்
December 08
17:54 2019

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன்  தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போது அவ்விளைஞர்கள் தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை என்று வைத்தியசாலை பணியாளர்களையும் தாதிய உத்தியோகத்தர்களையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதுடன் வைத்தியசாலை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

IMG-c2cc5ea9b9b34de91b5ab2b8d8702660-V இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம் இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம் IMG c2cc5ea9b9b34de91b5ab2b8d8702660 V e1575827590236அதுமட்டுமின்றி அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து நையப்பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இருந்த போதும் ஒருவர் கைவிலங்கோடு பொலிஸாரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

IMG-711a16c698f2c8104c3f66983227d060-V இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம் இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம் IMG 711a16c698f2c8104c3f66983227d060 V e1575827664620எனினும் இளைஞர்கள் மீண்டும் குறித்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News