அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில், கட்டியணைத்தவாறே இளம்காதல் ஜோடி படுக்கையில் இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவரும் அதிகமான அளவு ஊக்கமருந்து உட்கொண்டிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்து கிடந்த மிச்செல்லா ஆவிலாவின் (23) பெற்றோர் பாலோ மற்றும் அட்ரியானா கூறுகையில், எங்களுடைய மகளும், அவளுடைய காதலனும் அதிகமாக மதுபானம் அருந்த மாட்டார்கள். ஊக்க மருந்து சாப்பிட்டதால் தான் இறந்திருக்கின்றனர்.

 

மிச்செல்லா பள்ளி பருவத்தில் செய்த சாதனைகளுக்காக அவளுக்கு ஜார்ச் புஸ் ஒருமுறை கடிதம் அனுப்பினார்.

நல்ல கெட்டிக்கார பெண். அவளுடைய அக்காவை போல ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என ஆசைப்பட்டாள். நிறைய புத்தகங்கள் படிப்பததோடு, நிறைய எழுதும் பழக்கமும் அவளுக்கு உண்டு.

கடந்த சில ஆண்டுகளாக மிச்செல்லா, அவளுடைய காதலன் கிறிஸ்டியன் கென்ட் (20) உடன் சேர்ந்து பாலி, இந்தோனேசியா, கோஸ்டா ரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பயணம் செய்து சுற்றிப்பார்த்தார்.

சம்பவம் நடைபெற்றதற்கு முன்தினம் இருவரும் ஒரு பார்ட்டிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு வீடு திரும்பினார். மறுநாள் காலையில் அலுவலக வேலைக்கு செல்ல வேண்டும் என நான் எழுப்ப சென்றேன்.

அப்போது ரோமியோ – ஜூலியட் போல இருவரும் கட்டியணைத்தபடி இறந்துகிடந்தனர் என தெரிவித்துள்ளார்.

6708816-6433969-image-m-52_1543339460178  இறுதி தருணத்திலும் ரோமியோ - ஜூலியட் போல கட்டியணைத்தபடியே இறந்துகிடந்த காதல் ஜோடி: அதிரவைத்த மரணத்தின் பின்னணி 6708816 6433969 image m 52 1543339460178

6703674-6433969-image-a-24_1543331521701  இறுதி தருணத்திலும் ரோமியோ - ஜூலியட் போல கட்டியணைத்தபடியே இறந்துகிடந்த காதல் ஜோடி: அதிரவைத்த மரணத்தின் பின்னணி 6703674 6433969 image a 24 1543331521701

6703676-6433969-image-a-21_1543331508961  இறுதி தருணத்திலும் ரோமியோ - ஜூலியட் போல கட்டியணைத்தபடியே இறந்துகிடந்த காதல் ஜோடி: அதிரவைத்த மரணத்தின் பின்னணி 6703676 6433969 image a 21 1543331508961